Published:Updated:

’எந்திரன்’ முத்ல் ’நண்பன்’ வரை!

அசத்தும் மெரினா பிரேக்கர்ஸ்

’எந்திரன்’ முத்ல் ’நண்பன்’ வரை!

அசத்தும் மெரினா பிரேக்கர்ஸ்

Published:Updated:

'காற்று வாங்குவோர், காதல் செய்வோர் என மெரினா கடற்கரையில் விதவிதமான மனிதர்கள் நடமாடுவது உண்டு. ஆனால், 'ஸ்ட்ரீட் பிரேக்கர்ஸ்’-ஐப் பார்த்து இருக்கிறீர்களா? ரொம்பவே வித்தியாசமானவர்கள். ஜிம்னாஸ்டிக் கலந்த டான்ஸ் பயிற்சிக்காகக் கடற்கரையில் கூடும் இவர்களைப் பார்க்கவே பெரும் ரசிகர் கூட்டம் உண்டு’ - இது திருவல்லிக்கேணி வாசகர் தம்புசாமி வாய்ஸ் ஸ்நாபில் நமக்குச் சொன்ன தகவல். உடனே மெரினாவுக்குக் கிளம்பிச் சென்று 'ஸ்ட்ரீட் பிரேக்கர்ஸ்’-ஐச் சந்தித்தேன்.

’எந்திரன்’ முத்ல் ’நண்பன்’ வரை!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சார் எங்க டீம் எப்படி உருவாச்சுங்கிறதை முதல்ல சொல்லி டுறேன்'' எனத் தொடங்கிய தும்ளி, ''அப்ப எங்களுக்கு எட்டு, பத்து வயசு இருக்கும். கிரிக்கெட், கில்லினு விளையாடிக்கிட்டு இந்த மெரினாவில் சுத்திக்கிட்டு இருப்போம். சினிமா ஸ்டன்ட் பயிற்சிக் காக நிறையப் பேர் இங்க வந்து பிராக்டீஸ் பண்ணுவாங்க. பூபாலன் மாஸ்டர் பயிற்சி தர்றதை ஆ...னு வாயைப் பிளந்துக்கிட்டு வேடிக்கை பார்ப்போம். எப்பவும் போல் வேடிக்கை பார்த்துட்டு இருந்த எங்களைத் திடீர்னு ஒருநாள் கூப்பிட்ட மாஸ்டர், 'வாங்கடா நீங்களும் வந்து பழகுங்கடா’னார். மறுநாள் அதிகாலையில் நாங்க எல்லாம் ஆஜர். அன்னைக்கு ஆரம்பிச்ச பழக்கம், கடந்த 12 வருஷ மாத் தொடருது'' என்று சிரிக்கிறார். இந்த டீம் நிறைய திரைப் படங்களில் பாடல் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் பங்குபெற்று இருக்கிறதாம்.

''மாஸ்டர் எங்களுக்கு ஒரு மாசம்தான் பயிற்சிக் கொடுத்தார். அப்புறம் நாங்களே ஐடியா பண்ணி புதுசுபுதுசா ஜிம்னாஸ்டிக், ஸ்டன்ட்னு பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சோம். எங்களைத் தினமும் இங்க பார்த்த ஒருத்தர், 'சூப்பரா பண்றீங்க தம்பி. இதையே கொஞ்சம் டான்ஸ் ஸ்டைல்ல மாத்தி எனக்கு மேடையில பண்ணித் தர முடியுமா?’னு கேட்டார். முதல் மேடை. பயந்தபடி ஏறி செம ஜிம்னாஸ்டிக் டான்ஸ் போட்டோம். ஆடியன்ஸும் எக்கச்சக்கமா ரசிச்சாங்க. 'நம்மகிட்டேயும் மேட்டர் இருக்கு மச்சி’னு அப்பதான் எங்களுக்கே புரிஞ்சுது. அப்ப எங்களுக்கு 12 வயசு. 'இனிமே சீரியஸா பிராக்டீஸ் பண்ணி சினிமாவுல பெரிய ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்டா வரணும்’னு சபதம் எடுத்தோம்'' என்கிற தும்ளியை இடைமறித்துத் தொடர்கிறார் ஜான் பிரிட்டோ.

’எந்திரன்’ முத்ல் ’நண்பன்’ வரை!

''எல்லாருக்கும் இதுல ஆர்வம் இருந்ததால படிப்பு பாதியிலயே நின்னுபோச்சு. அப்ப கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. இப்ப ஒரு மாசத்துக்குக் குறைஞ்சது 15 புரொகிராம் பண் ணுறோம். சூப்பர் ஸ்டார் நடிச்சு உலகத்தைக் கலக்கின 'எந்திரன்’ படத்தில், 'இரும்பிலே ஒரு இருதயம் படைத்ததோ’ பாட்டுல நாங்க எல்லாரும்தான் தலைவருக்குப் பின்னாடி டான்ஸ் ஆடினோம். 'நண்பன்’ படம்  வரைக்கும் குறைந்தது 50 படங்களுக்கு மேல டான்ஸ் ஆடி இருக்கோம். எங்க எல்லாருக்கும் ஸ்டன்ட் மாஸ்டர் ஆகணும்கிறதுதான் ஆசை'' என்கிறார்.  

'எப்படியாவது சினிமா யூனியன்ல சேரணும். அதுக்கு நிறைய பணம் செலவு ஆகும்னு சொல்றாங்க. அதுக்காகத்தான் கொஞ்சம் கொஞ்சமாப் பணம் சேர்த்துட்டு இருக்கோம். கண்டிப்பா  ஒருநாள் பெரிய ஆளா வருவோம்'' எனக் கடல் அலையின் சத்தத்துக்கு இடையில் பாபுசொன்ன போது, அந்த அலைகள் அவர் சொன்னதை ஆமோதிப்பது போலவே தோன்றியது!

’எந்திரன்’ முத்ல் ’நண்பன்’ வரை!

- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: ஜெ.தான்யராஜு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism