Election bannerElection banner
Published:Updated:

எம்.ஜி.ஆர். கொடியை முதலில் ஏற்றியவர்!

எம்.ஜி.ஆர். கொடியை முதலில் ஏற்றியவர்!

ந்தக் காலத்தில் திண்டுக்கல் மற்றும் தேனியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் எம்.ஜி.ஆரால் பெயர் சொல்லி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராக இருந்தவர் பிரமிளா காந்தி. மதுரை ஜான்சி ராணி பூங்காவில் அ.தி.மு.க-வின் ஆரம்பகாலக் கொடியான தாமரைக் கொடியை முதன்முதலில் ஏற்றியவர். இவருடைய துணிச்சலைப் பார்த்து வியந்த எம்.ஜி.ஆர்., 1975-லேயே இவரை மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆக்கினார். ஜெயலலிதா அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனபோது, அவருக்கு எம்.ஜி.ஆரால் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட ஒன்பது பேரில் பிரமிளா காந்தியும் ஒருவர்.

எம்.ஜி.ஆர். கொடியை முதலில் ஏற்றியவர்!
##~##

ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட மகளிர் அணி செயலாளர், மதுரை மாநகராட்சியின் நியமன உறுப்பினர், சமூக நலத் துறை உறுப்பினர், வீட்டு வசதி வாரிய உறுப்பினர், 1988-ல் இருந்து 12 ஆண்டுகள் மதுரை புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் கோலோச்சிய பிரமிளா காந்தி, இப்போது 'அம்மா’ தரிசனத்துக்காகக் காத்து இருக்கிறார்.  

''88-ல் எனக்குப் புறநகர் மாவட்டப் பொறுப்பு கொடுத்ததுமே அம்மாவைப் பார்க்கச் சென்று இருந்தேன். 'பிரமிளா எப்படி இருக்கீங்க... உங்களுக்கு என்ன வேணும்? சொல்லுங்க’னு வாஞ்சையோட கேட்டாங்க. 'எனக்கு எதுவும் வேணாம்மா... என் பையன் கல்யாணத்துக்கு உங்களை அழைக்கலாம்னு இருந்தேன்; முடியாமப் போயிருச்சு’னு சொல்லிட்டு எனக்குப் பேரன் பிறந்திருந்த விஷயத்தைச் சொன்னேன். 'கல்யாணத்துக்கு அழைக்க முடியலைனு வருத்தப்பட்டீங்கள்ல... பேரனை அழைச்சிக்கிட்டு வாங்க’னு சொல்லி அவனுக்கு 'ஜெயசிம்மன்’னு பேருவெச்சு கொஞ்சினாங்க. அந்தப் போட்டோவை 'நமது எம்.ஜி.ஆர்’ல பெரிசாவும் போட்டு இருந்தாங்க. அதுதான் அம்மாவை நான் கடைசியாச் சந்திச்சது. அதுக்கப்புறம் அவங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

எம்.ஜி.ஆர். கொடியை முதலில் ஏற்றியவர்!

அமைச்சரா இருக்கிற பா.வளர்மதிகூட 10 வருஷம் எங்க வீட்டுலதான் தங்கி இருந்து படிச்சுது. அந்தக் காலத்துல மதுரைக்கு எந்தப் பெண் அமைச்சர் வந்தாலும் எங்க வீட்டுக்கு வராம போக மாட்டாங்க. சட்டமன்றத்தில் அம்மா அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டிச்சு காளிமுத்து அண்ணன் தலைமையில் மதுரையில் ஊர்வலம் போனோம். கருணாநிதி அன்னைக்கு மதுரையிலதான் இருந்தாரு. அவர்கிட்ட நல்ல பேரு வாங்கறதுக்காக போலீஸ் கமிஷனர் சிவனாண்டி, எங்க மேல காட்டுமிராண்டித்தனமாத் தடியடி நடத்துனாரு. சேலையை உருவி என்னை நிர்வாணமாக்கித் துரத்தித் துரத்தி அடிச்சாங்க. அப்ப என்னோட இடது கை முறிஞ்சுப் போச்சு. எங்களை அள்ளிட்டுப் போய் மதுரை ஜி.ஹெச்-ல அட்மிட் பண்ணுனாங்க. எங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கக் கூடாதுனு கவர்மென்ட் கொடுத்த பிரஷரால, மறுபடியும் ரோட்டுல தூக்கிட்டுவந்து போட்டுட்டாங்க'' மலரும் நினைவுகளில் மூழ்கிய பிரமிளா, தன் இப்போதைய நிலைமையைச் சொல்ல ஆரம்பித்தார்.

''அவ்வளவு கஷ்டப்பட்டு ரத்தம் சிந்தி கட்சி வளர்த்து இருக்கோம். இப்ப என்னடான்னா, திடீர் திடீர்னு யார் யாரோ வர்றாங்க. நெஞ்சுல ஒண்ணும் நாக்குல ஒண்ணுமா வெச்சுப் பழகுறாங்க. எங்களை மாதிரி  சீனியர்களைப் புதுசா வந்தவங்களுக்குத் தெரியலை. பழைய ஆளுங்களும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிறது இல்லை. மாவட்ட மகளிர் அணிக்கு அவைத் தலைவரா இருக்கேன். அவைத் தலைவருக்கு என்ன மரியாதை இருக்கும்னு உங்களுக்கே தெரியும். இங்குள்ளவங்க அந்த மரியாதையைக்கூட கொடுக்கிறது இல்லை. எல்லாத் தேர்தலிலும் ஸீட் கேக்குறேன். எதுவும் கிடைக்கலை. போன தடவை, 'மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி கேட்டதுக்கு, 'கணவரை இழந்தவங்களை அறங்காவலரா போட முடியாதும்மா’னு சொல்லிட்டாரு ஓ.பி.எஸ். பதவி கொடுக்கலைனாகூட பரவாயில்லை தம்பி. ஒரே ஒரு தடவை அம்மாவை நேரில் பார்த்து என்னோட கஷ்டத்தைச் சொல்லிட்டு வந்துட்டேன்னா நிம்மதியாக் கண்ணை மூடிடுவேன்'' விழி நீரை விரல்களால் சுண்டிவிடுகிறார் பிரமிளா.

அரசியலில் இது சாதா'ரணம்’ இல்லை!

எம்.ஜி.ஆர். கொடியை முதலில் ஏற்றியவர்!

- குள.சண்முகசுந்தரம்
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு