Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

பின்ட்ரெஸ்ட் ( Pinterest.com)  தளம் கிடுகிடுவென வளர்ந்து பிரமாண்ட வெற்றி அடைந்ததற்கு ஒரு காரணம்,  பெண்கள். அதுவும் 18-ல் இருந்து 35 வயதுக்குள் இருக்கும் பெண்கள். 95 சதவிகிதத்துக்கும் மேலான பின்ட்ரெஸ்ட் பயனீட்டாளர்கள் மேற்படி வயதுக்கு உட்பட்ட பெண்களே. பயனீட்டாளர் இணைய ( Consumer web) உலகத்தைப் பொறுத்தவரை இந்தக் குழுவினரைத்தான் மிக முக்கியமாகக் கருதுகிறார்கள் இணைய மார்க்கெட்டிங் நிபுணர்கள். காரணம், இவர்கள்தான் பொருட்கள் வாங்குவதுபற்றி முடிவு எடுக்கிறார்கள். தங்களுக்கு மட்டும் அல்ல... வீடு, கணவன், குழந்தைகள் எனப் பலருடைய தேவைகளைக் குறிப்பு எடுத்து அவற்றைப் பற்றிய முடிவுகள் எடுப்பதும் இந்தக் குழுவினரே என்பதால், இவர்களுக்கு ஏகப்பட்ட மரியாதை. பெரும்பாலான சமூக ஊடகச் சேவை பிரபலமாவதும் இவர்களால்தான். பின்ட்ரெஸ்ட் இதற்கு லேட்டஸ்ட் உதாரணம்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் காரணத்தால், பெண்களை மட்டுமே குறிவைத்து செய்யப்படும் விளம்பரங்கள் இணையத் தொழில்நுட்பங்களை அடிப்படையாகவைத்து நவீனமானபடி இருக்கின்றன. 'இதயம் நல்லெண்ணெய்தான் வேணும். போயி வாங்கிட்டு வாங்கன்னா வாங்கிட்டு வாங்களேன்’ என்று ஏவல் இடும் விளம்பர டெக்னிக்குகள் மாறிப்போய், பார்ப்பவரின் முகவெட்டை அடையாளம் (Facial Recognition) கொண்டு பெண் என்றால் மட்டுமே வெளியாகும் விளம்பரப் பலகைகள் லண்டன் வெஸ்ட் எண்ட் பகுதியில் இருக்கும் ஆக்ஸ்ஃபோர்டு தெருவில் சென்ற சில வாரங்களாக வைக்கப்பட்டு இருக்கின்றன. பார்ப்பவர் ஆணாக இருந்தால், நேரத்தை வீணடிக்காமல் வலைதளத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றபடி அவர்களை அனுப்பிவைக்கிறது இந்த விளம்பரப் பலகை.

இன்றைய நாளில், ஃபேஸ்புக்கைச் சார்ந்துதான் புதிய சேவைகளைக் கட்டியாக வேண்டும் என்ற நிலை வந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், ஆன்லைன் பால்வெளிப் பெருவழியில் (Milky way galaxy) சூரியன்போல ஆகிவிட்டது ஃபேஸ்புக். அதைச் சார்ந்து இயங்கும் கோள்கள்போல மற்ற சேவைகள் மாறிக்கொண்டு இருக்கின்றன. டிவிட்டரை இந்த உருவகத்தில் எங்கே சேர்ப்பது என்பது தெரியவில்லை. ஃபேஸ்புக் ராஜா என்றால், டிவிட்டரை ராணி என்று சொல்லிக்கொள்ளலாம்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

சமூக ஊடகச் சேவைகள் பரவலாக மக்கள் வாழ்க்கையில் ஒன்றறக் கலந்து பங்கு பெற்றபடி இருக்கும் இன்றைய நாளில், இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு இருப்பது தொலைபேசி நிறுவனங்கள் என்கிறது சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஓர் அறிக்கை. ஓவம் (http://ovum.com) என்ற நிறுவனம் தயாரிக்கும் இண்டஸ்ட்ரி ரிப்போர்ட்டுகளுக்கு பங்குச்சந்தையில் ஈடு படும் நிறுவனங்களிடமும், நிபுணர்களிடமும் நல்ல மரியாதை உண்டு. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் வசதியைக் காட்டி அதிக பயனீட்டாளர்களை அலைபேசிகளைப் பயன்படுத்த வைப்பது உண்மைதான் என்றாலும், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றின் மூலம் செய்தி பரிமாறிக்கொள்வதால் அலைபேசி உள்கட்டமைப்பில் இயங்கும் குறுஞ்செய்தி பலத்த அடி வாங்கியிருக்கிறது என்கிறது இந்த ரிப்போர்ட். குறுஞ்செய்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாததால், 2011-ல் மட்டும் சமூக ஊடகங்களால் உலகம் முழுதும் உள்ள அலைபேசி சேவை நிறுவனங்கள் 14 பில்லியன் டாலர்களை இழந்திருக்கின்றன. அலை பேசிப் பயனீட்டாளர் ஒருவர் சராசரியாகத் தினமும் 9 நிமிடங்களைத் தங்கள் அலைபேசியில் இருந்து சமூக ஊடகங்களை, அதுவும் குறிப்பாக ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் இரண்டையும் பயன்படுத்தியிருக்கிறார்.

யூடியூப் வீடியோ தளம் என்பதால், அலைபேசி நிறுவன உள்கட்டமைப்புக்குச் சாதாரண தளத்தைப் பயன்படுத்துவதுடன் ஒப்பிடுகையில் 300 மடங்கு அதிகக் கற்றை அகலம் ( bandwidth) பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதைப் பயன்படுத்த அனுமதிக்கும் அலை பேசி நிறுவனத்துக்குப்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

பெரிய லாபம் ஒன்றும் இல்லை. அலைபேசி நிறுவனங்கள் தங்களது இண்டஸ்ட்ரி சந்திக்கும் சவால்களில் ஒன்றாக இருந்துவரும் இந்தப் பிரச்னை சாதாரண பயனீட்டாளர்களையும் எட்டி விட்டது. வளரும் நாடுகளில் ஐ-போன், ஆண்ட்ராயிட் போன்ற ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தவில்லை என்பதால், மிகவும் சிம்பிளான அலைபேசிகளிலும் யு.எஸ்.எஸ்.டி. (Unstructured Supplementary Service Data) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் நட்பு விண்ணப்பம் அனுப்புவது, சுவரில் எழுதுவது போன்ற  பல அம்சங்களைச் செய்ய முடியும்.

பிரெஞ்ச் டெலிகாமின் அங்கமாக இருக்கும் அலைபேசி சேவை நிறுவனமான ஆரஞ்ச், எகிப்து நாட்டில் யு.எஸ்.எஸ்.டி-யை இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிட, அதற்குள் 4 லட்சம் பயனீட்டாளர்கள் அதில் இணைந்துவிட்டார்கள். இந்தியாவின் ஏர்செல் நிறுவனமும் யு.எஸ்.எஸ்.டி-யைப் பயன்படுத்தி ஃபேஸ்புக் பயனீட்டைக் கொடுக்கிறது. வெகு விரைவில் டாக், எஸ்.எம்.எஸ். டேட்டா மட்டுமல்ல, ஃபேஸ்புக்குக்கும் டாப்-அப் செய்ய வேண்டி வரும்.

LOG OFF

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism