Published:Updated:

வீரப்பன் பார்ட் - 2

தொடங்கியது ’வன யுத்தம்’

வீரப்பன் பார்ட் - 2

தொடங்கியது ’வன யுத்தம்’

Published:Updated:

மிழ் சினிமாவின் அவுட்டோர் லொக்கேஷன்களில் தருமபுரிக்கு நீண்டகாலமாகவே முக்கிய இடம் உண்டு. இடையில் கொஞ்சம் சுணங்கி, காற்று வாங்கிய இடங்களில் இப்போது உற்சாகத்துடன் நுழையத் தொடங்கி இருக்கின்றன கோடம்பாக்கம் கேமராக்கள்!

வீரப்பன் பார்ட் - 2
##~##

இரண்டு மாதங்களுக்கு முன்பு இயக்குநர் ரவிதம்பி 'வாச்சாத்தி’ படத்துக்காக தருமபுரியில் முகாமிட்டு இருந்தார். தற்போது 'வன யுத்தம்’ படத்துக்காகக் களம் இறங்கி இருக்கிறார் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். 'வன யுத்தம்’ சந்தன வீரப்பனின் கதை. ஒகேனக்கல், ஆசனூர் உள்ளிட்ட பகுதிகளில் படத்தின் பெரும்பான்மைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாப்பாரப்பட்டி, பச்சனம்பட்டி கிராமங்களில் நடக்கிறது.

என்கவுன்டரின்போது அதிரடிப் படை டி.ஜி.பி-யாக இருந்த விஜயகுமார் கேரக்டரில் அர்ஜுன் நடிக்கிறார். அர்ஜுன் தலைமையிலான போலீஸ் டீம் ஆம்புலன்ஸில் வரும் வீரப்பனை வேட்டையாடி, வெற்றியைக் கொண்டாடுவது போன்ற காட்சிகளை விறுவிறுப்பாகப் படமாக்கிக்கொண்டு இருந்தார் ரமேஷ். படப் பிடிப்புக்கு இடையிலான ஓய்வுநேரத்தில் அவரிடம் பேசினேன்.

''உண்மைக் கதைகளை படமாக்கும் நுட்பம் தொடர்பாக 11 ஆண்டுகளாக ஆய்வு செய்துவருகிறேன். வீரப்பன் பற்றிய எத்தனையோ விஷயங்கள் பல்வேறு வடிவங்களில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் நாங்கள் படமாக்கிய விஷயங்கள் அனைத்தும் முற்றிலும் புதியவை. மக்கள் அறிந்திராத அந்தத் தகவல்கள்தான், எங்கள் கதையின் ஹீரோ. சொல்லப்போனால், இது 'வீரப்பன் - பார்ட்-2’.

வீரப்பன் பார்ட் - 2

கன்னடத்தில் 'அட்டகாசா’ என்ற பெயரிலும், தமிழில் 'வன யுத்தம்’ என்ற பெயரிலும் வரும் ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வருகிறது. வீரப்பனாக 'பொல்லாதவன்’ கிஷோரும்,  முத்துலட்சுமியாக விஜயலட்சுமியும் நடிக்கிறார்கள். லட்சுமிராய் பத்திரிகையாளராக வருகிறார். வீரப்பன் என்கவுன்டர் நடந்த நேரத்தில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா  வேடத்தில் ஜெயசித்ரா நடிக்கிறார்.

வீரப்பன் பார்ட் - 2
வீரப்பன் பார்ட் - 2

படம் தத்ரூபமாக வர வேண்டும் என்று நானும் நடிகர் அர்ஜுனும் டெல்லிக்குப் போய் டி.ஜி.பி. விஜயகுமாரைச் சந்தித்துப் பல்வேறு தகவல்களைப் பெற்றோம். சிலர் இந்த சினிமாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அதைப் பற்றி கவலை இல்லை. கண்டிப்பாக மக்கள் இந்தப் படத்துக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஏற்கெனவே, ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தை அடிப்படையாகவைத்து நான் இயக்கிய 'குப்பி’, கர்நாடகாவில் நடந்த உண்மைச் சம்பவத்தைவைத்து இயக்கிய 'காவலர் குடியிருப்பு’ ஆகிய படங்கள் அமோக வரவேற்பையும் பல்வேறு அதிர்வலைகளையும் ஒருசேரப் பெற்றது. அந்த வரிசையில் 'வன யுத்தம்’ படமும் இடம்பெறும். என் அடுத்த இலக்கு, மாவீரன் பிரபாகரனைப் பற்றிய படம்தான்!'' என்கிறார்.

- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்