எங்கும் எதிலும் கவனம்!

நம் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம், கவனக்குறைவு. சிறு கவனக்குறைவும் பெரிய விளைவில் முடியும். பரீட்சை நேரத்தில் கவனமாக இருப்பதற்கான சில வழிமுறைகள்...

குளியல் அறையில்...

பரபரப்புடன் குளியல் அறைக்குள் ஓடாதீர்கள். ஈரமான தரை, கால்களை வாரி விட்டுவிடலாம்.

ஹீட்டர் உஷார்!

ஹீட்டர் போன்றவற்றில் பிரச்னை என்றால் அப்பா, அம்மாவிடம் சொல்வதே சரியானது. நீங்களே கையாள நினைக்காதீர்கள்.

மின்சார சமாச்சாரம்!

அயர்ன் பாக்ஸ் போன்ற மின்சார உபகரணங்களையும் பெரியவர்களின் பொறுப்பிலேயே விட்டுவிடுங்கள்.

பேனா... வேணாம்!

பேனா மூடி, பென்சில் ஆகியவற்றை வாயில் வைத்தவாறு யோசிப்பது, காது குடைவது போன்றவை ஆபத்தில் முடியும்.

சமையலறை கவனம்!

சமையல் அறைப் பக்கம் சென்றால், சூடான பாத்திரங்கள், கத்தி போன்றவை இருக்கும். எனவே, கவனமாகச் செல்லுங்கள்.

சாப்பிடும்போதும்...

உணவு மற்றும் உணவுப் பாத்திரங்களை எடுக்கும்போது, எச்சரிக்கையாக இருங்கள். உடலிலோ, கண்களிலோ படலாம்.

காலணியைக் கவனி!

காலணிகளை அணியும் முன்பு கவனிக்கவும். உள்ளே பூச்சிகூட இருக்கலாம். நன்கு உதறிவிட்டு அணியவும்.

வெயிட்... வெயிட்!

கனமான பொருட்களை எடுக்கும்போது, உதவிக்கு ஒருவர் இருப்பது நல்லது. கை தவறி நம் மீதே போட்டுக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.

உயரம் உஷார்!

உயரமான இடங்களில் இருக்கும் பொருட்களை எடுக்கும்போதும் உஷாராக இருக்க வேண்டும். தேவையற்ற விபத்தைத் தவிர்க்கலாம்.

சாலையில் சைக்கிள்!

சைக்கிள் ஓட்டும்போது, உங்கள் கவனம் முழுக்க பாதையில் இருக்கட்டும். ஓவர் டேக் எல்லாம் வேண்டவே வேண்டாம்.

பேருந்து பாலிஸி!

ஓடும் பேருந்தில் ஏறுவது, தொற்றிச் செல்வது போன்ற பாலிஸிகளை இப்போதும் எப்போதும் ஓரம் கட்டுங்கள்.

விளையாட்டு கவனம்!

ஃபுட்பால், கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டின்போது ரொம்பவே கவனமாக இருங்கள். தடுக்கி விழுந்து காயம் ஏற்படலாம்.

கொஞ்சம் தவிர்ப்போம்!

ஸ்கேட்டிங், டைவிங் போன்ற விளையாட்டுகளைத் தேர்வு முடியும் வரை கொஞ்சம் தவிர்க்கலாமே.

வேண்டாம் வீண் சண்டை!

வீணான வார்த்தை மோதல்கள், கைகலப்புகளில் ஈடுபடுவதையும் தவிர்க்கவும். சின்ன விஷயம் வினையாக மாறலாம்.

ரிப்பேர்... பிரிப்பேர்!

வாகனங்களைப் பழுதுபார்ப்பது போன்ற வேலைகளில் தனியாக ஈடுபடாதீர்கள். தகுந்த ஆலோசனையின்படி செய்யுங்கள்.

உதவியில் கவனம்!

முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களுக்கு உதவும்போது கவனமாக செயல்பட வேண்டும்.

விபத்து வேடிக்கை!

சாலை விபத்து, தீ விபத்து போன்ற இடங்களில் நுழைந்து வேடிக்கை பார்ப்பதைத் தவிர்க்கவும். நமக்கே விபரீதமாக மாறலாம்.

கோடைக்கு குடை!

கோடை வந்தாச்சு. வெயிலில் செல்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். அப்படியே சென்றாலும் குடையுடன் செல்வது நல்லது.

இருட்டைக் கவனி!

வெளிச்சம் இல்லாத இருட்டான நேரத்திலோ, இடங்களிலோ செல்லும்போது மிகவும் கவனத்துடன் செல்லுங்கள்.

விலங்குகள் ஜாக்கிரதை!

தெருநாய், மாடு போன்றவற்றைக் கடக்கும்போதும் கவனமாக இருங்கள். அவற்றைச் சீண்டி, வம்பை விலைக்கு வாங்காதீர்கள்.

செல்லங்களே... செல்லங்களே!

வீட்டு நாய், பூனை, கிளி போன்ற செல்லப் பிராணிகளிடமும் கவனம். தூக்குவது, முத்தம் கொடுப்பது போன்றவை வேண்டாமே.

முந்தாதே தாண்டாதே!

கூட்டங்களில் முந்திக்கொண்டு ஓடுவது, பள்ளங்களைத் தாண்டுவது போன்ற சாகசங்களுக்குத் தடை போடுங்கள்.

நோ... நோ... டூ வீலர்!

அப்பாவின் டூ வீலரை ஓட்டுவது குஷியாக இருக்கலாம். ஆனால், அதற்கு இப்போது வயதும் இல்லை, தேவையும் இல்லை.

வெளியே சென்றால்...

வீட்டு முகவரி, செல்போன் எண்கள் எழுதிய அட்டை அல்லது காகிதத்தை பாக்கெட்டில் வைத்துக்கொள்வது சமயத்துக்கு உதவலாம்.

முதல் உதவி...

முதல் உதவி சிகிச்சைப் பொருட்களை மருத்துவரின் ஆலோசனையின்படி வீட்டிலே வைத்துக்கொள்வது சமயத்தில் பயன்படும்.

செல்போன் பேச்சு!

நடந்துகொண்டே செல்போன் பேசுவது, சாலையைக் கடப்பதைத் தவிர்க்கவும். இவை, நொடிப்பொழுதில் கவனத்தைச் சிதைத்துவிடும்.

கண்ணாடி கவனம்!

கண்ணாடி மற்றும் கூர்மையான பொருட்களைக் கையாளும்போது, மிகவும் கவனமாக இருப்பது காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும்.

பள்ளியில் கவனம்...

பள்ளியில் மாடிப் படிகளில் வேகமாகச் செல்வது, வகுப்பறை மேஜைகளை நகர்த்துவது ஆகியவற்றில் கவனமாக இருங்கள்.

லேப் கவனம்...

பள்ளி ஆராய்ச்சிக்கூடத்தில், ரசாயனப் பொருட்களைச் சேர்க்கும்போது முழுக் கவனத்துடன் இருக்க வேண்டும்.

எங்கேயும் எப்போதும் கவனம்...

குளியல் அறை, சமையல் அறை
சைக்கிள், பேருந்து
சாலைகள், விலங்குகள்
விளையாட்டு, வீண் பேச்சு
பள்ளியிலும் கவனம்.