Published:Updated:

சிங்கம் சிலிர்த்து நிற்கும் தீர்த்த ம்லை!

சிங்கம் சிலிர்த்து நிற்கும் தீர்த்த ம்லை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிங்கம் சிலிர்த்து நிற்கும் தீர்த்த ம்லை!

ணேசன் - எழுத்தாளர், 'வானம்பாடி’ இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த கவிஞர், இலக்கியப் பேச்சாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர். தன் சொந்த ஊரான தீர்த்த மலையைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

சிங்கம் சிலிர்த்து நிற்கும் தீர்த்த ம்லை!
##~##

''தீர்த்த மலை, அருணகிரிநாதரால் பாடப் பெற்ற திருத்தலம். மலையை மேற்கில் இருந்து பார்த்தால், சிங்கம் சிலிர்த்து நிற்பது போலவும் வடகிழக்கில் இருந்து பார்த்தால், ஒரு பசு தன் கன்றுடன் படுத்து இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும். தீர்த்த மலைக் காடுகள், லிங்க வடிவம் போலக் காட்சி அளிக்கும்.

ஆன்மிகரீதியாகத் தீர்த்த மலைக்குப் பல பெருமைகள் உள்ளன. ராவணனைக் கொன்ற பிறகு இந்த மலையின் சுனையில் வந்து தீர்த்தத்தைக் குடித்த பிறகே, ராமனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாக ஒரு கதையும் உண்டு.  

சிங்கம் சிலிர்த்து நிற்கும் தீர்த்த ம்லை!

எங்கள் வீட்டின் கடைக் குட்டி நான். எட்டாவது குழந்தை. என் தந்தை கொத்தனார் வேலை செய்தார். எங்கள் ஊர் கடும் வறட்சிப் பகுதி. தினமும் என் தந்தை ஐந்து ரூபாய் சம்பாதித்தால்தான் மொத்த குடும்பத்துக்கே உணவு. இப்படி பசியோடு கழிந்த என் இளம் பருவத்தை என்றும் மறக்க முடியாது. எங்கள் ஊரில் நடக்கும் மாசிப் பெருவிழாவில் ஆன்மிகமும் அறிவும் சேர்ந்து மணக்கும். இந்த மாசிப் பெரு விழாவுக்குக் குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார், புலவர் கீரன் போன்ற ஆன்மிகப் பெரியவர்கள் எல்லாம் வந்து சொற்பொழிவு ஆற்ற ஆற்றுவார்கள்.

இவர்களைப் போன்ற சான்றோர்களின் உரையைக் கேட்டபோதுதான் எனக்கும் இதுபோன்று பேச வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. நான் பள்ளியில் படிக்கும்போது என்னுடைய ஆசிரியர் ராஜமாணிக்கம் மற்றும் சாமிநாதன் ஆகியோர் நாடகம் நடத்துவார்கள். அதில் எனக்கு திருப்பூர் குமரன் வேடம் கிடைக்கும். நாடகத்தில் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழை நன்கு பயின்றேன். அப்போதுதான் எனக்குத் தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்தது. என்னுடைய சித்தப்பா நடத்திய டீ கடைக்கு நாத்திகம், முரசொலி, ஜனசக்தி, குடியரசு ஆகிய நாளிதழ்கள் வரும். அதில் வரும் செய்திகளை எடுத்துக்கொண்டுபோய், பள்ளியில் இறைவணக்கம் பாடி முடித்தவுடன் செய்தி வாசிப்பேன்.

சிங்கம் சிலிர்த்து நிற்கும் தீர்த்த ம்லை!

பள்ளி இடைவேளையின்போது அருகே உள்ள அல்லிசுனை நீர் ஊற்றில் நண்பர்களுடன் சென்று விளையாடுவோம். எங்கள் ஊரின் மற்றும் ஒரு சிறப்பம்சம், தீர்த்த மலை அருவி. அந்த அருவியின் தண்ணீர் எங்கு இருந்து வருகிறது என்பதை இன்றும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆங்கிலேயர்கள் முயன்று பார்த்தும் தோல்வியே மிஞ்சியது. அந்த அருவியின் அருகேதான் நான் ஆடு மேய்க்கச்செல் வேன். அந்த மலையில் பல சித்தர்கள் வாழ்ந்ததாகக் கூறுவார்கள். திடீரென்று இரண்டு அடி குள்ள மான உருவத்தில் சித்தர்களைப் பார்த்ததாகஊருக் குள் பேச்சு கிளம்பும்.

திருமலைநாயக்கர் காலத்தில் போர் நடந்தபோது, தீர்த்த மலையில்தான் அவருடைய போர் வீரர் கள் முகாமிட்டு இருந்தார்கள். இதுதான் அவர் ஆளுகைக்கு உட்பட்ட ராஜ்ஜியத்தின் எல்லைப் பகுதி. எதிரி நாட்டு வீரர்கள் மலையில் ஏற முயற்சித்தால் கல்லை உருட்டிவிடுவார்கள். அங்கு வீரர்கள் தங்குவதற்குச் சிறு கட்டடங்களும், குடிநீருக்காகக் கிணறும் உருவாக்கினார்கள். அவற்றின் சுவடுகளை இன்றும் காண லாம். வன்னியர் மடம், அகமுடையர் மடம், நாயக் கர் மடம் என ஊரைச் சுற்றி 20-க்கும் மேற்பட்ட மடங்கள் உள்ளன. ஆனால், இங்கு என்றுமே சாதிச் சண்டை வந்தது இல்லை.

நானும் என் பால்ய நண்பர்களும் விளையாடி ரசித்த இயற்கை வளங்கள் நிறைந்த தீர்த்த மலைக் காடுகள், இன்றும் கறைபடியாமல் இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம்!''

சிங்கம் சிலிர்த்து நிற்கும் தீர்த்த ம்லை!

சந்திப்பு: ம.சபரி
படங்கள்: மகா.தமிழ்ப்பிரபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு