Published:Updated:

கன்னியாகுமரியில் கல்விப் புரட்சி!

Vikatan Correspondent
கன்னியாகுமரியில் கல்விப் புரட்சி!

ன்றிய அளவில் கூட்டங்கள் நடத்தி கட்சியை வளர்ப்பது அரசியல் கட்சிகளின் ஸ்டைல். அதேபோல, ஒன்றிய வாரியாகப் படிப்பில் பின்தங்கிய மாணவர்களைத் திரட்டி, தொடர் கூட்டங்களும் பயிற்சிகளும் நடத்தி ஆச்சர்யப்படுத்திக்கொண்டு இருக்கிறார் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன். தேர்ச்சி விகித அடிப்படையில் கன்னியாகுமரியை முதல் மாவட்டமாக மாற்ற, ராதாகிருஷ்ணன் வடிவமைத்துள்ள திட்டங்கள் அத்தனையும் அசத்தல் ரகம்.

கன்னியாகுமரியில் கல்விப் புரட்சி!
##~##

''பொதுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உறுதிமொழிப் படிவம் ஒண்ணு கொடுத்து இருக்கோம். வர இருக்கும் பொதுத் தேர்வில் மாணவர்கள் எத்தனை மார்க் எடுக்கணும்னு விரும்புறாங்களோ, அதை அந்தப் படிவத்தில் எழுதி வீட்டில் ஒட்டணும். இதைப் பார்க்கிறப்ப எல்லாம் மாணவர்களுக்கு ஓர் உந்துதல் வரும். எவ்வளவு மோசமாப் படிக்கிற பையனா இருந்தாலும் நல்லாப் படிச்சு நல்ல மார்க் எடுப்பான். இது ஒரு சிம்பிள் சைக்காலஜி.

இதே மாதிரி ஒவ்வொரு பள்ளியிலும் கல்வியில் பின்தங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். ஒன்றிய அளவில் உள்ள ஏதாவது ஒரு பள்ளியில்வைத்து திறமையான ஆசிரியர்கள் மூலமா இவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். ஏற்கெனவே மாவட்டம் முழுக்க உள்ள ஒன்றியங்களில் ஒரு சுற்று முடிந்து விட்டது. இப்போது ரெண்டாவது சுற்று.

கன்னியாகுமரியில் கல்விப் புரட்சி!

எல்லா மாணவர்களும் தங்களை சுய பரிசோதனை செய்றதுக்காக, 60 கேள்விகள் கொண்ட ஒரு புத்தகம் கொடுத்து இருக்கோம். அந்தப் புத்தகத்தின் ஒரு நகலை வகுப்பு ஆசிரியரும், இன்னொரு நகலை தலைமை ஆசிரியரும் வெச்சு இருப்பாங்க. இதனால் ஒவ்வொரு பையனோட ப்ளஸ், மைனஸ் பற்றி ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் தெரிஞ்சுக்கலாம். ஒவ்வொருத்தருக்கும் ஏற்ற மாதிரி பயிற்சி முறையை மாத்தலாம். இதே மாதிரி குழந்தைகளிடம் எப்படி நடந்துக்கணும்னு பெற்றோருக்கும், ஒழுக்கத்தைப் பற்றி மாணவர்களுக்கும் நிறைய குறிப்புகள் கொடுத்து இருக்கோம்.

பொதுவாவே 'தனியார்ப் பள்ளி மாணவர்கள்தான் அதிக மார்க் எடுக்குறாங்க’னு மக்கள் மத்தியில் ஓர் எண்ணம் இருக்கு. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தர வரிசைப் பட்டியல் கொடுத்து இருக்கோம். இதில், சென்ற கல்வி ஆண்டில் பொதுத் தேர்வில் பெற்ற தேர்ச்சி விகித அடிப்படையில் தரம் பிரித்து அனைத்துப் பள்ளிகளையும் வரிசைப்படுத்தி உள்ளோம். பின்தங்கிய நிலையில் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள் இந்தப் பட்டியலைப் பார்க்கும்போது, 'அடுத்த கல்வியாண்டில் லிஸ்ட்ல முன்னேறிக் காட்டணும்’னு முனைப்பா வேலை செய்வாங்க'' என்கிற ராதாகிருஷ்ணன், காமராஜர் விருது உள்பட பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்!

கன்னியாகுமரியில் கல்விப் புரட்சி!

-என்.சுவாமிநாதன்
படங்கள்: ரா.ராம்குமார்