Published:Updated:

கரண்ட் இல்லாமல் ஓடும் மிக்ஸ்!

கரண்ட் இல்லாமல் ஓடும் மிக்ஸ்!

கரண்ட் இல்லாமல் ஓடும் மிக்ஸ்!

கரண்ட் இல்லாமல் ஓடும் மிக்ஸ்!

Published:Updated:

லங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அகதியாக வந்தவர்கள் என்ன செய்வார்கள்? விதியை நொந்தபடி முகாமுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பார்கள். அல்லது, அதிகபட்சம் கூலி வேலைக்குச் செல்வார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவில் உள்ள தாப்பாத்தி அகதிகள் முகாமில் வசிக்கும் தம்பையா சிவராசா, மக்கள் பயன்பாட்டுக்கான விதவிதமான கருவிகளைக் கண்டுபிடிக்கிறார். வெங்காயம் வெட்டும் இயந்திரம், குழந்தைகளைச் சிரிக்கவைக்கும் ரோபோ, படங்களுக்குப் பூ போடும் ரோபோ என... நீள்கிறது இவருடைய அசத்தல் கண்டுபிடிப்புகள்.

கரண்ட் இல்லாமல் ஓடும் மிக்ஸ்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இலங்கை திரிகோணமலை மாவட்டம் கோபாலபுரம்தான் என் சொந்த ஊரு. மூணாங் கிளாஸ் படிக்கும்போதே களிமண்ல குட்டிக் குட்டியா, விளையாட்டு பொம்மைங்க, சட்டிப் பானை, அம்மி, ஆட்டு உரல்னு பலதும் செய்வேன். இப்படியே கொஞ்சம் கொஞ்சமா மரக்கட்டை வீடு, தகரத்தில் சின்ன சைக்கிள், பிளாஸ்டிக் பொம்மைனு புதுசுப் புதுசா செய்ய ஆரம்பிச்சேன். ஒன்பதாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போனேன். இலங்கைல பிரச்னை அதிகரிச்சதால, 1996-ம் வருஷம் அகதியா ராமேஸ்வரம் வந்துசேர்ந்தேன். முகாமுக்கு வந்தபிறகு திரும்பவும் பொருட்கள் செய்ய ஆரம்பிச்சேன். முதலில் தகரத்தில் காற்றாடி, மூன்றரை அடி நீளம் மற்றும் 12 அடி அகலத்தில் ஹெலிகாப்டர் செய்தேன். மோட்டார் சைக்கிளின் வேகத் துக்கு இணையா ஓடும் அதிவேக சைக்கிள் கண்டுபிடிச்சேன்.

அந்த சைக்கிள்ல காலைவெச்சு லேசா அழுத்தினாலே 35-45 கி.மீ. வேகத்தில் பறக்கும்.  இப்போ அடிக்கடி மின்வெட்டு ஏற்படுறதுனால மிக்ஸி, வாஷிங்மெஷின் போன்ற கருவிகளை இயக்க முடியறது இல்லை.  தையல் மெஷின் சக்கரத்தில் பெல்ட்வெச்சு அதை மிக்ஸியோடு இணைத்தேன். இந்த மெஷின்ல தேங்காய், பழங்கள், கடலை எல்லாம் அரைக்கலாம். அதே சமயம் இந்த மிஷின்ல துணியும் தைக்கலாம்.

சைக்கிள் வாஷிங் மெஷின், என் சமீபத்திய கண்டுபிடிப்பு. சைக்கிளின் இரு சக்கரங்களைக் கழற்றிவிட்டு சைக்கிளின் ஃப்ரீ வீல் பகுதியில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் ட்ரம்மை இணைத்தேன். அதுக்குள்ளே ஒரு 20 லிட்டர் ட்ரம் சுழலுற மாதிரி செட் செய்தேன். இந்த வாஷிங்மெஷினில் அஞ்சு சட்டை, ரெண்டு சேலை, மூணு வேஷ்டி துவைக்க முடியும். கரன்ட் தேவை இல்லை; பெடல் பண்ணுனாபோதும். உடற்பயிற்சி பண்ண மாதிரியும் ஆச்சு... துணி துவைச்ச மாதிரியும் ஆச்சு.  

கரண்ட் இல்லாமல் ஓடும் மிக்ஸ்!

பெரிய ஹோட்டல்களில் வெங்காயம் அதிகமாத் தேவைப்படும். அப்பப்போ வெங்காயம் உரிச்சுக்கிட்டே இருக்கணும். அதுக்கு ஒரு கருவி கண்டுபிடிச்சா என்னனு தோணுச்சு. கிணற்று மோட்டாரில் மூணு கத்திகளை ஃபேன் மாதிரி பொருத்தினேன். அதைச் சுத்தவிட்டு, வெங்காயத்தைப் போட்டா துண்டு துண்டா விழும்.  இந்தக் கருவியைவெச்சு மணிக்குச் சராசரியா 25 கிலோ வெங்காயம் வெட்டலாம். வெங்காயம் மட்டுமில்லாம முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பூசணிக்காய்னு எல்லா காய்கறிகளையும் வெட்ட முடியும்.

இதுவரை நான் கண்டுபிடிச்ச ஒவ்வொண்ணுமே, நான் வாங்குற தினக் கூலியில் என் செலவு போக சேமிச்ச மிச்சசொச்ச காசுல  உருவானதுதான். இதுக்காக நான் யார்கிட்டயும் கை நீட்டினது இல்லை. கைவசம் இன்னும் நிறைய ஐடியா இருக்கு. ஆனா, அதைச் செய்ய பணம்தான் இல்லை. அரசாங்கம் உதவி

செஞ்சா, மக்களுக்குப் பயன்படுற மாதிரி நிறைய கண்டுபிடிப்பேன்!'' நெகிழ்ச்சியான குரலில் முடிக்கிறார் சிவராசா.

கரண்ட் இல்லாமல் ஓடும் மிக்ஸ்!

-இ.கார்த்திகேயன்
படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism