(இந்த அத்தியாயத்தை வீர சைவர்கள் வாசிப்பது உகந்தது அல்ல.)

நடு ராத்திரி.

சிறுமலைக் காட்டுக்குள்ள எங்கெங்க சந்துபொந்து இருக்கோ, அங்கங்க விழுந்து கைகால் உடையாமக்கெடக்கு நிலா வெளிச்சம். சீக்குல விழுந்த சீவாத்திகளும் ஆண் சேட்டை பொறுக்காம அனத்துற பொட்டைகளும் போடற சத்தத்தைத் தவிர, காட்டுக்குள்ள வேற கசமுசா இல்ல. 'ரம்...ரம்...பம்...பம்...’ காட்டெருமை மாதிரி இருக்கிற நாட்டு மனுசங்க நாலு பேரு மரம் அறுக்கிற சத்தம் மட்டும் விட்டு விட்டுக் கேட்டுக்கிட்டுஇருக்கு.

மொட்டைப் பாறை மேல சுட்ட உடும்புக் கறியக் 'கதக் கதக்’குன்னு கடிச்சுத் தின்னுக்கிட்டே சீமைச் சாராயம் குடிச்சுக் கிட்டிருந்த முத்துமணி, சுழியனுக்கு வாங்கிக் கொடுத்து அவன் தலமாட்டுல சுட்டுக்கிட்டு வந்த ரேடியோவுல பாட்டு கேட்டுக்கிட்டுருக்கான். பாட்டுக்கு மத்தியில் விளம்பரம் போட்டதுபோக, விளம்பரத்துக்கு மத்தியிலதான் பாட்டுப் போடறாங்க இப்பவெல்லாம் ரேடியாக்காரங்க.

புது மருமகன்களுக்கு மாமியாக்காரிங்க பொய்யா ஒரு பணிவு காட்டுவாளுங்க பாருங்க... அந்தக் குரல்ல ரேடியோவுல பேசறா ஒரு பொம்பள.

''வன வளம் காப்போம்

வாழ்க்கையை மீட்போம்!

உலகம் வாழத் தேவையான உயிர்க் காற்றைப் பெறவும், உயிர்ச்சூழலின் சமன்பாட்டை ஒழுங்கு செய்யவும், பல்லுயிர்ப் பெருக்கத்தின் பயன்பாடு பேணவும், நாம் வனப் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். உலக நிலப் பரப்பில் முப்பத்து மூன்று விழுக்காடு பச்சை உடுத்திய வனக் காடாக மாற வேண்டும். இது ஐ.நா. சபையின் வனக் கோட்பாடு.

வன வளம் காப்போம்

வாழ்க்கையை மீட்போம்''

- அறிவிப்புச் சொன்னாளே அவள அடிக்கிற வேகத்துல அடிச்சான் ரேடியோவ.

''அடியே ஆத்தா ரேடியோக்காரி... ஐ.நா. சபை பேச்சைக் கேட்டா, எங்க அடுப்பு என்னைக்கு எரியறது? சுக்கா வறுவலுக்கும் சோடா கலக்காத சாராயத் துக்கும் உங்க ஐ.நா. மாமனா வந்து படியளக்கப்போறான்? உங்க வேலய நீங்க பாருங்கடி; எங்க வேலய நாங்க பாக்குறோம்.''

பாறையவிட்டு மளார்னு தவ்வி, மரம் அறுத்த சக்கைய மோந்து பாத்தான்.

''வாசனை சொல்லுதய்யா வயச. எழுபதுல இருந்து எழுபத்தஞ்சு இருக்கும் மரத்தோட வயசு.''

''சார்... எங்களச் சாப்பிடவிடுங்க சார். அப்பறம் அறுக்கிறோம்.''

''ஏய்... சாப்பாடா முக்கியம்? முன் நிலா விழுகிறதுக்குள்ள மரம் மலையவிட்டு எறங்கியாகணும்டா. அறுத்த மரம் எறங்காம உங்களுக்குச் சரக்கும் கெடையாது; சாப்பாடும் கெடையாது.''

சந்தனம், தேக்கு, தோதகத்தி, கருநொச்சி, குமிழ் மரம், மஞ்சக்கடம்பு, சந்தனவேம்பு, பலாமரம், கருங்காலி, குங்கிலியம் வகைக்கொரு மரமா வந்து வாய்ச்சிருச்சு அன்னைக்கு. ரெண்டு யானைக சேந்தாத்தான் தூக்க முடியும் ஒரு மரத்த. மனுசங்க கூடி என்ன செய்ய முடியும்? பாதையில இருந்து ஒரு பள்ளம் பறிச்சு 'ரிவர்ஸ்’ எடுத்து மேட்டோரம் நிறுத்துனான் லாரிய. மரத்துக்கிட்டக் கொண்டாந்து லாரியச் சேத்தான். இப்பப் பள்ளத்துல லாரி; மேட்டுல மரம். ஊடுகட்டை கொடுத்துக் கடப்பாரையவச்சு ஒரு சைஸா நகட்டு நகட்டி, எல்லாரும் கூடி தம் பிடிச்சுத் தள்ளவும் பொந்துல போய் விழுந்த பந்துக மாதிரி 'பொளக் பொளக்’குன்னு லாரியில போய் விழுந்துபோச்சுக மரங்க.

'ஏலே லாரிக்காரா! நீ உன் லுங்கியத் துவைக்கவே மாட்டியாக்கும்? வப்பாட்டி வாசனை போயிருமாக்கும்? குறுக்குச் செத்தவனே... இங்க வாடா.''

லுங்கிய எடது கால்ல எத்தி ஏத்திக் கட்டிக்கிட்டு ஓடியாந்தான் லாரிக்காரன். அவன் காதுக்குள்ள சொன்னான் முத்துமணி:

''செக்போஸ்ட்டுல கேப்பாங்க... 'அன்னக்கிளி’ன்னு சொல்லு. இது அவனுக்கும் எனக்கும் தவிர வேற எவனுக்கும் தெரியாது. மாத்திக்கீத்திச் சொன்ன... அப்பறம் உன் மண்டைய மாத்தி வச்சிருவேன்.''

பெருஞ்சத்தம் போட்டுப் பொறப்பட்டுச்சு லாரி. மரம் அறுத்தவங்களுக்கு எல்லாம் தண்ணியும் பிரியாணியும் தலைக்கு ஆயிரமும்.

''ஆயிரம்தானா? அஞ்சு பத்து சேத்துக் குடுத்தாக் கொறஞ்சா போயிருவீங்க?''

''ஏண்டா நான் எத்தனை பேருக்கு எழவு கொட்டறது? ஃபாரஸ்ட் ஆபீசரு, ரேஞ்சரு, கார்டு, பஞ்சாயத்துத் தலைவரு, நாட்டாமை, செக்போஸ்ட்டு, லாரிக்காரன் இத்தனை பேரையும் தன்னக்கட்டித்தானப்பா தொழில் செய்ய வேண்டியிருக்கு. பங்கு கொடுக்காமப் பாவம் பண்ண முடியுதா? தனியா எவனாச்சும் தப்புப் பண்ண முடியுதா? தேவடியாளோட படுக்கிறதத் தவிர, தனியா ஒரு தப்பும் பண்ண முடியலையேப்பா இந்த நாட்டுல.''

வேண்டா வெறுப்பா எடுத்துக்கொடுத்தான் அப்பறம் ஆளுக்கு ஒரு அம்பது.

மறுநாள் மத்தியானம் கொளுத்தற வெயில்ல 'அய்யய்யோ அய்ய்யோ’ன்னு அலறுது முத்துமணி செல்போனு.

''யண்ணே... நேத்து மரம் கடத்துன செய்தியக் காத்துல எவனோ கசியவிட்டுட்டாண்ணே. மேலதிகாரிக வாராகளாம் மேமலையச் சோதிக்க. உஷாருண்ணே உஷாரு.''

செக்போஸ்ட்லேர்ந்து அலறுது 'அன்னக்கிளி’.

''வாராகளா? வரட்டும் மாப்பிள்ளைக.''

ஓடுனான் காட்டுக்குள்ள முத்துமணி. பளிங்கன் பயக அஞ்சாறு பேரைக் கூப்பிட்டுக் காட்டுலகிடந்த மூங்கில் சோகை, சருகு செத்தையெல்லாம் ஒண்ணுவிடாம அரிங்கடான்னு ஆளுக்கு நூறு ரூவா கொடுத்தான். செத்தவிடத்துல சேந்துப்போச்சு செத்தையெல்லாம். மரம் வெட்டுன அடித்தூருகள்ல செத்தையப் போட்டு மூடிக் கையில இருக்கிற சாராய பாட்டிலுகள ஒண்ணு விடாம ஒடைச்சு ஊத்தி, நாலு மூலையிலும் நின்னு வளைச்சு வளைச்சு வச்சான் தீய. அஞ்சாறு மணி நேரத்துல மரம் வெட்டுன தடம் தெரியாம எரிஞ்சு கனிஞ்சு அணைஞ்சு தணிஞ்சேபோச்சு தீயி.

''வீடு எரிஞ்சிருந்தாக்கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன் சார்! காடு எரிஞ்சு போச்சே! அழுகையா வருது.''

பொறுப்புள்ள வனத் துறை வாட்ச்சரா நின்னு இயற்கைப் பேரழிவு ஏன் ஏற்படுது... எப்படித் தடுக்கறதுன்னு விலாவாரியா விளக்கி, ஆளுக்கு ஒரு தேன் பாட்டில் கொடுத்து அனுப்பிவச்சிட்டான் அதிகாரிகள.

கனல் அடங்க, கரி வியாபாரம் ஆரம்பிச்சுட்டான். விளைஞ்ச மரத்துக் கரிங்க பாருங்க... கறுப்புத் தங்கம் மாதிரி கெடக்குது காட்டுக்குள்ள. கரிக்கு ஒரு சந்தையக் கண்டுபுடிச்சு வச்சிருந்தான் முத்துமணி.

இஸ்திரி போடறவனுக்குக் கரி வேணும்; ரோட்டுக் கடை பரோட்டா போடறவனுக்குக் கரி வேணும்; கரி அடுப்பு மாதிரி 'டேஸ்ட்டு’ வராது கடலை முட்டாயிக்கு; அதுக்கும் கரி வேணும். கோழிப் பண்ணைகள்ல ராத்திரியில பாம்பு வராம இருக்கக் கனல்மூட்டம் போடக் கரி வேணும்.

மொத்த ஏவாரியக் கூப்பிட்டான். இந்தா இந்தான்னு பேசி இருவத் தய்யாயிர ரூவாய்க்கு வித்துப்புட்டான்.

காசக் கரியாக்குறவனத்தான பாத்திருக்கீக... கரியக் காசாக்கிப் புட்டான் முத்துமணி.

கரியக் காசாக்கத் தெரிஞ்சவனுக்குக், கறியக் காசாக்கத் தெரியாதா? அதையும் செய்யறான் முத்துமணி. பன்னி, முயலு, காடை, கௌதாரி, உடும்பு, கிடை ஆடு, கெடச்சா சில்லரை ஏவாரிகளுக்கு வித்திருவான். கருமந்தியும் வரையாடும் சிக்கினா மட்டும், தன் கட்டுப்பாட்டுல வச்சுக்கிருவான். அதுக ரெண்டும் மருந்துச் சாமானுக; நாட்டு வைத்தியத்துல பேரு போன கழுதைக.

கருமந்திக் கொடல் இருக்கே... காச நோயிக்கும் ஆஸ்துமாவுக்கும் கைகண்ட மருந்தாம். கருமந்தியக் கொன்னு கொடல் எடுத்து, அந்தக் கொடல்ல இருக்கிற சாணத்த ஒண்ணுவிடாம உருவி, அதப் புழிஞ்சு சாறெடுத்து, கொடல் சூட்டுப் பதத்துலயே குடிச்சுட்டா, அது அத்து எறிஞ்சிருமாம் ஆஸ்துமாவ. 'இனி இந்தப் பக்கம் தலைவச்சே படுக்க மாட்டேன்’னு தலைதெறிக்க ஓடிருமாம் காச நோயி.

கருமந்திக் கறிய மட்டும் பாடம் பண்ணி உப்புக்கண்டம் போட்டு வச்சுக்கிடலாம். அருவகமான பொருள்னு ஆசைப்பட்டு வர்ற ஆளுகளுக்கு ஒரு கிலோ ஆயிர ரூவான்னு வித்துப்புடலாம்.

வரையாட்டங் கறிக்கு ஒரு விசேஷம் இருக்கு. பிள்ளை பெத்தும் பால் வராத பொம்பளைக இருப்பாக நாட்டுல. எவ்வளவு பூண்டு தின்னு பார்த்தாலும் முலைக்காம்புல ஒரு சொட்டு முட்டாது. அந்தப் பொம்பளைக வரையாட்டங் கறியில அஞ்சாறு துண்டு தின்டாப் போதுமாம். சும்மா தலையீத்துக் காராம் பசு மாதிரி பீச்சிப்புடுமாம் பீச்சி. இதுவரைக்கும் நம்பிக்கையத்தான உலகம் வித்துக் காசு பண்ணியிருக்கு. முத்துமணி சொல்றதுதான் வெல. ஆனா, அவன் காசு சேத்துவைக்கிற எடம் அவனுக்கும் கடவு ளுக்கும் மட்டும்தான் தெரியும். கடவுள் பாவம் பல சோலிக்காரரு; மறந்திருவாரு; இவன் மறக்கறதில்ல.

பக்கவாதத்துக்கு மருந்து கெடையாது இங்கிலீசு வைத்தியத்துல. கைகால் விழுந்தா விழுந்ததுதான்; படுத்தாப் படுத்ததுதான். நரம்பு கோணிப் போனா நம்ம என்ன பண்றதுன்னு சித்தரே எழுதிவச்சிருக்காராம் ஏட்டுல. கைகால் விழுந்துபோன ஆளுகளுக்குச் சுண்டுவிரல் மட்டும் அசைச்சுக் கொடுங்க சொத்தை எழுதித் தாரேன்னு சொன்னாலும் ஒரு மருந்தும் கெடையாது ஊர்ல. அந்தப் பக்கவாதத்துக்கு ஒரு தைலம் கண்டுபுடிச்சுப் பழகிட்டான் முத்துமணி. அதுக்குப் பேரு பச்சோந்தித் தைலம்.

காட்டுவாசிகளுக்குச் சாராயம் வாங்கிக் கொடுத்து, அகப்பட்ட பச்சோந்திகளைஎல்லாம் புடிச்சுட்டு வாங்கடான்னு ஏவி விடுவான். ஒரு பத்துப் பச்சோந்திக சேந்ததும் ஆரம்பிச்சிரும் அவன் 'தைல புராணம்’.

ஒரு எண்ணெய்க் கொப்பரையத் தூக்கி அடுப்புல வப்பான். நல்லெண்ணெய், வேப்பெண்ணெய், புங்க எண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய் வகைக்கு ரெண்டு லிட்டர் மேனிக்கு ஐவகை எண்ணெயிலையும் பத்து லிட்டர் கொட்டி, கொதிக்கவிடுவான். பச்சோந்திகளக் கழுத்தைத் திருகி 'கடக் மடக்’குன்னு ஒடிச்சு வீசுவான் கொப்பரையில. எருக்கிலை, நிலவாகை, கொழிஞ்சி, பெருந்தும்பை, சிறுதும்பை எல்லா மூலிகைகளையும் ஒண்ணொண்ணாப் போட்டுக் கிண்டிவிடுவான். அது கருவேலங்கோந்து மாதிரி பிசின் கட்டி ஒரு மைப்பதம் வரவும் எறக்கி ஆறவப்பான்.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரிஸ்ஸா இங்கிட்டுருந்தெல்லாம் வரிசையில வந்து நிப்பாக ஆளுக வாங்கிட்டுப் போறதுக்கு.

பச்சோந்தி வேணும்னா நெறம் மாறும். முத்துமணி மாற மாட்டான். ஒரே நெறம் தான். பச்சை நோட்டு நெறம்.

''சீவராசிகள இப்படிக் கொலை பண்றியே முத்துமணி, இது நாட்டுக்கு நல்லதா?’ன்னு கேட்டுப்புட்டான் மனச்சாட்சி உள்ள மரம் வெட்டறவன் ஒருத்தன். நாகப்பாம்பு மாதிரி சீறிட்டான் முத்துமணி.

''ஏண்டா... எவனப் பாத்து என்னா கேக்கிற? வெள்ளைக்காரன் ஆண்ட காலத்துல ஒரு லட்சம் மானு, எம்பதாயிரம் புலி, ரெண்டு லட்சம் ஓநாயி, ஒன்றரை லட்சம் சிறுத்தையை வேட்டையாடித் தின்னு கொழுத்துத் தோலெடுத்துப் போனான் தூர தேசத்துக்கு. முதல் உலக யுத்தத்துக்குக் கப்பல் கட்டவும், குளிர் நாட்டுக்கு மரப்பலகையில வீடு கட்டவும், மரங்கள வெட்டி மலைகளைஎல்லாம் மொட்டையடிச்சு மூளியாக்கிட்டுப்போனான் வெள்ளைக்காரன். வெளிநாட்டுக்காரன் வேட்டையாடுனா நியாயம் - உள் நாட்டுக்காரன் செஞ்சா மட்டும் அநியாயமாடா? போங்கடா ஒங்க வீண் பேச்சும் வெட்டி நியாயமும்.''

வர்ற வெள்ளிக்கிழமையில இருந்து சைவம் ஆயிருன்னா வரிப்புலி கேக்குமா? முத்துமணி கேக்கல.

குறுக்குவழியில பணம் சேக்கிறவனுக்கு என்னைக்குமே திருப்தி வராது. நூறு ரூவாயக் களவாண்டவன் அடுத்து ஆயிரத்த நோங்குறான். லட்சம் கோடிய நோங்குது. கோடி பல கோடிய நோங்குது. ஆயிரமாயிரமாச் சம்பாதிச்ச முத்துமணி, இப்ப லட்சத்துக்கு அடி போடுறான். கஞ்சா வளக்க ஆரம்பிச்சுட்டான் காட்டுக்குள்ள.

தாயோட இடுப்புதான் வளரும் பிள்ளைக்கு வசதிங்கிற மாதிரி, சம தளத்தவிட மலைச்சரிவுதான் வசதி கஞ்சாச் செடிக்கு. கைந் நிறையக் காசும் குடுக்காம, காயவும் போடாமப் பொறுப்பா வளப்போம் பாருங்க போக்கிரிப் பிள்ளைகள... அப்படி வளக்கணும் கஞ்சாச் செடிய. தண்ணி ஊத்தணும்; ஆனா தங்கவிடக் கூடாது தூருல. பத்து மாசம் பாதுகாக்கணும் அந்தச் செல்லச் செடிய. ஆனா, மலைவாசிககிட்டயிருந்தும் ஆடு மாடு மேய்க்கிற பயககிட்ட இருந்தும் அதக் காப்பாத்தறது கடுசு. புடுங்கித் தின்னுப்புடுவானுங்க. இல்ல... அறுத்து வித்துப்புடுவானுங்க. இந்தப் பயபுள்ளைகளப் பயமுறுத்தாம இத வளக்க முடியாதுன்னு முடிவெடுத்தான் முத்துமணி. அந்தக் கிறுக்குப் பய குறுக்குப் புத்திக்கு ஒரு யோசன தோணுச்சு.

தற்கொலைப் பள்ளத்துல கயிறு கட்டி ஒரு ஆதிவாசிய எறக்குனான். அஞ்சாறு எலும்புக் கூடுக, கபாலங்களோடு ஆதிவாசி மேல வந்தான். கஞ்சா வளக்கிற மலைச்சரிவைச் சுத்தி எலும்புக் கூடுகள விதைக்கச் சொன்னான் ஏக தேசத்துக்கு.

''ஏய்... அங்க பேய் பிசாசு இருக்குடா. அந்தப் பக்கம் போனீக... சதையச் சப்பிட்டு எலும்பத் துப்பிட் டுப் போயிரும் பேயி. உசுரைக் கையில புடிச்சு ஓடிப்போயிருங்கடா''- முத்துமணி கொளுத்தி எறிஞ்ச வதந்தீ காடு பூராப் பத்திப் பரவிருச்சு. சிங்கம் மூத்திரம் பேஞ்ச எல்லைக்குள்ள இன்னொரு சிங்கம் வராதாம். அப்படி எலும்புக்கூட்டு எல்லைக்குள்ள எவனும் வல்ல. எலும்புக்கூடு காவல் காக்க... எக்கச்சக்கமா விளஞ்சுபோச்சு கஞ்சா.

உள்ளூரு சந்தை அலுத்துப்போச்சு முத்துமணிக்கு. உலகச் சந்தையப் புடிச்சான். காட்டு மாட்டுக் கறிய ஏற்றுமதி பண்ண ஆரம்பிச்சான்.

உயரமான மரங்கள்ல அங்கங்க பரண் கட்டிக்கிட்டான். மந்தை மந்தையா மேய வரும் காட்டு மாடுக. பரண்ல உக்காந்து குறிவச்சுக்கிட்டேயிருப்பான். மேயற மாடுக தலைய ஆட்டிக்கிட்டே மேயுங்க. சாணம் போடுற மாடுகதான் தலையத் தூக்கிப் பாக்குங்க; தலைய ஆட்டாதுங்க. எந்த மாடு சாணம் போட வாலத் தூக்கி நேராப் பாத்து நிக்கிதோ, அந்த மாட்ட நெத்தியில சுடுவான். ஒரே தோட்டாவுல பொட்டுன்னு விழுந்து பக்குன்னு உசுரு போயிரும் மாட்டுக்கு.

ரெண்டு மூணு சங்கதி இருக்கு நெத்தி யில சுடுறதுல. ஒரு மாட்டுக்கு ஒரே தோட்டாதான்; ரெண்டு மூணு செலவு பண்ணுனாத் தோட்டாவுக்கு நட்டம். ஒரே தோட்டாவுல உசுரு போகணும்னா, நெத்தியத் தவிர வேற போக்கிடம் இல்ல. வயித்துல சுட்டம்னு வச்சுக்குங்க ஓட்டை விழுந்துபோகும் தோலு. அப்புறம் ஒரு பயலும் வாங்க மாட்டான் ஓட்டைத் தோல. அதனாலதான் காட்டு மாட்ட நெத்தியில சுட்டுப் பழகிட்டான். தோள்லகிடந்த வில்ல எறிஞ்சிட்டுத் துப்பாக்கித் தூக்குன அர்ச்சுனன் மாதிரி ஆகிப் போனான் முத்துமணி.

காட்டு மாடு சுடறது லேசு. அந்தக் கறியப் பக்குவம் பண்ணி அனுப்பறது பெருசு. காட்டு மாட்டை உரிச்சு அல்வா மாதிரி கறியத் துண்டுத் துண்டா வெட்டி உப்பு, நல்லெண்ணெய்,

மஞ்சள் மூணும் - பதமாத் தடவி, இளம் வெயில்ல சுடவச்சு, டின் டின்னா அடைச்சான். ஒரு பெரும் பொட்டியில போட்டு ஐஸ் கட்டிய வச்சு அடை கொடுத்தான். கேட்ட காசு கொடுப்பான் கேரளா ஏவாரி. புதினாத் தழையும் கறிவேப்பிலையும் போட்டுப் பொட்டிய மூடிட்டாக் காத்துக்கூடக் கண்டுபிடிக்க முடியாது கறிவாசனைய.

கேரளத்து ஆளுக பாவம்! அவுக புண்ணியம் பண்ணுனது அடிமாட்டுக் கறிக்கு மட்டும்தான். இந்தக் காட்டு மாட்டுக் கறி கேரளா வழியா துபாய் போகுது. அங்கயிருந்து பக்கிங்காம் அரண்மனைக்குள்ள போனாலும் போயிரும்.

ஆடி ஆவணியில சிறுவாணியில மழை; ஐப்பசி கார்த்திகையில சிறுமலையில மழை; முத்துமணி காட்டுல மட்டும்தானய்யா வருசமெல்லாம் மழை; நல்ல மழை இல்ல; கள்ள மழை.

தேவைக்குன்னு ஆரம்பிக்கிற சம்பாத்தியம், ஆசைக்கு இழுத்துட்டுப் போகுது. ஆசை, பேராசையில முடியுது. பேராசை, மன வியாதியில கொண்டு போய்விட்டுறது மனுசன. பணம் மன வியாதியாகிப்போச்சு முத்துமணிக்கு.

மலையில மானக் கொன்னு தின்ன புலி, சமவெளிக்கு இறங்கிவந்து குளத்துல தண்ணி குடிக்கும் பாருங்க... அப்படி மலைய வித்து ருசி கண்ட பய, சொந்த ஊருல குளத்தையும் விக்க ஆரம்பிச்சிட்டான் கூறுபோட்டு. அதுக்கு அவன் செஞ்ச சூழ்ச்சி இருக்கே... சாணக்கியன்கூடக் கைத்தாங்கலா வந்து அவன் காலடியில ஒக்காந்து ஆனா ஆவன்னா கத்துக்கிட்டுப் போகணும்.

- மூளும்...