Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

வ்வொரு வருடமும் 'ஐ/ஓ கான்ஃபரன்ஸ்’ என்ற பெயரில் மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கான மாநாடு ஒன்றை கூகுள் நடத்துகிறது. அதில் தாங்கள் செய்துகொண்டு இருக்கும் புராஜெக்ட்டுகளில் ஒன்றிரண்டை முன்னோட்டமாகக் காட்டுவது உண்டு. அப்படிக் காட்டப்பட்டவை அனைத்தும் முடிக்கப்பட்டு பயனீட்டுக்குக் கொடுக்கப் படும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், கூகுள் என்னென்ன துறைகளில் தனது சக்திகளைச் செலவழித்தபடி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்த அறிவிப்புகள் உதவும். (இந்த விஷயத்தில் ஆப்பிள் ஒரு தந்திர நரி. அவர்களது புராஜெக்ட்டுகள் கடைசி நேரம் வரை ரகசியமாக வைக்கப்படும். இந்த ரகசியக் கட்டுக்கோப்புதான் ஆப்பிளின் பயனீட்டாளர்களிடையே எக்கச்சக்க

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

எதிர்பார்ப்பை உருவாக்கி வணிகத்தை அதிகரிக்கிறது என்பதும் உண்மை.)

சென்ற வருட மாநாட்டில், ஆண்ட்ராய்ட் @ ஹோம் என்ற பெயரில் முன்மாதிரி (Prototype) சாதனம் ஒன்றைக் காட்டியது கூகுள். இதைப் பயன்படுத்தி உங்கள் வீட்டின் வயர்லெஸ் இணைய இணைப்பின் மூலம் மியூஸிக் கேட்கலாம். இது அத்தனை புதுமை இல்லாததாகவே அப்போது பலருக்கும் தோன்றியது. சில மாதங்களுக்கு முன்னர், கூகுள் இணையம் சார்ந்த இசைச் சேவையை வெளியிட... அவர்களது நீண்ட நாளையத் திட்டம் புலப்பட ஆரம் பித்தது.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

இந்தத் தொடரின் வாசகர்களுக்கு கூகுள் டி.வி. பற்றிய அறிமுகம் உண்டு. (உரலி http://www.google.com/tv/ ) சோனி நிறுவனத்துடன் இணைந்து, தங்களது தொழில்நுட்பத்தை உள்ளிணைத்து, தனிப்பட்ட 'கூகுள் டி.வி’-யாகவோ, அல்லது உங்களிடம் ஏற்கெனவே இருக்கும் டி.வி-யுடன் இணைத்துக்கொள்ளும்படியான கூகுள் டி.வி. சாதனமாகவோ இதை வாங்க முடியும்.

உங்கள் கையில் இருக்கும் அலைபேசி அல்லது குளிகை மூலம் வீட்டில் இருக்கும் டி.வி-யில் இசை, புகைப்படம், வீடியோ ஆகியவற்றை ஸ்ட்ரீமிங் செய்ய வசதியான வீட்டுப் பொழுதுபோக்குச் சாதனமாக இது இருக்கும். இவை அனைத்திலும் இயங்கு மென்பொருளாக கூகுளின் ஆண்ட்ராய்ட் திகழும். இணையத்தில் இவற்றை இணைத்துவிட்டால், ஒன்றில் இருந்து மற்றொன்றுக்குத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் கட்டுப்படுத்தவும் எளிதாகிவிடும். உதாரணத்துக்கு, பாளை ரீமா ஃபேஸ்புக்கில் அவரது நண்பர் சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பாகி இருக்கும் 'மானாட மயிலாட’ எபிசோட் பார்த்து எழுதிய கமென்ட்டைப் பார்த்துவிட்டு, அலைபேசியில் இருக்கும் மென்பொருளை இயக்கி 'டி.வி-யில் ஜனவரி 18 மானாட மயிலாட’ என்றால், அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியை இணையம் மூலமாக வரவைத்து டி.வி-யில் பார்க்க முடிகிற வசதியை நோக்கி அசுர வேகத்தில் நகர்ந்துகொண்டு இருக்கிறது தொழில்நுட்ப வளர்ச்சி.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

பை தி வே, டி.வி. என்ற பிரபலமான பயனீட்டாளர் சாதனத்தை இணையத்தில் இணைக்கும் முயற்சி இப்படியாக ஆப்பிளாலும் கூகுளாலும் நடந்தபடி இருக்க, தொழில்முனையும் வேறு சில நிறுவனங்கள் பாரம்பரியமாக டி.வி-க்காகவே தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் கணினியிலும் குளிகையிலும் நுகர முடிகிற தொழில்நுட்பங்களை வெளியிட்டபடி இருக்கின்றன. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிறுவனம் ஐரியோ.காம் (aereo.com). சிறிய சைஸில் இருக்கும் ஆன்டனா ஒன்றைத் தயாரிக்கிறது இந்த நிறுவனம். இந்த ஆன்டனாவை உங்கள் வீட்டில் இருக்கும் நெட்வொர்க்கில் இணைத்துவிட்டால் போதும். டி.வி. என்ற சாதனத்துக்குப் பதிலாக, சேனல்களை நீங்கள் ப்ரவுசரில் இருந்தே பார்த்துக் கொள்ளலாம்.

நிற்க... இப்போது ஒரு சமூக ஊடக அறிமுகம்! இன்றைய தேதியில் ஹாட்டான சமூக ஊடக சேவை பின்ட்ரெஸ்ட்.காம் (Pinterest.com). மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ளும் இந்தத் தளம், இரண்டு வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்டது. கிடுகிடுவென வளர்ந்து வரும் இந்தத் தளத்துக்கு இந்தக் கட்டுரை எழுதப்படும் நாளில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள். தளத்தின் செயல்பாடு ரொம்ப சிம்பிள்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

புதிய ஊருக்குச் சென்று வந்த பின் அங்கே எடுத்த புகைப்படங்களை வீட்டிலோ, அலுவலகத்திலோ இருக்கும் பலகையில் குத்திவைத்துக்கொள்வதைப் பார்த்திருப்பீர் கள்தானே? அதே அடிப்படைதான் இந்த சேவைக்கும். இணையத்தில் உலா வருகையில், ஏதாவது ஒரு தளத்தில் இருக்கும் புகைப்படம் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. இதை உங்களுக்கே பிரத்யேகமாக இந்தத் தளத்தின் பலகையில் ஊசி குத்திவைத்துக்கொள்ளலாம். இப்படி ஊசி குத்திவைக்கப்பட்டு தொகுக்கப்பட்டு (Curation) உங்களது பலகை யில் இருக்கும் இந்தப் படங்களை ஃபேஸ் புக்கிலோ, ட்விட்டரிலோ பகிர்ந்துகொள்ள, உங்களது நண்பர்கள் அதற்கு எழுதும் கமென்ட்டுகள் சேர்ந்து வைரஸ் காய்ச்சலாக உங்களது பலகை பரவி பிரபலம் அடை கிறது.  

எப்படி இப்படித் தடாலடியாகத் தளங்கள் வெற்றியடைந்து பயனீட்டாளர்களைக் கவரு கின்றன? அடுத்த வாரத்தில் இதை விரிவாகப் பார்க்கலாம்.

log off