Published:Updated:

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு உயிர் வருமா? - ரூ.73,787 கோடி ஒதுக்க அரசு திட்டம் 

லிந்துகிடக்கும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு உயிர் கொடுக்க, ரூ.73,787 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு உயிர் வருமா? - ரூ.73,787 கோடி ஒதுக்க அரசு திட்டம் 

கடந்த நிதியாண்டில், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.13,804 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது. அதிக நஷ்டத்தைச் சந்தித்த அரசு நிறுவனங்களில் பிஎஸ்என்எல் முதலிடத்திலும் ஏர் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. மூன்றாவது இடத்தில் எம்டிஎன்எல் உள்ளது. கடந்த நிதியாண்டில், எம்டிஎன்எல் நிறுவனத்துக்கு ரூ.3,398 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு உயிர் கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, 73,787 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ரூ.20,410  கோடி மதிப்புள்ள 4 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை ஒதுக்க அரசு முடிவுசெய்துள்ளது. ஓய்வூதிய வயதைக் குறைப்பதன்மூலம் ரூ.10,933 கோடி மிச்சம்பிடிக்கவும் ரூ.29,182 கோடி மதிப்பீட்டில் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, விருப்ப ஓய்வு பெற முன்வருபவர்களுக்கு, 5 சதவிகிதம் இழப்புத் தொகை அதிகரித்துத் தர உள்ளது. நவீன மெஷின்கள் வாங்கவும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ரூ.13,202 கோடி ஒதுக்கப்படுகிறது. 

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு உயிர் வருமா? - ரூ.73,787 கோடி ஒதுக்க அரசு திட்டம் 

பிஎஸ்என்எல் நிறுவனம் ஈட்டும் லாபத்தில் பெரும்பகுதி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே போதுமானதாக உள்ளது. கடந்த நிதியாண்டில், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.18,865  கோடி லாபம் ஈட்டியது. சம்பளமாக 77 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது. எம்டிஎன்எல் நிறுவனத்திலும் இதே நிலைதான் காணப்படுகிறது. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு