Published:Updated:

அன்னமிடும் கரங்கள்!

அன்னமிடும் கரங்கள்!

''திருப்பூர்ல ஞானாலயா வள்ளலார் கோட்டம் மூலம் தினமும்,முடியா தவங்களுக்கு, அவங்க இடத்துக்கேபோய் இலவசமாச் சாப்பாடு தர்றாங்க. இது தவிர, இன்னும் நிறைய விஷயங்களைச் செய்யறாங்க. இதை 'என் விகடன்’ல பதிவு செய்யுங்க...'' என்று வாய்ஸ் ஸ்நாபில் கோரிக்கை விடுத்திருந்தார் திருப்பூரைச் சேர்ந்த வாசகி  மாரியம்மாள்.

அன்னமிடும் கரங்கள்!
##~##

வள்ளலார் கோட்டத்தில் நுழையும் போதே, சாப்பாடு கொடுப்பதற்கான வேன் தயாராகிக்கொண்டு இருந்தது. ஞானாலயத்தின் நிர்வாகி கந்தசாமியிடம் பேசினேன். ''நாங்க வள்ளலார் வழி நடக் கிறவங்க. அவரோட சீடரான ஞானானந்த சுவாமிகளைப் பின்பற்றி, திருப்பூரில் நிறைய உதவிகள் செஞ்சுட்டு இருக்கோம். முதியோர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கான உணவைத் தாங்களாகவே தேடிக்கொள்ள முடியாத வங்கனு இது மாதிரி ஆட்களைத் தேடிப் போய் தினமும் மதியம் சாப்பாடு கொடுக்கி றோம்.  கடந்த அஞ்சு வருஷமா நடக்கும் இந்தச் சேவை ஒருநாளும் தடைப்பட்டது இல்லை. இலவசமா கொடுக்கறதால ஏனோதானோனு சாப்பாடு கொடுக்கறது இல்லை.

எங்க சாப்பாடு சுத்தமாகவும் தரமாகவும் இருக்கும். பொன்னி அரிசிதான் வாங்குறோம். தக்காளி, எலுமிச்சை, மல்லி பாசிப் பயறுனு தினமும் ஏதாவது ஒரு சாப்பாடு கொடுப்போம். இது மூலமா தினமும் 200 பேர் பயன் அடையுறாங்க. சமீபத்துல திருப்பூரில வெள்ளம் வந்தப்போ, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாப்பாடு கொடுத்தோம்.

இதுதவிர, ஆதரவில்லாத குழந்தைகளுக்காக ஒரு அன்பு இல்லத்தையும் நாங்க நடத்துறோம். அந்த குழந்தைகளை நல்ல ஸ்கூல்கள்ல சேர்த்து நல்ல  கல்வியும் கொடுக்கிறோம். எங்க மையத்தில் மாசம் ரெண்டு தடவை இலவச சித்த மருத்துவச் சிகிச்சையும்  கொடுக்கிறோம்'' என்றார் சாந்தமுடன்!

அன்னமிடும் கரங்கள்!

கட்டுரை, படங்கள்: ரா.அண்ணாமலை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு