Published:Updated:

பவர்ஃபுல் பாஸ்போர்ட்! சிங்கப்பூர், ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு 86-வது இடம்

பவர்ஃபுல் பாஸ்போர்ட்! சிங்கப்பூர், ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு 86-வது இடம்
News
பவர்ஃபுல் பாஸ்போர்ட்! சிங்கப்பூர், ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு 86-வது இடம்

பவர்ஃபுல் பாஸ்போர்ட்! சிங்கப்பூர், ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு 86-வது இடம்

லகின் பவர்ஃபுல் பாஸ்போர்ட் கொண்ட நாடுகள் பட்டியல் (Henley Passport Index 2019) வெளியிடப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளான ஜப்பானும் சிங்கப்பூரும் பட்டியலில் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகில் 189 நாடுகளுக்கு விசா இல்லாமலோ அல்லது விமான நிலையத்தில் இறங்கிய பிறகோ விசா பெற்றுக்கொள்ளலாம்.  

பவர்ஃபுல் பாஸ்போர்ட்! சிங்கப்பூர், ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு 86-வது இடம்

தென்கொரியா, பின்லாந்து, ஜெர்மனி நாடுகள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. 187 நாடுகளுக்கு இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் பயணிக்கலாம். டென்மார்க், இத்தாலி, லக்ஸம்பர்க் நாடுகளுக்கு மூன்றாம் இடம். பிரான்ஸ், ஸ்வீடன், ஸ்பெயின் நாடுகள் 4வது இடத்தில் உள்ளன. ஆஸ்திரியா, போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு 5வது இடம். அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், கனடா, கிரீஸ், கனடா, நார்வே, அயர்லாந்து நாடுகள் 6வது இடத்தில் உள்ளன. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 79வது இடத்தில் இருந்த இந்தியா 7 இடங்கள் பின்தங்கி 86வது இடத்தில் உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பவர்ஃபுல் பாஸ்போர்ட்! சிங்கப்பூர், ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு 86-வது இடம்

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 58 நாடுகளுக்கு விசா இல்லாமலோ அல்லது அங்கே சென்ற பின்னரோ விசா பெற்றுக்கொள்ள முடியும். அமீரகம் இந்தப் பட்டியலில் முதன்முறையாக 20 இடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலில் கடைசி இடங்களில் அதாவது 105வது இடத்தில் சோமாலியா, 106 வது இடத்தில் பாகிஸ்தான், 107வது இடத்தில் சிரியா, 108வது இடத்தில் இராக், மற்றும்109வது இடத்தில் ஆப்கானிஸ்தானும் உள்ளன. ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருந்தால் 25 நாடுகளுக்கு மட்டுமே முன்னரே விசா எடுக்காமல் செல்ல முடியும். 

பெரும்பாலும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடுகள்தான் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன. பாகிஸ்தான் மீதும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பதாக குற்றச்சாட்டு உண்டு.