பேய்க் காற்றும் பெருமழை யும் இடைவிடாது இம்சைப்படுத்திக்கொண்டு இருந்த ஐப்பசி மாத அடைமழை விடியலில் அந்த மீனவக் கிராமத்தை இனம் தெரியாத ஒரு வேதனை சூழ்ந்துஇருந்தது!

''போயி ரெண்டு நாளாச்சே... என்ன ஆயிருப்பாவளோ, சொறா அடிச்சிருக்குமோ... படகு கவுந்துஇருக்குமோ?''

- நெல்லைச் சீமையில் இருந்து கிளம்பி வரும் தாமிரபரணி ஆறு, கடலோடு கலக்கும் முகத்துவாரக் கிராமமான புன்னைக்காயலில் இருந்து முந்தின நாள் மீனுக்குப் போன கட்டுமரங்களில் ஒன்று இன்னமும் கரை திரும்பவில்லை. அதில் போன இரண்டு மீனவர்களும் அவர்களுக்கு உதவியாகப் போயிருந்த பன்னிரண்டு வயதுச் சிறுவன் லாந்தார்க்கும் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

அவர்களைத் தேடிக் கடலுக்குள் போன கட்டுமரங்கள்கூட எந்தத் தகவல்களும் இன்றிக் கரை திரும்பிவிட்டன. ''போன மனுசங்களைச் சேதம் இல்லாமல் காப்பாத்தும் அந்தோணியாரே!'' என்று பதறினர்.

மறுநாள் சூரிய வெளிச்சம் ஊர் முகத்தில் மெல்லியதாய் படரத் துவங்கிய நேரத்தில், தூத்துக்குடி பக்கத்தில் உள்ள வைப்பார் அருகே ஒரு சடலம் கரை ஒதுங்கிய தகவல் கிடைத்தது.

இரண்டு நாட்கள் கழித்து பல மைல் தொலைவில் மணப்பாடு கடற்கரையை ஒட்டி அழுகிய நிலையில் சின்னாபின்னமான இன்னொரு சடலமும் கரை ஒதுங்கியது. அதையும் அடையாளம் கண்டு அந்த இடத்திலேயே குழி தோண்டிப் புதைத்தார்கள்.

கிடைத்த சடலங்களுக்கும் கிடைக்காத சிறுவனுக்கும் சேர்த்து இறுதிச் சடங்குகள் புன்னைக்காயலில் நடந்து முடிந்தன.

''விர்... விர்ர்...'' என்று காற்றின் பேரிரைச்சலும் ஓலைகளின் சலசலப்புமாகத் தென்னையின் வேர்களை வருடுவதுபோல அலைகள் வந்து போகும் வட்டக்கோட்டையைத் தாண்டி, அதிகாலையில் பொன்னுச்சாமி அண்ணாச்சி தன் தோப்பை வழக்கம்போல வலம் வந்துகொண்டு இருந்தார்.

அவர் எதேச்சையாகத் திரும்பிய போது அந்தக் காட்சியைக் கண்டு திடுக்கிட்டார். அலைவாயிலில் ஓர் உருவம் மல்லாந்துகிடந்தது. 'பிணம் ஒதுங்கியிருக்குமோ? எவனையாச்சும் அடிச்சுக் கொண்டாந்து போட்டிருப்பானுவளோ?’ - நெருங்கினார்.

ஆச்சர்யம்! அவனுக்கு லேசாக மூச்சு இருந்தது. உடனே, அலேக்காகத் தூக்கிக் கிறுகிறுவென்று சுற்றினார். பையனின் வாய் வழியாகத் தண்ணீர் குபுகுபுவெனப் பீய்ச்சியடித்தது. அவனைத் தரை யில் கிடத்தினார். சற்று நேரம் கழித்துக் கண் திறந்தான். மறுபடியும் மயக்கமானான்.அவனைத் தூக்கிச் சென்று தன் வீட்டுத் திண்ணையில் கிடத்தினார். மறுநாள் பிற்பகலில் மயக்கம் தெளிந்தான். எல்லோருக்கும் தாள முடியாத சந்தோஷம்!

''தம்பி... யாரப்பா நீ? எந்த ஊரு ஒனக்கு..?''

மயக்கம் தெளிந்த சிறுவன் எல்லோரையும் மிரண்டு பார்த்தான்.

''யாரு பெத்த புள்ளையோ? பாவம் புத்தி பேதலிச்சவன்'' என்றனர் பரிதாபத்துடன். சோறு போட்டார்கள்.

''பெத்த புள்ளைய வளக்குறதே பெரும்பாடா இருக்கு. பேதலிச்ச இவனைவெச்சுப் பாக்க முடியுமா? சொல்லு. எந்திருச்சு நடமாடுனதும் விட்டுருவோம். போயிரட்டும்...''

பொன்னுச்சாமி அண்ணாச்சிக்கும் அது சரியென்றே பட்டது.

சில தினங்களில் நடமாடத் தொடங்கினான் பையன். ஒவ்வொன்றையும் ஆச்சர்யமாகவே பார்த்தான். கால் போன போக்கில் நடந்தான். கடைகளுக்கு அருகில் நின்று கையேந்தினான். சிலர் விரட்டினார்கள். இன்னும் சிலர் ஏதாவது சாப்பிடக் கொடுத்தார்கள். அண்ணாச்சி போட்டுவிட்ட பழைய கால் சட்டையும் தொளதொள சட்டையும் கிழிந்த நிலையில் கன்னியாகுமரியில் தெருத் தெருவாக அலைந்தான்.

ஒரு மாலை நேரத்தில் பசி மயக்கத்தில் ரோட்டோரமாகச் சரிந்தான். அருகே கூடாரம் அடித்திருந்த நரிக்குறவர்கள் கூட்டத்தின் பார்வை அவன் மேல் விழுந்தது.

''பாத்தா நம்ம பயபோலல்லா இருக்கான்!'' என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அவர்களை நோக்கிக் கை நீட்டினான். பழைய குழம்பும் சோறுமாகக் கலந்த உருண் டையை அவன் கைகளில் அள்ளிவைத்தார்கள். அவதியவதியாக விழுங்கினான். பின்னர் அவர்களைச் சுற்றியே திரிந்தான். அவர்கள் போகிற இடமெல்லாம் பின்தொடர்ந்தான். அந்தக் கூட்டத்தின் தலைவனாயிருந்த பெரியவர், அவனுக்கு மூக்கன் என்று பெயர்வைத்தார். பின்னர், அந்தக் கூட்டம் திருவனந்தபுரம் போனது. பையனும் கூடவே போனான். மீண்டும் கன்னியாகுமரி வந்தது. நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் என்று ஊர் ஊராகச் சுற்றி பாசிமணி, ஊசி விற்றது. இப்படியே சில வருடங்களும் உருண்டன. அவனது உடல்வாகு மட்டும் தனித்து அகண்ட மார்பும் திரண்ட தோள்களுமாகத் தனியாகத் தெரிந்தது. சன்னஞ்சன்னமாகப் பேச்சும் வந்துவிட்டது. பெரியவரையே தன் தகப்பனாக நினைத்தான். தான் பிறந்ததுமே தன் தாய் செத்துப்போனாளோ என்று நினைத்தான்.

''நீ வேற கூட்டத்துப் பையன்டா... உன்ன எடுத்து வளர்க்கிறோம்!'' என்று சொன்னதை நம்பினான்.

அந்தக் கூட்டத்தில் மூக்கனின் நடவடிக்கைகள் மட்டும் மற்றவர்களில் இருந்து வேறுபட்டதாக இருந்தது. அந்தக் கூட்டத்திலேயே கறுப்பாகஇருந்தாலும் லட்சணமாயிருந்த சரோஜா அவன் மீது பிரியமாயிருந்தாள். அவனுக்கும் அவளைப் பிடித்திருந்தது. ஒருநாள் பாளையங் கோட்டைக்கு அருகே இவர்கள் முகாம் இட்டிருந்தபோது கல்யாணமும் முடித்து வைத்தனர். அடுத்தடுத்து இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தன. ஒருநாள் அந்தக் கூட்டத்தில் தலைவனாக இருந்த பெரியவர் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். அடுத்த தலைவனாக யாரை நியமிப்பது என்று வந்த போது, ''அவரு வளர்த்த மகன் மூக்கனே இருக்கட்டும்'' என்றார்கள் சிலர்.

''அதெப்படி அநாதைப் பயலை நம்ம கூட்டத்துக்குத் தலைவனாக்குறது?'' என்றனர் சிலர்.

அவர்களுக்குள் கலவரமே வந்தது. மூக்கனின் மனைவி சரோஜா தன் கூட்டத்துடன் சண்டைக்கு நின்றாள். ஒருவழியாக எல்லோரும் மூக்கனையே தலைவனாக ஏற்றுக்கொண்டபோது, அவனது மனைவி சந்தோஷத்தில் விசும்பி அழுதாள்.

ஊர் ஊராகத் தன் கூட்டத்தை வழிநடத்தி பாசிமணி, ஊசி, நரிக்கொம்பு, மயில்கால் தைலம் விற்றபடி அலைந்தான் மூக்கன்.

சுமார் 25 வருடங்கள் இப்படியே உருண்டன...

ஒருநாள் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள ஆத்தூரில் டென்ட் அடித்தது மூக்கனின் கூட்டம். அங்கிருந்து கிளம்பி தாமிரபரணிக் கரையோரமாக இருக்கும் கிராமங்களில் சுற்றி அலைந்து பொழுது சாயும் நேரத்தில் பாசிமணி, ஊசியுடன் புன்னைக்காயலை நெருங்கினான் மூக்கன்.

ஊரை நெருங்க நெருங்க அவனுக்குள் ஏதோ இனம் புரியாத அவஸ்தை. அவன் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. உடலெல்லாம் மின்சாரம் பாய்வது போன்று இன்னதென்று விவரிக்க முடியாத பரவசம். உயர்ந்து நிற்கும் தேவாலயத்தை ஏறிட்டான். இதற்கு முன் இதே இடத்தை அவன் எப்போதோ பார்த்ததுபோல் தெரிந்தது. ஆனால், இந்தத் திசையில் கடந்த 25 வருடங்களில் ஒரு முறைகூட வந்ததே இல்லையே... குழம்பினான். அவன் தலைக்குள் சில்லென்று ஏதோ குளிர்ச்சியாகப் பரவுவதுபோல உணர்ந்தான். அவன் கண்களில் பிரகாசம் மிளிர்ந்தது. வேக வேகமாக ஊருக்குள் நடந்தான். அந்த ஊரே புளிவைத்துத் துலக்கிய வெங்கலப் பாத்திரம்போல் பளிச்சென்று தெளிந்து தெரிந்தது. தெருக்களில் வெறி பிடித்தவன்போல் ஓடினான். சந்துகளுக்குள் வளைந்து திரும்பி ஏதோ ஓர் இலக்கை நோக்கி மூச்சிரைக்க ஓடி நின்றான்.

அவன் நின்றது அவனது வீட்டின் முன்னால். அவன் சின்னவனாக இருந்தபோது பெரியவர் களுடன் மீனுக்குப் போனது மங்கலாக நினைவு வந்தது. தாமிரபரணிக் கரையோரமாகக் கண்டு, வேரோடு பிடுங்கி வந்து தன் வீட்டின் முன் நட்டுவைத்த பூவரசங்கன்றைப் பார்த்தான்.

அது மரமாக வளர்ந்து மஞ்ச மஞ்சேள் என்று பூத்து நின்றது. அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. ஆனாலும் ஒரு சந்தேகம். இவன் சின்னவனாக இருந்தபோது இருந்த வீடு இல்லை இது. பெரிய கட்டடமாக, அழகான மாளிகையாக அல்லவா நிற்கிறது. வாசலில் போய் நின்றான். துக்கம் தொண்டையை அடைத்தது. அழுகை பீரிட்டது. முகத்தைப் பொத்தி விசும்பினான்.

அவன் வீட்டு வாசல் அருகே நின்ற யாரோ உள்ளே பார்த்து, ''இது யாரு? சும்மா அழுவானுங்க... துடிப்பானுங்க... பாவம் பாத்தா எதையாச்சும் ஏமாத்தி எடுத்துட்டுப் போயிடுவானுக. இவன் எதுக்கு இங்க நின்று அழுகான்?'' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வீட்டுக்குள் இருந்து அவன் தாய் வந்து அவனை எதேச்சையாகப் பார்த்தாள். அவளுக்கு ஏனோ இரக்கம் சுரந்தது. வீட்டுக்குள் போய் ஒரு உலைமூடி நிறைய பழைய சோற்றையும் சுட்ட கருவாட்டையும் எடுத்து வந்து அவன் கையை ஏந்தச் சொல்லி அதில் தட்டினாள்.

'அம்மா... உம் மவன் லாந்தார்க்... என்னைத் தெரியலையா..?’ என்று நெஞ்சே வெடிக்கும் குரலில் அலற வேண்டும்போல் இருந்தது.

''எதுக்குடா சும்மா நின்னு அழுவுறே? பசிச்சா சோறு வேணும்னு கேக்க வேண்டியதுதானே?'' என்றாள் எதிரே நிற்பவன் தன் மகன் என்பதைத் தெரியாத மெர்ஸியம்மா.

அவனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. தான் இன்னார் என்று சொல்ல வாயெடுத்தவனுக்குக் குழப்பம். 'சொன்னால் நம்புவார்களா? காசு பணத்துக்கு ஆசைப்பட்டு ஏமாற்றப் பார்க்கிறான் என்று நினைத்துவிட்டால், வேண்டாம்... இது வெளியில் தெரியவே வேண்டாம்’ என்ற முடிவுடன் அங்கேயே கண்ணீரை அடக்கிக்கொண்டு தன் தாய் போட்ட சோற்றைச் சாப்பிட்டான். வாசலுக்கு நேராக நின்று தன் வீட்டுக்குள் பார்வையால் துழாவினான். தன் தகப்பனார் தொம்பையாவின் படத்தில் காய்ந்து சருகான மாலை தொங்கியது. ஒரு வைராக்கியத்துடன் தன் கூட்டம் கூடாரம் அடித்துள்ள ஆத்தூருக்கே திரும்பி நடந்தான். விஷயத்தைத் தன் மனைவியிடம்கூடச் சொல்லவில்லை. இரவு முழுக்கத் தேம்பித் தேம்பி அழுதான்.

விடிந்ததும் தன் கூட்டத்தினர் வைத்திருந்த தேன், பாசிமணிகளையும் வாங்கிக்கொண்டு மீண்டும் தன் வீட்டு வாசலிலேயே போய் நின்றான். தாய் மெர்ஸியம்மா இப்போதும் விஷயம் தெரியாமல் அவனைப் பரிதாபத்துடன் பார்த்தாள்.

தழுதழுத்த குரலில், ''எனக்கு நீ ஒண்ணும் தர வேணாம் தாயி... பசிச்சு வந்தேன்... சோறு போட்டே, இதெல்லாம் வெச்சுக்க. நீ நல்லாருக்கணும்'' என்று கையெடுத்துக் கும்பிட்டான். எங்கே காசு கேட்கப்போகிறானோ என்று நினைத்து மறுத்தாள் தாய்.

''ஒண்ணும் தர வேணாம்... நேத்தப்போல கொஞ்சம் பழையதையும் சுட்ட கருவாட்டையும் உங்கையால போடு தாயி...'' என்றான் கண் கலங்கி. அதேபோல் அவன் பிரியமாகக் கொடுத்ததை வாங்கிக்கொண்டு கொஞ்சம் கருவாட்டை மழைக் காகிதத்தில் சுற்றிக்கொடுத்தாள் மெர்ஸியம்மாள். வாங்கிக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தான். அன்றில் இருந்து தொலைதூர ஊர்களை நோக்கிச் சுற்றிய லாந்தார்க் தன் கூட்டத்தைப் புன்னைக்காயலைச் சுற்றியே முகாமிடும்படியாக அமைத்துக்கொண்டான். யாரிடமும் விஷயத்தைச் சொல்லவில்லை. இவன் திரும்பத் திரும்ப புன்னைக்காயலுக்கு வந்தான். தன் தாய்க்கு மட்டும் இன்றி, ஊரின் முகப்பில் இருக்கும் தன் சகோதரி உள்ளிட்ட ஒவ்வோர் உறவினர் வீட்டு முன்பும் போய் நின்று எதையாவது கொடுத்துவிட்டு முகம் பார்த்து நின்றான்.

இப்படியே ஆறு மாதங்கள் கழிந்தன. மீண்டும் புன்னைக்காயலுக்கு அருகில் உள்ள ஆத்தூரில் வந்து கூடாரம் அடித்திருந்தான் லாந்தார்க். மற்ற ஊர்களுக்குப் போய் ஏதாவது சம்பாதித்துக்கொண்டு பின் தன் தாயைப் பார்த்துவர விரும்பினான்.

அன்றைக்கு இரவில் நல்ல பௌர்ணமி நிலா வெளிச்சம் பிரகாசித்தது. கடைசி பஸ் கிளம்புகிற நேரம். கூடாரங்களுக்குள் சாராயம் குடித்துவிட்டுத் தங்களுக்குள் சிலர் சண்டையிட்டுக்கொண்டு இருந்தனர்.

ஓய்ந்தபாடு இல்லை. லாந்தார்க்குக்கு எரிச்சல் வந்தது. அவன் மனைவி தடுத்ததையும் மீறி கோபத்து டன் எழுந்து போய் சண்டை போட்டவர்களைச் சமா தானப்படுத்தினான்.

''நீ என்னடா சொல்றது?'' என்று ஒருவன் போதையில் லாந்தார்க்கை நோக்கித் தலைவன் என்றும் பாராமல் கை ஓங்கியதுமே, லாந்தார்க்கின் கை, அவன் கன்னத்தில் பளாரென்று இறங்கியது. தடுமாறி விழுந்தவனுக்குப் போதை தெளிந்திருக்க வேண்டும். கெட்ட வார்த்தைகளால் லாந்தார்க்கை ஏசினான்.

''நீ யார்றா அநாதைப் பய... என்னை அடிக்க..?'' என்றான்.

''நான் ஒண்ணும் அநாதை இல்லடா. நான் புன்னைக்காயல் மீன் பரவன். எங்கப்பா தொம்பையா... எங்காத்தா மெர்ஸியம்மா. எனக்கு ஒரு அக்காவும் தங்கையும் இருக்காவ'' என்றான் ஆத்திரம் கொப்பளிக்க.

அந்த இடம் புன்னைக்காயலுக்குப் போகும் பஸ் நிற்குமிடம். லாந்தார்க் பேசியதைக் கேட்டபடி நின்றார் புன்னைக்காயல்காரர் ஒருவர். நேராக மெர்ஸியம்மாவிடம் போய், ''யே மெர்ஸியம்மா... உங்க வீட்டுக்கு வருவானே... கொறவன்... அவன் உங்களை மொறை சொல்லிச் சொந்தம்னு சொல்றான். விட்டா, இனி பொண்ணு கேட்டு வந்திடுவாம்போல'' என்றதும் மெர்ஸியம்மாவுக்கு மட்டும் என்னவோ உறைத்தது. ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.

தன் இரண்டாவது மகளையும் வேறு சிலரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, அந்த இரவிலேயே லாந்தார்க் முகாம் இட்டிருந்த ஆத்தூருக்கு வந்து சேர்ந்தாள் மெர்ஸியம்மா.

கூட வந்தவர்கள் டார்ச் லைட்டால் அவன் தலையில் வெளிச்சம் பாய்ச்ச... அருகில் வந்து தோளைத் தனது இடது கையால் அழுத்தி அவன் தலைமுடியை நீவிவிட்டு எதையோ தேடினாள். மறு விநாடியே ''பாவி மவனே...'' என்றபடி

லாந்தார்க்கைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு கதறினாள் மெர்ஸியம்மா!

தலையில் உள்ள அந்தப் பெரிய தழும்பு லாந்தார்க்கின் ஏழாவது வயதில் தலையில் குத்து விளக்கு விழுந்தபோது வந்தது!

எல்லோருமே அதிர்ந்து திகைத்தனர். நம்பவே முடியாமல் வியந்தனர்! பிறகு, லாந்தார்க்கை புன்னைக்காயலுக்கே அழைத்து வந்தார்கள். கூடவே, அந்த நரிக்குறவர் கும்பலும் நடப்பது என்ன ஏது என்பது புரியாமல் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.

அந்த நள்ளிரவு வேளையிலும் லாந்தார்க் வீட்டைச் சுற்றிலும் பெருங்கூட்டம் திரண்டு இருந்தது.

''இனிமே இந்தப் பாசிமணி விக்கிற கூட்டம் ஒனக்கு வேண்டாம் மகனே... ஒனக்கு 'போட்’ வாங்கித் தர்றோம். வேணாட்டி ஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணி கடை வெச்சித் தர்றோம். அதை வெச்சி தொழில் பாரு. உன் பொண்டாட்டி குழந்தைகள் கேட்கிற ரூவா குடுத்திடுவோம். எல்லோரையும் அனுப்பிவெச்சிரு... நீ எங்ககூட இரு...'' என்று அவர்கள் அவனுக்குப் புத்தி சொன்னார்கள்.

மௌனமாக இருந்தான். திகைத்துப்போயிருந்த அந்த நரிக்குறவர் கும்பலைப் பார்த்தான். பின்னர் தன் தாயையும் உறவினர் களையும் பார்த்து நிதானமாகச் சொன்னான். ''நீங்க பெத்த பாசத்துல பன்னிரண்டு வருஷம் வளத்தீங்க. இவங்க என்னை யாருன்னே தெரியாம இருபத்தஞ்சு வருஷமா வளத்து இருக்காக. இனி, என்னால இதுகளைப் பிரிஞ்சு வர முடியாது. நான் இவங்ககூடவே போறேன். ஆனா, அடிக்கடி உங்களைப் பார்க்கணும்னு தோணுறப்ப எல்லாம் நான் இங்க வருவேன். ஒவ்வொரு கிறிஸ்துமஸுக்கும் நான் இங்க வந்து உங்களைப் பாத்துட்டு மட்டும் போயிடுறேன். எனக்கு கடைகண்ணி எதுவும் வேணாம். பாசிமணி வித்தே பொழைச் சுக்கிடுறேன். இவங்களை விட்டுட்டு என்னால வர முடியாது. நான் லாந்தார்க்கா ஆக முடியாது. மூக்கனாவே இருந்துர்றேன்'' என்று தன் கூட்டத்துடன் நடந்து புன்னைக்காயலை விட்டு வெளியேறினான்.

(இப்போதும் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் தினத்தன்று வயதான தன் தாய் மெர்ஸியம்மாவை பாசிமணி விற்கும் 'மூக்கனாக’ வந்து பார்த்துவிட்டுப் போகிறான் லாந்தார்க்.)

குறிப்பு: படத்தில் இருப்பவர்கள் மாடல்கள் அல்ல. நிஜமான லாந்தார்க்கும் அவர் மனைவி சரோஜாவும்தான்!

- அருள்செழியன்