படிப்பறிவுக்கு நிகராகப் பட்டறிவும் மனிதனைச் செழுமைப்படுத்தும் என்பதற்கு உதாரணம் 'கபடி’ கருப்பன். பழநி அருகே உள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் மட்டுமின்றி கவிதை, பட்டிமன்றம், வீதி நாடகம் என, சகல துறைகளிலும் கலக்கும் சகலகலா வல்லவன். இத்தனைக்கும் கருப்பன் ஆரம்பக் கல்வியையே தாண்டவில்லை!
''அஞ்சாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு வீட்டுல ஆடு, மாடு மேய்க்க அனுப்பிட்டாங்க. ஆடு, மாடுகளை மேய்ச்சாலும் மனசு மட்டும் படிப்பிலயே இருந்துச்சு. கொஞ்ச நாளைக்குப் பிறகு மனசைத் தேத்திக்கிட்டேன். மேய்ச்சலுக்குப் போகும்போது மனசுல ஏதாவது ஒண்ணு ஓடிகிட்டே இருக்கும். அப்படித் தோன்றதை ரெண்டு, மூணு வரிகள்ல கள்ளிச்செடிகள்ல எழுதிவெப்பேன். இதனால ஊருக்குள்ள, 'இவனுக்குக் கிறுக்குப்பிடிச்சுருச்சு’னு பேச ஆரம்பிச்சாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வழக்கமா ஆடு, மாடு மேய்க்கிற பசங்க கபடி விளையாடுவாங்க. ஆனா, போட்டிகள்ல கலந்துக்க மாட்டாங்க. நான் அந்தப் பசங்களை ஒண்ணுசேர்த்து 'தமிழன்னை கபடி கழகம்’னு ஒரு குரூப்பை உருவாக்கினேன். அப்பப் பக்கத்துல இருக்கும் கொழுமம் அணி யாராலும் ஜெயிக்க முடியாத பலமான அணியா இருந்துச்சு. நாங்க அந்த அணியோட போட்டிபோட்டு 200 முறையாவது தோத்திருப்போம். ஆனா, அந்தத் தோல்விகள்தான் கபடியோட நுணுக்கங்களை எங்களுக்குக் கத்துக்கொடுத்துச்சு. அதுக்குப் பிறகு அடிச்சு துவைச்சிட்டோம். விளையாடப் போற இடத்துல பெரும்பாலும் கோப்பையோடதான் வருவோம்.

##~## |
-ஆர்.குமரேசன்,
படம்: வீ.சிவகுமார்