Published:Updated:

என் ஃப்ரெண்டைப்போல யாரு மச்சான்!

Vikatan Correspondent
என் ஃப்ரெண்டைப்போல யாரு மச்சான்!

ரு வக்கீல், அரசியல்வாதியை  'மச்சான்’ என்று கூப்பிடுவதையும் ஒரு பிசினஸ்மேனை 'இங்க வாடா’ என்று ஒரு ஜட்ஜ் செல்லமாக அழைப்பதையும், மத்திய அரசு வழக்கறிஞர் ஒருவரின் கழுத்தைப் பிடித்து ஒரு நீதிபதி  விளையாட்டாக நெரிப்பதையும் எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா? மதுரை சட்டக் கல்லூரி 1985-86 பேட்ச் மாணவர்களின் கெட் டுகெதர் மீட்டிங்கில்தான் இத்தனைக் களேபரமும்!

##~##
நிகழ்ச்சியில் நண்பர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய கையேடுகள் வழங்கப்பட்டன. மதிய உணவுக்குப் பின்  பெரியார் நிலையத்தில் இருந்து அனைவரும் தங்கள் கல்லூரிக் காலத்தில் சென்ற 3 கி பேருந்தில் ஏறிக் கல்லூரிக்கு ஜாலி ட்ரிப் அடித்தார்கள். முதல் ஆண்டு படித்த வகுப்பறைக்குச் சென்று இருக்கைகளில் அமர்ந்து சிறிது நேரம் சின்சியராகப் பாடம் கவனித்தனர்.  'யாருப்பா அது? பின்னாடிப் பேசுறது?'' என்று புரொஃபசர் ஜாலி சவுண்ட் கொடுக்க, 'ஹோ’ என்று சவுண்ட் கொடுத்தார்கள். இறுதியாகக் கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகள் நட்டு, இனிய நினைவுகளுடன் கலைந்தது கூட்டம்!

- மோ.கிஷோர் குமார்
படம்: பா.காளிமுத்து