Published:Updated:

ஓட்டோவியம்!

தேங்காய் ஓட்டில் திறமை காட்டலாம்

ஓட்டோவியம்!

தேங்காய் ஓட்டில் திறமை காட்டலாம்

Published:Updated:
##~##

காலை அலாரம் அடித்தவுடன், டிராக் சூட்டை மாட்டிக்கொண்டு  வாக்கிங் செல்வோம். வாக்கிங் முடித்து வீட்டுக்கு வரும் வழியில் காலி வயிற்றை நிரப்ப, இளநீர்க் கடையைத் தேடி நம் விழிகள் அலையும். ''தம்பி தண்ணி நிறைய... வழுக்கையா இளநி வேணும்பா'' என்றதும், குத்துமதிப்பாக ஒரு இளநியை வெட்டிக்கொடுத்து 20 ரூபாயை வாங்கிக்கொள்வார் கடைக்காரர். ஸ்ட்ராவே இன்றி ஒரே 'கல்ப்’பில் குடித்து முடித்து, எதற்கும் தேறாது என்று அந்த இளநி ஓட்டை ஓரமாகப் போடுவோம். ஆனால், தேறாத அந்த இளநி ஓட்டைவைத்து பல லட்சங்கள் சம்பாதிக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த லியாகத் அலிகான். கொட்டாங்குச்சி மற்றும் இளநி ஓடுகளைக்கொண்டு இவர் செய்யும் கலைப் பொருள்கள் நம்மை விழிகள் விரிய வியக்கவைக்கின்றன!

ஓட்டோவியம்!

'அப்பா மெஹபூப்ஜம் ரயில்வே ஊழியர்; கைவினைக் கலைஞரும்கூட.  அப்பாக்கிட்ட இருந்த கலை ஆர்வம் என்னிடமும் இருந்தாலும், குடும்பச் சூழ்நிலை காரணமா அதை என்னால செய்ய முடியலை. வெளிநாட்டுல அஞ்சு வருஷம் டிரைவரா வேலை செஞ்சேன். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு சொந்த ஊரான புதுச்சேரிக்கே வந்துட்டேன். 'எதுக்கும் உதவாது’னு பலரும் தூக்கிப் போடுற பொருள்களில் இருந்து கலைப் பொருள்கள் தயாரிக்க நினைச்«சன். அப்படித் தேர்வு பண்ணுனதுதான் தேங்காய். ஒரு தேங்காயோட அதிகபட்ச விலை

ஓட்டோவியம்!

20.  ஆனா அந்தத் தேங்காயைவெச்சு 1,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஆரம்பத்தில் என்னோட மூத்த பையனுக்குத் தேங்காய் ஓட்டை வெச்சு ஒரு பொம்மை செஞ்சுக் கொடுத்தேன். அவனுக்கு ஸ்கூல்ல அதுக்குப் பரிசு கிடைச்சுது. புதுச்சேரி வந்த புதுசுல டிரைவர் தொழிலையும் கலைப்பொருள்களையும் சேர்த்துத்தான் செய்துட்டு இருந்தேன். கலைப் பொருள்கள் செய்றதுல ஆர்வம் அதிகமானதால் டிரைவர் வேலையவிட்டுட்டு இப்ப முழு நேரமா, தேங்கா ஓட்டைவெச்சு என்னென்ன செய்ய முடியுமோ எல்லாமே செய்துகிட்டு இருக்கேன்.

ஓட்டோவியம்!

2005-ல் தேங்காய் ஓடுகள் மூலம் நான் செஞ்ச கலைப்பொருள்களை விற்க ஆரம்பிச்சேன். ஒரு பக்கம் பாராட்டு வந்தாலும் இன்னொரு பக்கம் கேலி, கிண்டல், நக்கல், நையாண்டியும் வந்து சேர்ந்துச்சு. அவ்வளவா லாபம் வரலைன்னாலும், தொழிலை மட்டும் விடக்கூடாதுங்குற முடிவுல இருந்தேன். பிறகு நிறைய டிசைன்கள் செய்ய ஆரம்பிச்சேன். செயின், கம்மல், கீ-செயின், பெல்ட், காப்புனு எவ்வளவு முடியுமோ... என்னென்ன செய்ய முடியுமோ... எல்லாமே செஞ்சேன். இப்ப ஓரளவுக்குப் பொருளாதார ரீதியில் நல்ல நிலைமையில் இருக்கேன். நான் தயாரிக்கிற பொருள்களில் இயற்கையாகவே பளபளப்புத் தன்மை இருக்கு. அதனால் வார்னிஷோ, ரசாயனங்களோ எதுவும் பயன்படுத்துவது கிடையாது.

ஓட்டோவியம்!

முதல்ல தேங்காய் வாங்கி, ஒரு கண்ணுல ஓட்டை போட்டு ஆறு மாசம் அதை அப்படியே தொடாம வெச்சுடுவோம். ஆறு மாசத்துக்குப் பிறகு தண்ணீர் வற்றி தேங்காய் இறுகிப் பளபளப்பாத் தெரியும். அந்தத் தேங்காயை வெச்சுதான் எல்லா கலைப் பொருள்களும் செய்வோம். கற்பனைக்கு எட்டாத கலைப் பொருள்களைத் தேங்காய் ஓடுகளில் செய்யலாம். டெல்லி, பாம்பே, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத்னு வெளி மாநிலங்களுக்குப் போய் கண்காட்சிகளில் கலந்துக்கும்போது, ஏராளமான வரவேற்பும் ஏகப்பட்ட பாராட்டுக்களும் கிடைக்கும். எதிர்காலத்தில் இன்னும் நெறைய  சாதிக்கணும்... இதை ஒரு பெரிய நிறுவனமா மாத்தணும்... இப்படிப் பல ஆசைகள் இருக்கு'' என்கிறார் லியாகத் அலிகான்.

எவ்வளவோ செய்கிற உங்களால் இதையும் செய்ய முடியும், இன்னமும் செய்ய முடியும் லியாகத்!

- நா.இள.அறவாழி
படங்கள்: ஆ.நந்தகுமார்