Published:Updated:

”அன்புதான் சார் எப்பவும் ஜெயிக்கும்!”

”அன்புதான் சார் எப்பவும் ஜெயிக்கும்!”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்ற மாதம் இத்தாலி நாட்டைச் சேர்ந்த 'கோஸ்ட்டா கன்கார்டியா’ என்ற சுற்றுலாக் கப்பல் ஒன்று, 'சிவிதவிக்யா’ துறைமுகத்தில் இருந்து 'சவோனா’ துறைமுகத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருந்தது. 3,200 பயணிகளையும் 1,200 பணியாட்களையும் சுமந்தபடி சென்றுகொண்டு இருந்த கப்பல், திடீரென நடுக்கடலில் மூழ்கிவிட்டது. அந்த மாபெரும் விபத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களில் பழநியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞரும் ஒருவர். அந்தத் 'திக் திக்’ நிமிடங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் சதீஷ்.

”அன்புதான் சார் எப்பவும் ஜெயிக்கும்!”
##~##

'நான் டிப்ளமோ கேட்டரிங் முடிச்சுட்டு ஆறு மாசமா இத்தாலி கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அந்த 'கோஸ்ட்டா கன்கார்டியா’ கப்பல்ல எனக்கு கிச்சன் சைட்லதான் வேலை கொடுத்தாங்க. ஏழு நாட்கள் இத்தாலி, ஸ்பெயின், ஃபிரான்ஸ், மால்ட்டா தீவு ஆகிய இடங்களுக்குச் சுற்றுலாப் போகும். 13 பார், அஞ்சு ரெஸ்டாரென்ட்ஸ், நாலு நீச்சல் குளம், ரெண்டு தியேட்டர்னு ரொம்ப சொகுசான கப்பல் அது.  

அன்னைக்கு ராத்திரி 'கிகிலியோ போர்டோ’ங்கிற தீவுகிட்ட போகும்போது, திடீர்னு கப்பல் கன்னாபின்னானு ஆட ஆரம்பிச்சிடுச்சு. பேலன்ஸ் இல்லாததால் யாரலும் நிக்க முடியலை. எல்லாரும் தரையில் விழுந்துட்டோம். கரன்ட் வேற கட் ஆகிடுச்சு. எமர்ஜென்சி லைட்டும் அணைஞ்சிடுச்சு. எல்லாரும் அழ ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்ச நேரத்தில் கேப்டன், ஒரு மைக்ல 'யாரும் பயப்படாதீங்க; சாதாரண டெக்னிக்கல் பிராப்ளம்தான். உடனே சரி பண்ணிடுவோம்’னு சொன்னார். ஆனா, அடுத்த அரை மணி நேரத்தில் கப்பல் ஒரு பக்கமா சரிஞ்சு மூழ்க ஆரம்பிச்சிடுச்சு. உடனே எல்லாரும் எமர்ஜென்ஸி ஸ்பாட்டுக்குப் போனோம்.

”அன்புதான் சார் எப்பவும் ஜெயிக்கும்!”

ஆபத்து நேரத்தில் எப்படிச் செயல்படணும்னு எங்களுக்கு முன்னாடியே டிரெய்னிங் கொடுத்து இருந்தாங்க. அதன்படி பயணிகள் எல்லாருக்கும் லைஃப் ஜாக்கெட் போட்டு, அங்கே இருந்த லைஃப் போட்டுகளைக் கப்பலில் இருந்து கடலுக்கு இறக்க ஆரம்பிச்சோம். ஒவ்வொரு லைஃப் போட்லேயும் 70 பேர்தான் ஏறமுடியும். ஆனா, கப்பல் வேகமாச் சரிய ஆரம்பிச்சதால் ஒரு போட்டுக்கு 100 பேரை ஏத்தி பக்கத்தில் இருந்த 'டொஸ்கானா’ கடற்கரையில் இறக்கிவிட்டோம். நான் மட்டும் அஞ்சு ட்ரிப் அடிச்சு 500  பேரைக் காப்பத்தினேன். எல்லாத்தையும் இறக்கி விட்டுட்டு தேடிப் பார்த்தா, 21 பேரைக் காணலை. எங்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் ஊருக்கு அனுப்பிவெச்சாங்க. பக்கத்தில் இருந்த மலையில் மோதினதால் விபத்து ஏற்பட்டதுனு அப்புறமாத்தான் தெரிஞ்சுது. இந்த விபத்தில் நான் சந்திச்ச அந்த அனுபவங்களை என்னால் என்னைக்கும் மறக்கவே முடியாது.

அந்தக் கப்பல்ல ஸ்டோர் கீப்பர்களில் இந்தோனேசியாக்காரர் ஒருத்தர் இருந்தார். அவருக்கும் எனக்கும் எப்பவும் ஆகாது. விபத்து நடந்த அன்னைக்கு மதியம்கூட சண்டை போட்டுக்கிட்டோம். எல்லாரையும் காப்பாத்துற துக்காக ஓடிட்டு இருந்தேன். ஒரு பள்ளத்தில் அந்த ஸ்டோர் கீப்பர் தண்ணீரில் தத்தளிச்சுக் கிட்டு இருந்தார். ஓடிப் போய் கை கொடுத்தேன். அவர் ரொம்பக் குண்டா இருந்தார். ரொம்பச் சிரமப்பட்டு வெளியே தூக்கினேன். வந்ததும் அப்படியே கட்டிப்பிடிச்சுட்டு அழ ஆரம்பிச்சுட் டார். அப்பதான் சார் அன்பே எப்பவும் ஜெயிக்கும்னு புரிஞ்சுது.

”அன்புதான் சார் எப்பவும் ஜெயிக்கும்!”

நம்ம நாட்டுத் தூதரகத்தில் இருந்து டூப்ளிகேட் சர்ட்டிஃபிகேட் கொடுத்து இருக்காங்க. திரும்ப பாஸ்போர்ட் அப்ளை பண்ணியிருக்கேன்.  மறுபடியும் அதே கம்பெனியில் சேரப் போறேன். நான் திரும்பப் போறதுக்கு வீட்டில் இருக்கிறவங்க பயப்படுறாங்க. எனக்கு சென்டிமென்ட் கிடை யாது சார். பஸ் ஆக்ஸிடென்ட் நடக்குதுங்கிறதுக்காக, பஸ்ல போகாமலா இருக்கோம்?'' நம்பிக்கையாகச் சிரிக்கிறார் சதீஷ்குமார்!

- உ.அருண்குமார்
படம்: வீ.சிவக்குமார் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு