Published:Updated:

ஆரோக்கிய உணவு

Vikatan Correspondent

ஓவியங்கள்: ஸ்யாம்

காலை முதல்  இரவு வரை...

நாம் சாப்பிடும் உணவு சத்து உள்ளதாக இருக்க வேண்டும். அதிலும் பரீட்சை நேரத்தில் ரொம்பவே கவனம் தேவை. அதற்கான, உணவு டைம் டேபிள்...

 காலை எழுந்ததும்...

ஆரோக்கிய உணவு

வெறும் வயிற்றுடன் புத்தகத்தைத் தொடாதீர்கள். பல் துலக்கிவிட்டு, பால் அல்லது, ஊட்டச் சத்து பானத்துடன் படிக்க ஆரம்பியுங்கள்.

மினி டிஃபன்!

ஆரோக்கிய உணவு

பாலுடன் பிஸ்கெட், சில பிரெட் துண்டுகள் என்று மினி டிஃபனை எடுத்துக்கொண்டால், இன்னும் தெம்பாகப் படிக்கலாம்.

 காலை உணவு!

ஆரோக்கிய உணவு

காலை உணவு மிக மிக அவசியம். இட்லி, இடியாப்பம் என எளிதில் ஜீரணிக்கக் கூடியதாக இருப்பது நல்லது.

கூடவே ஒரு ஜூஸ்!

ஆரோக்கிய உணவு

டிஃபன் முடித்த கையோடு ஒரு பழத்தை ஜூஸ் செய்து குடியுங்கள். அது, புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

 இப்படியும் சாப்பிடலாம்!

ஆரோக்கிய உணவு

காலையில் ஓர் இட்லி அல்லது ஓர் இடியாப்பம்  எடுத்துக்கொண்டு, ஆப்பிள் துண்டுகள், திராட்சை, சாத்துக்குடி  என சாப்பிடலாம்.

 இது வேண்டாம்!

ஆரோக்கிய உணவு

காலை நேரத்தில் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். முக்கியமாக, ஹோட்டலில் 'ஃபாஸ்ட் ஃபுட்’ சாப்பிடாதீர்கள்.

 மதியத்துக்கு முன்...

ஆரோக்கிய உணவு

மதிய உணவுக்கு ஓரிரு மணி நேரத்துக்கு முன்பு, சிறு உணவுகளாக அவல், அரிசிப்பொரி, வேகவைத்த வேர்க்கடலை போன்றவற்றைச் சாப்பிடலாம்.

 இதுவும் ஓ.கே!

ஆரோக்கிய உணவு

வறுத்தது, வேகவைத்தது அல்லாமல், பழங்களைத் துண்டுகளாக்கி, சாலட் செய்து சாப்பிடலாம். உடலுக்கும் குளிர்ச்சியாக இருக்கும்.

 கூடாது... கூடாது!

ஆரோக்கிய உணவு

நடுவில் சாப்பிடும் உணவுகளாக, சிப்ஸ், பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெயில் குளித்த பொருட்கள் கூடவே கூடாது.

 மதிய உணவாக...

ஆரோக்கிய உணவு

புரோட்டீன் அதிகம் உள்ள கொண்டைக்கடலை, பட்டாணி, சோயா பீன்ஸ் ஆகியவற்றை உணவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

 கூடவே ஒரு கீரை!

ஆரோக்கிய உணவு

அன்றாட மதிய உணவில் ஏதாவது ஒரு கீரை அவசியம் இருக்கட்டும். குறிப்பாக, வல்லாரை கிடைத்தால் ஒரு கட்டுக் கட்டுங்க.

இதுவும் முக்கியம்!

ஆரோக்கிய உணவு

வேகவைத்த காய்கறிகளை மதிய உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். கூடவே, வெள்ளரித் துண்டுகளை உட்கொண்டால், குளிர்ச்சி தரும்.

 அசைவமா..? யோசி!

ஆரோக்கிய உணவு

முடிந்த வரை அசைவ உணவைத் தவிர்க்கவும். எனினும், மீன் சாப்பிடலாம். சூட்டை ஏற்படுத்தும் சிக்கனுக்கு டாட்டா சொல்லிவிடுங்கள்.

 வேண்டாமே ஃபுல் கட்!

ஆரோக்கிய உணவு

சத்தான உணவாகவே இருந்தாலும், 'மூக்குப்பிடிக்க’ சாப்பிட வேண்டாம். அது தூக்கத்தையும் சோர்வையும் உண்டாக்கிவிடும்.

 இதையும் கவனியுங்கள்!

ஆரோக்கிய உணவு

அதிகக் காரமான உணவுகள் வேண்டாம். உங்களுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளையும் தவிர்த்துவிடுங்கள்.

மதியத்துக்குப் பின்...

ஆரோக்கிய உணவு

இளநீர், பதநீர் குடிக்கலாம். இளநீரில் தேன் அல்லது எலுமிச்சை கலந்து குடித்தால், சுறுசுறுப்பு இரு மடங்கு ஆகும்.

 மாலை நேரம்...

ஆரோக்கிய உணவு

சுண்டல், வேர்க்கடலை போன்றவற்றை வீட்டில் செய்து சாப்பிடலாம். ஹோட்டலிலோ, கடைகளிலோ சாப்பிடாதீர்கள்.

 இரவு வந்தாச்சு!

ஆரோக்கிய உணவு

இரவு உணவுடன் பால் அல்லது 'மில்க் ஷேக்’ குடித்தால், உடலுக்குத் தேவையான சமச்சீர் சத்து கிடைக்கும்.

தொடரும் இரவு!  

ஆரோக்கிய உணவு

இரவு படிக்கும்போது குறிப்பிட்ட இடைவெளிகளில் வெதுவெதுப்பான பால் அருந்துவது, ஆரோக்கியமானது.

 இரவில் ஜாக்கிரதை!

ஆரோக்கிய உணவு

பாலைத் தவிர... காபி, டீ போன்றவற்றை இரவில் குடிப்பதைத் தவிர்க்கவும்.

 பொதுவாக சில...

ஆரோக்கிய உணவு

நீரை காய்ச்சியே குடியுங்கள். தினமும் 2 லிட்டர் நீர் குடிக்க வேண்டும். மிகவும் சோர்வாக உணர்ந்தால், 'க்ளூக்கோஸ்’ குடிக்கலாம்.

 தண்ணீர்... நன்னீர்!

ஆரோக்கிய உணவு

வெளியே செல்லும்போது, மறக்காமல் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள். அல்லது, சுத்திகரிக்கப்பட்ட நீரை வாங்கிப் பருகுங்கள்.

 மீண்டும் மீண்டும் மோர்...

ஆரோக்கிய உணவு

இளநீரைவிட எளிதாகக் கிடைக்கும் மோரை, கோடையில் மீண்டும் மீண்டும் குடிக்கலாம். நல்ல தண்ணீரில் கலந்ததாக இருக்கட்டும்.

 பழங்களைக் கவனி!

ஆரோக்கிய உணவு

ஆப்பிள் போன்ற பழங்களை உண்ணும்போது... தோலை நீக்கிவிடவும். ஏனெனில், பளபளப்புக்காக இவற்றின் மேல் மெழுகு தடவப்படுகிறது.

 சரியான சாலட்!

ஆரோக்கிய உணவு

ஃப்ரூட் சாலட் மிகவும் நல்லதுதான். ஆனால், அதைத் தயாரித்ததுமே சாப்பிடுங்கள். ஃப்ரிஜ்ஜில் எடுத்துவைத்து உண்ணாதீர்கள்!

 இரும்பை விரும்பு!

ஆரோக்கிய உணவு

தினமும் ஒன்று, இரண்டு பேரீச்சை சாப்பிடுவது நல்லது. தேர்வு நேரத்தில் உடல், இரும்பு போல் இருப்பது அவசியம் ஆச்சே.

 இனிப்பே... கசப்பே!

ஆரோக்கிய உணவு

அடிக்கடி இனிப்பு சாப்பிடாதீர்கள். அதே நேரம், உணவுக்குப் பின்னர் சிறிதளவு இனிப்பு சாப்பிடுவது, ஜீரணத்துக்கு நல்லது.

 டேக் இட் ஈஸி!

ஆரோக்கிய உணவு

மூச்சுத் திணறல் பிரச்னை இருப்பவர்கள், பழங்களில் ஆப்பிளை மட்டுமே சாப்பிடவும். மிகவும் குளிர்ந்த பழங்களைத் தவிர்க்கவும்.

திரவமே திடமாக!

ஆரோக்கிய உணவு

திரவ உணவை அதிக அளவு எடுத்துக்கொண்டால், உண்ட மயக்கமும் இருக்காது, நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடனும் படிக்கலாம்.

 ஷார்ட் டைம் டேபிள்:

6.00 : பால், பிரெட் அல்லது   பிஸ்கெட்
8.00 : காலை டிஃபன், பழச் சாறு
11.00 : இடைநிலை உணவுகள்
1.00 : மதிய உணவு, பழச்சாறு
4.00 : வேர்க்கடலை, சுண்டல் போன்றவை.
8.00 : இரவு டிஃபன்
9.30 : பால்