Published:Updated:

தமிழர் கூடு

தமிழர் கூடு

தமிழர் கூடு

தமிழர் கூடு

Published:Updated:
##~##

'தமிழர் கூடு’ (www://thamizharkoodu.blogspot.in) என்ற பெயரில் வலைப்பூ எழுதும் பிரகாஷ், தமிழர்களின் வரலாறு குறித்த ஆர்வம் அதிகம்கொண்டவர். பொதுவானப் பல விஷயங்கள் குறித்து எழுதினாலும் பழந்தமிழர் வரலாறு குறித்த தகவல்களைப் பதிவதில் இவருக்கு இருக்கும் வேட்கைக்கு இவருடைய பதிவுகளே சான்று. தனியார் தொலைக்காட்சி நிருபராகப் பணிபுரியும் அவருடைய வலைப்பூவில் இருந்து...

 இருளர்கள் என்னும் மனிதர்கள்!

தமிழர் கூடு

யந்த சுபாவம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் தேட வேண்டுமானால் இருளர் இன மக்களை நோக்கி கை காட்டி விடலாம். சக மனிதர்களிடம் மட்டும் இப்படிப் பயந்து, ஒதுங்கி, தனித்து வாழும் இருளர்களுக்கு இருளும், காடும், காட்டு விலங்குகளும் எந்தவித அச்சத்தையும் அளிப்பது இல்லை. பாம்பு என்றால் படையும் அஞ்சும் என்ற வார்த்தைகள், இவர்களுக்குப் பொருந்தாது. ஏனெனில் இருளர்களின் உடலில் இருந்து வரும் வாசனையைக் கண்டு அஞ்சி ஓடும் பாம்புகளை லாகவமாக மடக்கிப் பிடிப்பதில் கைத்தேர்ந்தவர்கள் இவர்கள். கிராமங்களுக்கு வெளியே ஆங்காங்கே 10 முதல் 15 குடும்பங்களாக வசிக்கும் இருளர்களிடம் உள்ள மற்றொரு முக்கியமான குணம், தன் இனத்தைத் தவிர வேறு யார் அளிக்கும் உணவையும் சாப்பிட மாட்டார்கள். உடும்பும், பன்றியும் உணவாக உள்ளது என்றால் இருளர்களின் வீடுகளில் விசேஷம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்!

நீர் மரம்!

தமிழர் கூடு

யிரம் ஆண்டுகள் பழமையான இந்த நீர் மரத்தின் அடித்தண்டைக் கட்டிப்பிடிக்க 20 மாணவர்கள் கைகோக்க வேண்டும். இந்த மரம் உள்ள இடம் ஜவ்வாது மலையில் உள்ள மேல்பட்டு கிராமம். திருவண்ணாமலை போளூர் வழியாகவும்  வேலூரில் இருந்து அமிர்தி வழியாகவும், திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் வழியாகவும், செங்கத்தில் இருந்தும், பல கொண்டை ஊசி(ஹேர்பின் பெண்ட்) வளைவுகள் உள்ள மலைப் பாதைகள் வழியாக ஜவ்வாது மலைக்குச் செல்ல வேண்டும்!

குள்ளர் குகைகள்!

தமிழர் கூடு

போளூரில் இருந்து சுமார் 35 கி.மீ. மலைப் பாதையில் பயணித்தால் அத்தியூரை அடையலாம். அங்கு இருந்து கால்நடையாகக் காட்டுப்பாதையில் மூன்று கி.மீ. சென்றால் மேல்சிப்பிலி என்ற மலைக் கிராமம் வரும். உண்மையான காட்டுவாசி, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி இது. இவர்கள் துணை இல்லாமல் குகை தேடி பயணித்தால் வீடு திரும்புவது அசாத்தியம். அவ்வளவு திருப்பங்களும், பள்ளத்தாக்குகளும், காட்டு விலங்குகளும் நிறைந்த அடர்ந்த காட்டுப்பாதை. கையில் நீண்ட கழிகளை ஊன்றுகோலாக எடுத்துக்கொண்டு (மனிதன் ரெண்டு கால்களில் நடக்கிறான் என யாரோ தவறாகப் பெருமைக்குச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்) நடக்கத் தொடங்கினால், குறைந்தது இரு இடங்களிலாவது கால் இடறிக் கீழே விழுந்து, சிராய்ப்புகளைப் பெற்ற பிறகு கண்ணுக்கு எட்டியவரை தெரிவது ஒற்றைப் பாறை. சுமார் இரண்டு அல்லது மூன்று கி.மீ. நீள, அகலத்துக்குக் குறையாமல் நிற்கும் உயர்ந்த

தமிழர் கூடு

ஒற்றைப் பாறை. (இன்னும் மலை முழுங்கி மகாதேவன்களிடம் இருந்து இந்தப் பாறை தப்பித்திருக்கக் காரணம், பாதை வசதி இல்லாததுதான் )

அதன் மீது ஏறிச் சென்றால் கண்களால் பார்த்து நம்ப முடியாத குள்ளர் குகைகள் கொத்துக் கொத்தாகக் காட்சி அளிக்கும். அப்பகுதியைச் சேர்ந்த மலைவாசி மக்கள் செவிவழிச் செய்தியாகச் சொல்வது, வாலியம்பாறையில் வசித்த வாலியர்கள் என்ற கூட்டம் கட்டிய குள்ளர் குகைகள் அவை என்றும்,  மூன்று அடி உயரம் கொண்ட வாலியர்கள், பிறகு வடக்கே எங்கோ சென்றுவிட்டதாகவும் சொல்கிறார்கள். ஏராளமான சிறு பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிவைத்து மேலே அகலமான ஒரு பெரிய பாறையைக் கூரையாகவைத்து குகை போல அமைத்து உள்ளனர்!

நடுகற்கள்!

ருமபுரியில் இருந்து கடலூர் வரை 'கெடிலக்கரை’ என இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பெண்ணை

தமிழர் கூடு

ஆற்றின் கரைகளில் ஏராளமான நடுகற்கள் உள்ளன. குறிப்பாக, திருவண்ணமலையில் செங்கம், தானிபாடி, தண்டராம்பட்டு ஆகிய பகுதிகளில் மிகப்பழமை வாய்ந்த நடுகற்கள் அதிக அளவில் உள்ளன. ஆநிரை கவர்தல், மீட்டல், பெண்களைக் கவர்தல், மீட்டல் ஆகிய காரணங்களுக்காக நடைபெற்ற போர்களில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு இந்த நடுகற்கள் வைக்கப்பட்டு உள்ளன.  தண்டராம்பட்டு அருகே எடத்தனூர் என்ற

தமிழர் கூடு

கிராமத்தில் தன் எஜமானனுடன் சேர்ந்து போரிட்டு இறந்த கோவிவன் என்ற நாய் உருவத்தையும் கருந்தேகத்தி என்ற அந்த வீரனுடன் சேர்த்து உருவம் பதிக்கப்பட்ட  நடுகல் உள்ளது. இதேபோல புலி குத்திபட்டான், பன்றி குத்திபட்டான், முயல் குத்திபட்டான் என வேட்டை ஆடும்போது இறந்தவர்களுக்கும் நடுகற்கள் உள்ளன. ஆண்கள் போரில் தோற்று இறக்கும்போது தங்களையும் தம் குழந்தைகளையும் காப்பாற்றிக்கொள்ள பெண்களே முன்வந்து போரிட்ட குறிப்புகளும், அப்படி வீரமாகப் போரிட்டு இறந்த பெண்களுக்கு வேடிச்சி என்ற பெயரில் நடுகற்களும் உள்ளன. அதே போலக் கணவன் இறந்த பிறகு உடன்கட்டை  ஏறிய மனைவிகளுக்கு 'தீப்பாஞ்சாள்’ என்கிற பெயரில் நடுகற்கள்  வைத்துள்ளனர் எனப்படுகிறது!

தமிழர் கூடு