Published:Updated:

’சில்வியா’ என்றொரு அம்மா!

’சில்வியா’ என்றொரு அம்மா!

’சில்வியா’ என்றொரு அம்மா!

’சில்வியா’ என்றொரு அம்மா!

Published:Updated:

தரவற்றோருக்கு உதவிக் கரம் நீட்ட எத்தனையோ காப்பகங்கள் இருக்கலாம். ஆனால் ஆசிரியர் சில்வியா, தன் ஓய்வூதியப் பணத்தின் மூலம் பட்டினப்பாக்கத்தில் தன் வீட்டிலேயே நடத்திவரும் 'அன்னை தெரசா காப்பகம்’ ரொம்பவே ஸ்பெஷல். ஒரு மாலைப்பொழுதில் சில்வியாவைச் சந்தித்தேன்.

’சில்வியா’ என்றொரு அம்மா!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எங்களுக்குக் கல்யாணம் ஆகி 40 வருஷம் ஆச்சு. குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தை இல்லாததை நினைச்சு நிறைய நாட்கள் தூங்காமத் தவிச்சி இருக்கேன். ஒருமுறை மதுரையில் ஒரு விழாவுக்குப் போயிருந்தப்போ ஊருக்கு ஒதுக்குப்புறமாக் குடிசையில ஒரு குடும்பத்தைச் சந்திச்சேன். நாலஞ்சு குழந்தைகள் எந்த ஆதரவும் இல்லாமல் வளர்றதைப் பார்த்து அதிர்ச்சியாகிட்டேன். அதுல ஒரு குழந்தைக்கிட்ட பேசினப்ப, 'என் சின்ன வயசுலயே ஒரு சண்டையில அப்பாவை வெட்டிட்டாங்க. ஆனால், யாரும் எதுவும் கேட்கலை; உதவிக்கும் வரலை. அதுக்குப்பிறகும் தொல்லை கொடுத்ததால நாலு பொண்ணுங்களையும் அழைச்சுக்கிட்டு எங்க அம்மா இங்க வந்துட்டாங்க. அம்மா கூலி வேலைக்குப் போறாங்க. எனக்குப் படிக்கணும்னு ஆசைதான். ஆனா, எந்த ஸ்கூல்லயும் சேர்க்க மாட்டேங்கிறாங்க. அதனால நானும் மாட்டுக் கொட்டகை வேலைக்குப் போகப்போறேன்’னு அவ அழுதப்ப, மனசு கலங்கிடுச்சு.

அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்துக்குப் போய் அந்தச் சிறுமியை சேர்த்துக்கச்சொல்லி கேட்டேன். 'அவளை எல்லாம் இங்க சேர்க்க முடியாது. வேணும்னா சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில சேர்த்துவிடுங்க. அப்படிப்

படிச்சா மட்டும் இவ என்ன பெரிய கலெக்டராவா ஆகப்போறா’னு சிரிச்சார் அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர். ஒரு ஆசிரியரே இப்படிப் பேசினது அதிர்ச்சியா இருந்தது. அவளைக் கையோட சென்னைக்கு அழைச்சுட்டு வந்துட்டேன். இப்ப அவளை நான்தான் படிக்கவைக்கிறேன்.  

’சில்வியா’ என்றொரு அம்மா!

நாங்க தத்து எடுக்கும் குழந்தைகள் எல்லாருமே 8-ம் வகுப்புக்கு மேல உள்ளவங்கதான். இப்பக்கூட விஜயலட்சுமிங்கிற என் பொண்ணு பி.ஏ., பி.எட். முடிச்சுட்டு இங்க ஒரு ஸ்கூல்ல 8-ம் வகுப்பு டீச்சரா இருக்கா. பெங்களூருவில் என் பிள்ளை ஒருத்தன் எம்.எஸ்சி. முடிச்சுட்டு ஒரு பிரபல கம்பெனியில் மேனேஜரா இருக்கான். பிள்ளைகளைத் தத்தெடுத்துப் படிக்கவைக்கிறது மட்டுமில்லாம அவர்களுடைய வேலைவாய்ப்புவரை கூடவே இருக்கோம். இதுவரை 25 ஏழை மாணவர்களைத் தத்தெடுத்திருக்கோம். இது தவிர மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள் 25 பேரைத் தத்தெடுத்து வளர்க்கிறேன்.

ஃபிரான்ஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒண்ணு எங்களின் சேவையைப் பாராட்டி தானாக முன்வந்து சில உதவிகளைச் செய்யுது. பலர், 'இந்த வயசான காலத்துல இதெல்லாம் உனக்குத் தேவையா? ரிட்டையர்டு ஆன பணத்தைவெச்சு நிம்மதியா வாழ்க்கையை ஓட்டாம ஏன் இப்படி அவஸ்தைப்படுற?’னு கேட்பாங்க. எனக்குக் குழந்தைகள் இல்லைங்கிற குறையோ, துக்கமோ இப்ப இல்லை. என்னை எல்லாக் குழந்தைகளும் 'அம்மா, அம்மா’னு கூப்பிடும் போது புது உலகத்தில் வாழ்வதுமாதிரியான உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் ஏற்படும். போன மாசம்கூட மதுரையில் எங்க அன்னை தெரசா காப்பகத்தில் வளர்ந்த எங்க பொண்ணும், பையனும் தங்களோட திருமணத்துக்காகக் கூப்பிட்டு இருந்தாங்க. நானும் போனேன். கிராமத்துக்குள் நுழைந்தபோது, வழிநெடுக வாழ்த்து போஸ்டர்கள், வானுயர கட்-அவுட்கள்னு வரவேற்றாங்க. இந்த அன்பைவிட வேற என்ன சார் வேணும் சொல்லுங்க? நான் பெற்றெடுத்திருந்தால்கூட இந்த மதிப்பும் அன்பும் கிடைத்திருக்குமானு தெரியலை!'' என்று சிலிர்க்கிறார் சில்வியா.

’சில்வியா’ என்றொரு அம்மா!
’சில்வியா’ என்றொரு அம்மா!

- வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ம்.உசேன்

##~##
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism