Published:Updated:

”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது!”

”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது!”

”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது!”

”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது!”

Published:Updated:
”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது!”

''ஏரியாவை விட பிராட்வே பஸ் ஸ்டாண்டை ஒட்டி இருக்கிற பச்சையப்பன் ஸ்கூல் கிரவுண்டைப் பத்திப் பேசச் சொன்னீங்கன்னா நல்லாவே பேசுவேன். ஏன்னா, படிக்கிற, தூங்குற நேரம் போக மீதி நேரம் எல்லாம் இந்த கிரவுண்டுலதான் கழியுது. ஆனாலும் நான் பொறந்த ஏழு கிணறு, மண்ணடிப் பகுதிகளைப் பத்தியும் பேசலாம். இல்லைனா... ஊர் ஊரா விளையாடப் போற புள்ளைக்குச் சொந்த ஊரைப் பத்தி ஒண்ணுமே தெரியலைனு நீங்க எழுதிருவீங்கல்ல!'' - தமிழகத் தடகள வீராங்கனை காயத்ரி, தான் பிறந்து வளர்ந்த மண்ணடிப் பகுதியைப் பற்றி விளையாட்டாகப் பேசத் தொடங்கினார்.

”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது!”
##~##

''மண்ணடி, ஏழு கிணறு ஏரியாதான் என் பூர்வீகம். ஆரம்ப கால சென்னை இந்த ஏரியாவைச் சுத்திதான் உருவாச்சுனு சொல்வாங்க. துறைமுகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டைனு பக்கத்துல நிறைய இருக்கு. மண்ணடியில இருக்கற ஏதோ ஒரு ஒத்தைத் தெருவைக்காட்டி 'இங்கதான் நாங்க இருந்தோம்’னு சொல்ல முடியாது. இங்க உள்ள பல தெருக்கள்ல குடியிருந்திருக்கோம். சின்ன வயசுல இங்க உள்ள எல்லா சந்துகள்லயும் நான் ஓடிப் பிடிச்சு விளையாடி இருக்கேன். எப்பவும் ரோட்டுலதான் எங்க கூத்து. அதுக்காக ஊருல விழுகுற வெயில் எல்லாம் எங்க தலையிலதான் விழும்னு சொல்ல முடியாது. ஏன்னா தெருவுக்கு ரெண்டு பக்கமும் இருக்கற உயரமான கட்டங்கள் வெயிலைத் தடுத்துடும்.

இப்ப எல்லாம் எந்தப் பிள்ளையும் ரோட்ல விளையாடுற மாதிரி தெரியலை. அவங்க கம்ப்யூட்டர் கேம்ஸ்ல வர்ற ரோடுகள்ல ஓடிக்கிட்டு இருக்காங்க. இதுக்காக யாரையும் குத்தம் சொல்ல முடியாது. காலம் ரொம்ப மாறிக்கிட்டே இருக்கு. எல்லாமே அட்வான்ஸாப் போகுது. ரெண்டாங்கிளாஸ் படிக்கிற புள்ளை என்னைவிட நல்லா செல்போனை யூஸ் பண்ணுது. எனக்குத் தெரியாத ஆப்ஷனை அது எனக்குக் கத்துக் கொடுக்குது.

இப்ப நாங்க வெங்கட் ஐயர் தெருவுல குடியிருக்கோம். இதுக்கு முன்னாடி இந்த வீட்டுக்கு எதிர்ல இருக்கற வீட்டுல குடியிருந்தோம். அந்த வீட்டை இப்ப இடிச்சுட்டு இருக்காங்க. இந்த ஏரியாவுல இப்பப் பல பேருக்கு என்னைத் தெரியுது. ஆனா, எனக்கு ரொம்பப் பேரைத் தெரியலைனு வருத்தம் உண்டு. பரபரப்பான மண்ணடித் தெருக்கள்லயே சின்ன வயசுல இருந்து வாழ்ந்துக்கிட்டு இருக்கிற என்னால, இன்னொரு ஏரியாவுல குடியிருக்க முடியும்னு தோணலை. எங்க திரும்பினாலும் கூட்டம்... எப்பவும் இரைச்சல்னு சும்மா கலகலன்னு இருக்கிற ஏரியா இது. எக்ஸாம் அப்பவும் இந்த இரைச்சல் சத்தம் இருந்தாத்தான் என்னால படிக்க முடியும். அமைதியான ஏரியாவுல என்னால படிக்க முடியாது.

”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது!”

என் அக்காவுக்கு டிராயிங்ல இன்ட்ரஸ்ட். அதனால, அம்மா அவளை டிராயிங் கிளாஸ் சேர்க்கும்போது என்னையும் சேர்த்துவிட்டாங்க. அப்ப நான் இரண்டாம் வகுப்புப் படிச்சேன். அப்ப தெரு எல்லாம் மாட்டு வண்டிகளா இருக்கும். டிராயிங் கிளாஸுக்குப் போகும்போது, தெருவுல போற ஏதாவதொரு மாட்டு வண்டியில ஏறி இறங்கி விளையாடுவோம். பல தடவை கீழ விழுந்து அடிபட்டு இருக்கு. பின்ன, அடிபடாம, காயமாகாம விளையாட முடியுமா என்ன? அப்ப எல்லாம் எங்க ஏரியாவுல ஏகப்பட்ட ரிக்ஷாக்களைப் பார்க்கலாம். இப்ப இருக்கா இல்லையானு தெரியாத அளவுக்கு ரொம்பக் குறைஞ்சிடுச்சு. எப்ப... எங்க... போகணும்னாலும் ரிக்ஷாதான்; இப்ப ஆட்டோவுக்கு மாறிட்டோம். நான் ரிக்ஷாவை ரொம்ப மிஸ் பண்றேன்!

ஜார்ஜ் டவுன்ல இருக்கற செயின்ட் கொலம்பன்ஸ் ஆங்கிலோ இண்டியன் ஸ்கூல்லதான் நான் படிச்சேன். படிக்கிற காலத்துல பாதிநேரம் பெர்மிஷன் வாங்கிட்டு, பச்சையப்பன் ஸ்கூல் கிரவுண்டுல இருப்பேன். 13 வருஷம் இங்கயே கழிஞ்சிடுச்சு. முதல்ல இங்க ஒரே ஒரு ரூம்தான். படிப்படியா ரூம்களை அதிகப்படுத்துனாங்க; இப்ப நாலு ரூம் இருக்கு. ஆரம்பத்துல இந்த கிரவுண்டுக்கு நல்ல காம்பவுண்ட் சுவர் இருந்துச்சு. ஆனா, ட்ரைனேஜ் கட்டுறதாச் சொல்லி அதை இடிச்சுட்டாங்க. பப்ளிக் எல்லாரும் பார்க்கும்போது, பிராக்டீஸ் பண்ண கஷ்டமா இருக்குனு நாங்களே ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்டு மறைச்சோம். இப்ப காம்பவுண்ட் சுவர் கட்டிட்டு இருக்காங்க.

எனக்குத் தெரிஞ்சு நான் பார்த்த மண்ணடி... படிப்படியா மாறிக்கிட்டே வருது. ஓடிப்பிடிச்சு விளையாண்ட தெருக்கள் மாறிடுச்சு. படிச்ச ஸ்கூலும், படிக்கிற காலேஜும் மாறிட்டு வருது. இதுக்காக என்ன பண்ண முடியும்? அவ்வளவு ஏன் சார், 1 ரூபா 25 பைசா கொடுத்து நான் பயணம் பண்ணுன பஸ்ஸுல இன்னைக்கு அஞ்சு ரூபா கொடுத்து போறேன். இதுக்காக வருத்தப்பட்டாலும் தொடர்ந்து பஸ்ஸுல போயிட்டுதான இருக்கேன். வாழ்க்கையும் அப்படித்தான். இதெல்லாம் சகஜம் சார்!''

”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது!”

- செந்தில் ராஜாமணி,
படங்கள்: உசேன்