Published:Updated:

என்ன அழகு... எத்தனை அழகு

அழகுக் கலை நிபுணர் வீணா குமாரவேல் படங்கள்: கே.கார்த்திகேயன்

என்ன அழகு... எத்தனை அழகு

அழகுக் கலை நிபுணர் வீணா குமாரவேல் படங்கள்: கே.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

மேக்கப் என்பது மேஜிக் இல்லை. விசேஷம், திருமணம் என்று தயாராகும்போது அந்த தினத்தன்று மட்டும் மேக்கப் பொருட்களை முகத்தில் பூசிக்கொண்டால்... முழுமையான ரிசல்ட் கிடைக்காது. பழுப்பு நிறச் சுவரில் சிவப்பு பெயின்ட் அடித்ததைப் போல், திடீர் மேக்கப்பும் உங்கள் முகத்தோடு ஒட்டாமல் நிற்கும். மாறாக, விசேஷ தினத்துக்கு முன் பல கட்டங் களாக அதற்குத் தயாராக வேண்டும். கேசம், சருமம், நகம், பாதம் என்று பார்த்துப் பார்த்து ஒவ்வொரு அங்கத்தையும் மெரு கேற்ற வேண்டும்.

உதாரணமாக, திருமணத்துக்குத் தயாராகும் மணப்பெண்கள், குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தாவது சருமப் பாதுகாப்பு விஷயங்களை ஆரம்பிக்கலாம். இதை 'ப்ரீ பிரைடல் பேக்கேஜஸ்’ என்பார்கள். 'இதெல்லாம் என் வேலைப்பளுவுக்கு இடையே சாத்தியம் இல்லையே...’ என்ப    வர்கள், குறைந்தபட்சம் திரு    மணத்துக்கு இரண்டு வாரங்கள் முன்பு இருந்தாவது நேரம் ஒதுக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப்ரீ பிரைடல் பேக்கேஜ்... இதில் என்னென்ன அழகுப் பராமரிப்புகள் அடங்கும்..?

என்ன அழகு... எத்தனை அழகு

ஃபேஷியல், ஹெட் மஸாஜ், ஃபேஸ் மசாஜ், ஃபுல் பாடி மஸாஜ், பிளீச், முகத்தில் அங்கும் இங்குமாக ரோமங்கள் துளிர்த்திருந்தால் அவற்றை அகற்றும் 'புல்லி வாக்ஸிங்’ ஸ்டெப்ஸ், நகங்களை ஒழுங்கு செய்யும் மெனிக்யூர், பாதங்களை பஞ்சாக்கும் பெடிக்யூர் என்று சம்பந்தப்பட்ட பெண்ணின் முகத்தை மட்டுமல்ல... முழு உடலையும் மெருகேற்றும் அழகுப் பராமரிப்பு வேலைகள் படிப்படியாக ப்ரீ பிரைடல் பேக்கேஜஸில் மேற்கொள்ளப்படும்.

என்ன அழகு... எத்தனை அழகு

சிலருக்கு சில காஸ்மெட்டிக் புராடக்ட்ஸ் அலர்ஜியைத் தரலாம். சிலருக்கு சில கலர் ஷேட்கள் பொருந்தாமல் போகலாம். இந்தச் சிக்கல்களை எல்லாம் பல சிட்டிங்குகளில் கண்டறிந்து, திருமணத்தன்று அந்த மணப்பெண்ணுக்கு எந்தக் குழப்பமும் இல்லாமல் முழுமையாகப் பொருந்துகிற மேக்கப்பை தேர்வு செய்வதற்கும், இந்த ப்ரீ பிரைடல் பேக்கேஜஸ் உதவும். இங்கே மாடல் சீம்தா, பல கட்டங்களாக 'ப்ரீ பிரைடல் பேக்கேஜஸ்’ எடுத்துக் கொண்டவர். அதன் ஃபைனல் ரிசல்ட்தான் மேரேஜ் காஸ்ட்யூமில் அவரை ஜொலிக்க வைக்கிறது.

'ஒருவழியா திருமணம் முடிஞ்சுடுச்சு...’ என்று மணமாலையுடன் மேக்கப் பராமரிப்புகளையும் கழற்றினால்... 'இந்தப் பொண்ணா அது... கல்யாணத்தன்னிக்கு என்னென்னவோ பூசி அழகாக்கிட்டாங்கப்பா..!’ என்று புகுந்த வீட்டில் பேச்சு எழலாம். எனவே, திருமணத்துக்குப் பின்பும் அழகில் அக்கறை வேண்டும். குறிப்பாக, திருமணத்துக்குப் பிறகு ஒரு வார காலத்துக்கு ஏதாவதொரு சடங்கு இருக்கும். முன்பு கவனம் கொடுத்த அத்தனை அழகுப் பராமரிப்பு விஷயங்களுக்கும் இப்போதும் நேரம் ஒதுக்க வேண்டும். இதற்கும் பார்லர்களை நாடலாம். இதை 'போஸ்ட் பிரைடல் பேக்கேஜஸ்’ என்பார்கள்.

என்ன அழகு... எத்தனை அழகு
 

பொதுவாகவே, பப்பாளி, பட்டர் புரூட் (அவகடோ), ஆரஞ்சு, நெல்லி... இவற்றைச் சாப்பிடுவதுடன், இந்த ஃப்ரூட் பேஸ்டு பியூட்டி புராடக்ட்களையும் எடுத்துக் கொள்வது... சரும மினுமினுப்புக்குக் கை கொடுக்கும். இந்த அக்கறையை திருமணம் மற்றும் அது முடிந்த நாட்களில் மட்டுமல்ல... திருமணத்தை அடுத்து வரும் 30... 40... வயதுகளிலும் தொடர்ந்து அளித்து வந்தால்... ஆல்வேஸ் பியூட்டிதான்!

- மிளிரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism