Published:Updated:

”எல்லோரும் படிக்கணும் அதுக்கு நான் உதவணும்!”

”எல்லோரும் படிக்கணும் அதுக்கு நான் உதவணும்!”

”எல்லோரும் படிக்கணும் அதுக்கு நான் உதவணும்!”

”எல்லோரும் படிக்கணும் அதுக்கு நான் உதவணும்!”

Published:Updated:

திகாலை 4 மணி முதல் 7.30 மணி வரை ஆவடி மார்க்கெட்டில் தேங்காய்க் கடையில் வேலை; காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தனியார் பொறியியல் கல்லூரி மெக்கானிக்கல் துறையில் பேராசிரியர்ப் பணி. மீண்டும் இரவு 12.30 மணி வரை தேங்காய்க் கடை வேலை என, ஓடிக் கொண்டே இருக்கும் 27 வயதே நிரம்பிய சிவப்பிரகாசத்தின் அசராத உழைப்பு நம்மை அசரவைக்கிறது. ஆனால், இந்த உழைப்பு இவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு வளம் சேர்க்க இல்லை, பொதுநலம் சார்ந்தது என்பதுதான் முக்கியமானது.

”எல்லோரும் படிக்கணும் அதுக்கு நான் உதவணும்!”
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் சொந்த ஊர் பொள்ளாச்சி. நடுத்தரக் குடும்பம்தான். சென்னை, பிழைக்கத் தெரிந்தவர் களுக்குச் சொர்க்கம். பிழைக்கத் தெரியாதவர் களுக்கு நரகம். எனக்கும் ஆரம்பத்தில் இந்த நகரம் நரகமாத்தான் தோணுச்சு. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் ரெண்டாவது வருஷம் படிக்கும் போது, 'பாக்கெட் மணியில செலவுபோக மிச்ச பணத்தைவெச்சு ஒரு மாணவனைத் தத்து

எடுத்து படிக்கவைக்கலாம்’னு என் பெஞ்ச் மாணவர்கள் முடிவு எடுத்தோம். அப்படி ஒரு மாசத்தில்சேர்ந்த 8 ஆயிரம் ரூபாயுடன் எங்க துறைத் தலைவர் கோகுல கிருஷ்ணன் சாரிடம் போய் நின்றோம். அப்ப அவர் சொன்ன வார்த்தைகள்தான் என்னை இந்த வேலைக்கு இழுத்துவந்தது.

'தம்பி இதோட உன் கடமை முடிஞ்சுட்டதா நினைக்காதே. நல்லாப் படிச்சு சம்பாதிச்சா, இதே மாதிரி இன்னும் பலரைப் படிக்கவைக்கலாம்’னு சொன்னார். அன்றையில் இருந்தே ஏதாவதுசெய் யணும், செய்யணும்னு மனசு தவியாத் தவிச்சுது. இந்த நிலையில் காலேஜ் முடித்து கேம்பஸ்இன்டர் வியூவில் ஒரு கம்பெனியில் தேர்வானேன். 'இந்த வேலை ஓ.கே.-வா? இதன்மூலம் எத்தனை ஏழை மாணவர்களைத் தத்தெடுக்கலாம்’னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன். அதே நினைப்பில் ரூமுக்கு வந்து, காலை சமையலுக்காகத் தேங்காய் வாங்க கடைக்குச் சென்றேன்.

அங்கே ஒரு தேங்காய் விலை 12 ரூபாய். அதே தேங்காய் எங்க ஊரில் நாலே ரூபாய். எவ்வளவு வித்தியாசம். தேங் காய்க்கு இரண்டு ரூபாய் ஏற்றுக் கூலி போனாலும் மீதி லாபம்தான்னு தப்பா கணக்குப் போடத் தொடங்கினேன். கேம்பஸ் இன்டர்வியூவில் செலெக்ட் ஆன வேலையில் சேராம, தேங்காய்த் தொழிலில் இறங்கினேன். தேங்காய்த் தொழில் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாததால ரொம்பவே சிரமப்பட்டேன். 'உனக்கு ஏண்டா இந்த வேலை?’னு பலபேர் கேலிப் பேசினாங்க. ஆனா கோகுல கிருஷ்ணா சார், அரசு, சரஸ்வதி மேடம்னு சிலபேர் மட்டும் தான் தட்டிக்கொடுத்தாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக் கால் ஊன்றின பிறகு குடும்பத்தைச் சென்னைக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்.

”எல்லோரும் படிக்கணும் அதுக்கு நான் உதவணும்!”

இந்தத் தொழில் மூலம் கிடைச்ச பணத்தைவெச்சு தொடங்கினதுதான் 'தயா அறக்கட்டளை’. இதுவரை 60 மாணவர்களின் பள்ளிக் கல்விக்கு உதவி இருக்கோம். என் காலேஜ் பெஞ்ச் நண்பர்கள் இப்போ நல்ல வேலைகளில் இருக்காங்க. இந்த டிரஸ்ட்டைத் தொடங்கினப்போ அவங்க  உதவினாங்க. இன்று முகம் தெரியாத பல நல்ல உள்ளங்கள் இந்த அறக்கட்டளையில் உறுப்பினர்களாகி பல மாணவர் களின் படிப்புக்கு உதவி செய்றாங்க.

”எல்லோரும் படிக்கணும் அதுக்கு நான் உதவணும்!”

இன்னைக்கு என் தேங்காய் பிசினஸ், சொந்தமா ஒரு மினி லோடு ஆட்டோ வாங்குற அளவுக்கு உயர்ந்து இருக்கு. எங்கள் கல்லூரியின் நூலகர் ராஜசேகர், மாணவன் வேல் பிரசாத் ரெண்டு பேரும் என் தேங்காய் வியாபாரத்துக்கு ரொம்ப உதவியா இருக்காங்க. லட்சியம், குறிக்கோள்னு பெரிய வார்த்தை எல்லாம் பேச விரும்பலை. எல்லாரும் படிக்கணும். அதுக்கு என்னால முடிந்த உதவிகளைச் செய்யணும்கிறதுதான் என்னோட எண்ணம். இதை லட்சியம்னு சொல்லலாம்னா சொல்லிக்கலாம் சார்!'' என்று சிரிக்கிறார் சிவப்பிரகாசம்.

”எல்லோரும் படிக்கணும் அதுக்கு நான் உதவணும்!”

- தி.முத்துராஜ்,
படங்கள்: கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism