Published:Updated:

”தொழிலாளர்களின் தியாகம் போற்றிய தி.நகர்!”

”தொழிலாளர்களின் தியாகம் போற்றிய தி.நகர்!”

”தொழிலாளர்களின் தியாகம் போற்றிய தி.நகர்!”

”தொழிலாளர்களின் தியாகம் போற்றிய தி.நகர்!”

Published:Updated:
”தொழிலாளர்களின் தியாகம் போற்றிய தி.நகர்!”

''நீதிக்கட்சித் தலைவர் சர் பி.டி. தியாக ராயருடைய நினைவா உருவாக்கப்பட்டது தி.நகர். 1923-ல் இந்த நகர் உருவானபோது இங்கு ஒரு சில வீடுகள், கடைகள் மட்டுமே இருந்தன. பரபரப்பான பகுதியாக மாறிவிட்ட தி.நகரில் நடேசன், பனகல், ஜீவா பூங்காக்களே மக்களின் இன்றைய ஆறுதல். தி.நகரை உருவாக் கியபோதே பூங்காக்களையும் திட்டமிட்டு அமைத்ததை நினைக்கும்போது வியப்பாகத்தான் உள்ளது!'' - தான் பிறந்து வளர்ந்த தி.நகரின் கதையைச் சொல்கிறார் நல்லி குப்புசாமி.

”தொழிலாளர்களின் தியாகம் போற்றிய தி.நகர்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''கிழக்கில் அண்ணா சாலை, மேற்கில்மாம்பலம் நெடுஞ்சாலை, வடக்கில் பசுல்லா சாலை, தெற்கில் பர்கிட் சாலை. இவைதான் தி.நகரின் நான்கு எல்லைகள். பொதுவாக, எல்லா நகரங்களிலும் அதன் கிழக்குப் பகுதி வேகமாக வளரும் என்பார்கள். ஆனால், தி.நகரைப் பொறுத்தவரை அது தலைகீழ். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், கடைகள் என, அன்று முதல் இன்றுவரை தெற்குப் பகுதியே வளர்கிறது.

காலப்போக்கில் உஸ்மான் சாலை வடக்கு, தெற்கு எனப் பிரிக்கப்பட்டது. அதே போல் தெற்கு, தென்மேற்கு, வடக்கு என, போக் சாலையும் பிரிக்கப்பட்டன. உஸ்மான் சாலையின் பெயர் மட்டும் மாறவில்லை. ஆனால், வடக்கு போக் சாலை நாகி ரெட்டியின் சகோதரர் பெயரால் பி.என்.ரெட்டி சாலை என்றும் தெற்கு போக் சாலை செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்றும், கிரிபித் சாலை மகாராஜபுரம் சந்தானம் சாலை என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

பி.என்.ரெட்டி சாலையில் தொடங்கி சிவாஜி கணேசன் சாலை வழியாக வந்தால், அன்று நிறைய கல்யாண மண்டபங்களைப் பார்க்கலாம். இன்று அவை குடியிருப்பு, வணிக வளாகங்களாக வளர்ந்து நிற்கின்றன. கோபதி நாராயணசாமி, வெங்கட் நாராயணா சாலைகள்தான் தி.நகரின் முக்கியத் தெருக்கள். இந்தத் தெருக்களில் போகும்போது எல்லாம் அன்று பார்த்த மரங்கள், பழங்கால பங்களாக்கள் என் மனக் கண்ணில் விரியும். அன்று இங்கு கட்டடம் கட்டசதுர அடிக்கு வெறும் எட்டணா மட்டுமே செலவு. 5 ஆயிரம் சதுர அடி கட்டடம் கட்ட 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு ஆனது. இப்போதோ சதுர அடி பல ஆயிரங்களைத் தொடும்.

ரேடியோ, தொலைபேசி ஒருசில வீடுகளில் மட்டுமே இருந்தன. தொலைபேசியோ ரேடியோவோ வேண்டும் என்றால் அரசிடம்விண் ணப்பித்து, குறைந்தது 10 ஆண்டு கள் காத்திருக்கவேண்டும். தற் போது துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பது போல், அன்று ரேடியோ வைத்திருப்பவர்களுக்கு லைசென்ஸ் உண்டு. வருஷத்துக்கு ஒருமுறை போஸ்ட் ஆபீஸில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, அந்த லைசென்ஸைப் புதுப்பிக்க வேண் டும். அன்று பனகல் பூங்காவில் ஒரு ரேடியோ இருந்தது. தினமும் இரவு 7.15 மணிக்கு டெல்லி ஆல் இண்டியா ரேடியோவில் தமிழ்ச் செய்தி அறிக்கை ஒலிபரப்பு ஆகும். அதைக் கேட்பதற்காகவே பனகல் பூங்காவில் மக்கள் கூடுவார்கள்.

தியாகராயா, டாக்டர் நாயர், பனகல், நடேசன்... எனத் தி.நகரின் தெருக்கள் மற்றும் பூங்காக்களின் பெயர்கள் நீதிக் கட்சித்தலைவர் கள், பிரமுகர்களின் பெயர்களிலேயே அமைந்து உள்ளதும் ஒரு சிறப்புதான். ஹபிபுல்லா,பர்கிட் இருவருமே சென்னை மாநகராட்சி முன்னாள் கமிஷனர்கள். போக், கிரிபிரித், கோட்ஸ்போன் றோர் தி.நகரை நிர்மாணித்த பொறியாளர்கள். இதில் நாதமுனி மற்றும் கோவிந்த் பெயரில் உள்ள தெருக்கள் மட்டும் விதிவிலக்கு. தி.நகர் உருவாகும்போதே இங்கு பாதாளச் சாக்கடை அமைக்கப்பட்டது. அப்போது நாதமுனி, கோவிந்த் என்ற இரு தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கி இறந்தனர். அவர்களுடைய தியாகத்தைப் போற்றவே இரு தெருக்களுக்கும் அவர்களுடைய பெயர்வைக்கப்பட்டன.  

பாண்டி பஜார் என அழைக்கப்படும் தெருவின் பெயர், தியாகராயா சாலை. இன்று தி.நகரின் பரபரப்பான பகுதியான தெற்கு உஸ்மான் சாலையும் ரெங்கநாதன் தெருவும் ஒருகாலத்தில் குடியிருப்புகள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆரம்பத்தில் ரெங்கநாதன் தெருவில் மூன்றே மூன்று கடைகள் மட்டும்தான் இருந்தன.

திரைப்படப் பணிகள் கோடம்பாக்கத்தில் நடந்ததால், அருகில் உள்ள தி.நகரில்தான் பல் வேறு சினிமாப் பிரபலங்கள் தங்கி இருந்தனர். தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி, கவியரசு கண்ணதாசன், கண்ணாம்பா, சின்னப்பா தேவர், தங்கவேலு, இயக்குநர் ஸ்ரீதர், பானுமதி, சாவித்திரி, கண்டசாலா, 'வியட்நாம் வீடு’ சுந்தரம் என இங்கு தங்கி இருந்த சினிமாப் பிரபலங்கள் ஏராளம். ராஜாஜி, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என இங்கு இருந்து கோட்டைக்குப் போனவர்களும் அதிகம்.நாகேஷ், ராஜகுமாரி தியேட்டர்கள் பாண்டி பஜாரின் பழைய அடையாளங்கள். இதில் நாகேஷ் தியேட்டர், கல்யாண மண்டபமாகவும் ராஜ குமாரி தியேட்டர், வணிக வளாகமாகவும் மாறி விட்டன. ஆனால், மாறாமல் இருப்பது மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் மட்டுமே.

மூச்சுத் திணறவைக்கும் மக்கள் கூட்டம், புழுதி, புகை, மாசு என மாறிவிட்டாலும் 'நான் தி.நகர்க்காரன் என்பதில் எனக்கு என்றைக்கும் மாறாதப் பெருமை உண்டு!''

”தொழிலாளர்களின் தியாகம் போற்றிய தி.நகர்!”

- சி.காவேரி மாணிக்கம்,
படம்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism