கேனக்கலுக்குச் சுற்றுலா வருவோரின் முதல் சாய்ஸ் அருவிக் குளியல். அடுத்தது, பரிசல் பயணம். ஆபத்து மிக்கப் பயணம்தான். ஆனாலும் ஆர்வத்துடன் செல்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள். ஆற்றில் விரல் நனைப்பதும், நீர்த் திவலைகளை உடன் வருவோர் மீது தெளித்து விளையாடுவதும் சிலிர்ப்புத் தரும் தருணங்கள்.

ஒரு பரிசலோட்டியின் கதை!
##~##

'இந்தப் பரிசல்கள் உருவாகும் கதையைக் கேட்டால் என்ன?’ என்று தோன்ற, ஒகேனக்கல்லுக்குப் போனோம். 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பரிசல் கட்டுகிறார் ஒகேனக்கலை அடுத்த ஊட்டமலையைச் சேர்ந்த வரதன். ''ஒகேனக்கலுக்கும் பரிசலுக்குமான பந்தம் 50 வருஷங்களைத் தாண்டியது.  முன்பு மீன் பிடிக்கவும், ஊரைவிட்டு ஊர் போகவும் மட்டும்தான் பரிசலைப் பயன்படுத்தினோம்.சுற்று லாப் பயணிகள் அதிகரிச்ச பின் னாடி பார்வைக்கு லட்சணமா இருக்கிற மாதிரி பரிசலைப் பின்ன ஆரம்பிச்சுட்டோம்.

ஒரு பரிசலோட்டியின் கதை!

11 அடி சுற்றளவுகொண்ட பரிசல்ல, 10 பேர் வரை பயணிக்கலாம். ஒரு பரிசல் கட்டித் தர 3 ஆயிரம் ரூபாய் வாங்குவோம். காயாத பச்சை மூங்கில்தான் பரிசல் செய்ய லாயக்கு. பச்சை மூங்கில் கிடைக்கலைனா காய்ஞ்ச மூங்கிலை இரவு முழுக்க ஆத்துல ஊறப்போட்டு மறுநாள் காலையில் பரிசல் கட்டுற வேலையை ஆரம்பிப்போம். மூங்கிலைத் தேவைக்கு ஏற்ற நீளத்தில் தப்பை களாப் பிளந்துடுவோம். ஒரு பரிசல் கட்டி முடிக்க அஞ்சு மணி நேரம் தேவைப்படும். கடைசியா, பரிசலின் அடிப் பகுதியில் ஒரு கோட்டிங் தார்ப் பூசி, அதுக்கு மேல பாலிதீன் சாக்குகளை ஒட்டி, மறுபடியும் நாலஞ்சு கோட்டிங் தார்ப் பூசுவோம். தார் இறுகி வெயில்ல நல்லாக் காயணும். இங்க ஓடுற பெரும்பாலான பரிசல்கள் நாங்க கட்டுனதுதான்!

இதுபோக சுற்றுலாப் பயணிகளுக்குப் பரிசல் ஓட்டுவேன்; சில நேரத்தில் பரிசல்ல மீன் பிடிக்கப் போவேன். சீஸன்ல பரிசல் ஓட்டுனா ஒரு நாளைக்கு 1,000-த்தில் இருந்து 2,000-ம் ரூபாய் வரை  கிடைக்கும். சீஸன் இல்லாத நேரத்தில் பெருசா ஒண்ணும் கிடைக்காது. வருமானம் முன்னப் பின்னேனாலும் இது சந்தோஷமான வேலைங்க. பரிசலை நீர்வீழ்ச்சிக்குப் பக்கத் துல கொண்டுபோறப்பவும், தட்டாமாலை யாப் பரிசலைச் சுத்த விடுறப்பவும் அத்தனை பேரும் குழந்தைகள் மாதிரி ஆர்ப்பரிப்பாங்க. அதைப் பார்க்கிறப்ப நம்மோட அத்தனை கவலையும் மறந்துபோயிடும்.

ஒரு பரிசலோட்டியின் கதை!

ஆனா, பயணிகள் என்னதான் ஆட்டம் போட்டாலும் பரிசல்காரன் ரொம்பக் கவ னமா இருக்கணும். இங்கே 20 அபாயமான நீர்ச் சுழல்கள் இருக்கு. தப்பித் தவறிக்கூட அதுக்குப் பக்கத்துல போயிடக்கூடாது. ஒருமுறை வடநாட்டுக் குடும்பம் ஒண்ணு பரிசல்ல போகணும்னு வந்துச்சு. அப்ப மழை சீஸன். கர்நாடகா கபினி அணையில இருந்து நம்ம மேட்டூர் அணை வரைக்கும் நிரம்பி வழியுது. இங்க பாறைகளை எல்லாம் மூழ்கடிச்சு, தண்ணி ஓடுது.

அந்த நேரத்துல பரிசல் ஓட்ட முடியாது; ஆபத்துனு சொன்னேன். ஆனா, அவங் களோ போயே ஆகணும்னு அடம்பிடிச்சாங்க. கொஞ்ச தூரம்தான் பரிசலை ஓட்ட முடியும்னு கண்டிஷன் போட்டு, எட்டுப் பேரை ஏத்திக்கிட்டு பரிசலைவிட்டேன். நல்லாத்தான் போய்க்கிட்டுஇருந் துச்சு. திடீர்னு வெள்ளத்துல அடிச்சிக்கிட்ட வந்த முதலை ஒண்ணு, வேகமாப் பரிசல் மேல மோதுச்சு. மோதின வேகத்துல பரிசல் கொஞ்சம் தள்ளிப்போய் தண்ணிக்கு அடியில இருந்த பாறையில மோதிபொத் தல் போட்டுக்கிச்சு. தண்ணி பொலபொலனு உள்ளே வருது. எல்லாரும் கத்த ஆரம்பிச்சாங்க. இப்படி ஏதாவது நடக்கும்னு எதிர்பார்த்து, கரையில இன் னொரு பரிசலோடு ரெண்டு பேரை உட்கார வெச்சி ருந்தேன். செல்போன்ல தகவலைச் சொல்லிட்டு, தண்ணியை மொண்டு ஊத்த ஆரம்பிச்ச 10 நிமிஷத்துல அவங்க வந்து சேர்ந்தாங்க. அன்னைக்கு உயிர்ப் பிழைச்சது அபூர்வம்ங்க...'' என்கிறார் சிலிர்ப்புடன்!

ஒரு பரிசலோட்டியின் கதை!

- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு