Published:Updated:

ஸ்டார் இன்றே கடைசி!

ஸ்டார் இன்றே கடைசி!

ஸ்டார் இன்றே கடைசி!

ஸ்டார் இன்றே கடைசி!

Published:Updated:

முக்கால் நூற்றாண்டு பழமை வாய்ந்த சென்னை திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர், பிப்ரவரி 29-ம் தேதியோடு மூடப்பட உள்ளது என்பது திரைப்பட ரசிகர்களுக்கு வருத்தம் தரும் செய்தி.  52 வருடங்களாக இங்கு பணிபுரியும் ராஜசேகரன், ஸ்டார் தியேட்டர் அனுபவத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

ஸ்டார் இன்றே கடைசி!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''1952-ம் ஆண்டு டிக்கெட் கலெக்டரா வேலைக்குச் சேர்ந்து, புக்கிங் கிளார்க் ஆகி, இப்ப மேனேஜரா இருக்கேன். மௌனப்படங்கள் வந்த காலத்தில் ஆரம்பிச்ச தியேட்டர் இது. அப்ப இந்த தியேட்டர் பேரு 'சினிமா பாப்புலர்’. பேசும் படங்கள் வெளிவந்தப்பதான் 'ஸ்டார் டாக்கீஸ்’னு பேரை மாத்தினாங்க. ஆரம்பத்துல தமிழ்ப் படங்களைவிட இந்திப் படங்கள்தான் இங்க அதிகமா ரிலீஸ் ஆச்சு. ஸ்ரீபிரகாசா, ஜெயசாமராஜ உடையார், பிஷ்ணுராம் மேதி, கே.கே.ஷா, பிரபுதாஸ் பட்வாரி உள்ளிட்ட முன்னாள் தமிழக கவர்னர்கள் மற்றும் அறிஞர் அண்ணா, என்.வி.நடராஜன், ஜெமினிகணேசன்னு இங்க படம் பார்த்த பிரபலங்களோட லிஸ்ட் ரொம்பவே பெருசு. ஜெயலலிதா மேடம் குழந்தையா இருக்கும்போது அவங்க அம்மா சந்தியாகூட இங்க படம் பார்க்க வந்திருக்காங்க. வி.என்.ஜானகி, விஜயகுமாரி, எம்.என்.ராஜம் இந்த மூணு பேரும் அடிக்கடி இங்க படம் பார்ப்பாங்க.

தர்மேந்திரா நடிச்ச 'யாதோன் கி பாரத்’ படம் தொடர்ந்து 400 நாட்கள் ஓடுச்சு. இதைக் கேள்விப் பட்ட தர்மேந்திரா, இங்க வந்து படம் பார்த்துட்டு பாராட்டினார். இந்தப் படத்தைப் பார்த்துட்டுத்தான் எம்.ஜி.ஆரைவெச்சு 'நாளை நமதே’ படம் எடுத்தாங்க. அதுவும் இங்க 100 நாளைக்கு மேல ஓடுச்சு. திலீப், வைஜெயந்தி மாலா பாலி நடிச்ச 'மதுமதி’யும் 400 நாள் ஓடுச்சு. 'சந்திரலேகா’, 'பெற்றால்தான் பிள்ளையா’, 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி’னு இங்க ரிலீஸ் ஆகி 100 நாட்களைக் கடந்த படங்கள் ஏராளம்.

தியேட்டர் ஆரம்பிச்சப்ப 921 சீட் இருந்துச்சு. அப்புறமா 818 சீட்டா மாத்தி அமைச்சாங்க. அந்தக் காலத்திலேயே ஏ.சி. தியேட்டர்ங்கிற பெருமை ஸ்டாருக்கு உண்டு. கட்டுப்படி ஆகாததால ஏ.சி-யை எடுத்துட்டோம்.அப்ப டிக்கெட் எல்லாம் அணா கணக்குத்தான். எனக்குத் தெரிஞ்சு நாலே முக்கால் அணா, 10 அணா, 15 அணாவுக்கு டிக்கெட் வித்து இருக் கோம். இப்ப டிக்கெட் ஏழு ரூபா, 25 ரூபா, 35 ரூபா.

ஸ்டார் இன்றே கடைசி!

17 வருஷத்துக்கு முன்ன வரை புதுப்படங்கள்தான் ரிலீஸ் செஞ்சோம். 1995-ல் டி.டி.எஸ். தொழில்நுட்பம் அறிமுகம் ஆனப்ப, பணம் இல்லாததால இங்க அந்த சிஸ்டத்தைக் கொண்டுவர முடியலை. அதுல இருந்து ஏற்கெனவே ரிலீஸ் ஆன படங்களையே எடுத்து ஓட்டுறோம். இங்க படம் பார்க்க வர்றவங்க எல்லாருமே அடித்தட்டு மக்கள்தான். சனி, ஞாயிறுனா கூட்டம் கொஞ்சம் அதிகமா வரும். மத்தபடி கலெக்ஷன் கம்மிதான்'' என்றவரைத் தொடர்கிறார் டாக்கீஸ் நிர்வாகத்தைக் கவனிக்கும் டி.ஏ.ராஜகோபால்.

'எம்.ஜி.ஆர்., ரஜினி, சூர்யா படங்களை எப்பப் போட்டாலும் கூட்டம் வரும். அதனால அவங்க படங்களை அடிக்கடி ஓட்டுவோம். 'பெற்றால்தான் பிள்ளையா’ படம் ஓடிக்கிட்டு இருந்த நேரம், எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட சம்பவம் நடந்துச்சு. அந்த விஷயம் இங்க படம் பார்த்துட்டு இருந்தவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சு நாற்காலிகளை உடைச்சு, திரையைக் கிழிச்சு டாக்கீஸையே நாசம் பண்ணினாங்க. இருந்தாலும் ரெண்டு நாள்லயே எல்லாத்தையும் சரிபண்ணி மறுபடியும் படத்தை ஓட்டினோம். இந்த மாதிரி ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்து இருக்கு. சமீபத்தில்கூட 'மன்னன்’ படத்தில் விஜயசாந்தி ரஜினியை அடிக்கிற ஸீன்ல ரசிகர் ஒருத்தர் விஜயசாந்தியை செருப்பால் அடிக்கிறதா நெனைச்சு திரையையே கிழிச்சுட்டாரு. ஆனால், இதுவரை நாங்க ஒருமுறைகூட போலீஸ்கிட்டப் போனது இல்ல. ஏன்னா, என்னதான் தகராறுகள் நடந்தாலும் ரசிகர்கள்தான் எங்க பலம். ஆனா லும் கலெக்ஷன் கம்மியா இருக்கி றதாலதான் டாக்கீஸை மூடறோம்.  

ஸ்டார் இன்றே கடைசி!

தேவானந்த் நடிச்ச 'டாக்ஸி டிரைவர்’ படம் ஓடினப்ப, என் அப்பா டாக்கீஸ் நிர்வாகத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தார். அப்ப அவர் சென்னை டாக்ஸி டிரைவர்களுக்கு ஒரு காட்சியை இலவசமா ஓட்டினாரு. இப்ப கடைசி படமான பாட்ஷாவையும் சென்னை ஆட்டோ டிரைவர் களுக்கு  இலவசமா ஓட்டி னோம்.

நான் உள்பட இங்க வேலைபார்க்கிற பெரும்பாலானவங்க ரெண்டு மூணு தலைமுறையா ஸ்டார் டாக்கீஸ்லதான் வேலை செய்யறோம். ஒரே இடத்துல இத்தனை வருஷமா இருந்துட்டு இப்ப பிரியப்போறோம்னு நினைச்சாலே வருத்தமாத்தான் இருக்கு'' என, அவர் சொல்லும்போதே அங்கு உள்ள ஊழியர்கள் தங்களை அறியாமல் அழுதனர்.

ஸ்டார் இன்றே கடைசி!

- சி. காவேரி மாணிக்கம்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism