Published:Updated:

’ஐ லவ் யூ கிரிஷ்’ ’யூ ஆர் கிரேட் ஸ்ரீகாந்த்!’

திருவண்ணாமலை யூத்ஃபுல் திருவிழா

’ஐ லவ் யூ கிரிஷ்’ ’யூ ஆர் கிரேட் ஸ்ரீகாந்த்!’

திருவண்ணாமலை யூத்ஃபுல் திருவிழா

Published:Updated:

லூமினா’- ஏதோ சைனீஸ் உணவுபோலத் தெரிகிறதா? திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கலைத் திருவிழாதான் இது. 'லூமினா - திறமைகளுக்கான மேடை’ என்றது பின்னால் தொங்கிய பேனர். அந்த மேடையில் நடந்த உற்சாகம், உல்லாசம் கும்மாளம், கொண்டாட்டம், குதூகலத்தையும்தான் கொஞ்சம் பார்ப்போமா?

’ஐ லவ் யூ கிரிஷ்’ ’யூ ஆர் கிரேட் ஸ்ரீகாந்த்!’
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரே நேரத்தில் மூன்று அரங்குகளில் கட்டுரைப் போட்டி, ஓவியம் மற்றும் பாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்க, மாணவர்களுடைய மனசு எல்லாம் மாலையில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில்தான் மையம்கொண்டு இருந்தது. பாடகர் கிரிஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனாதான் வி.ஐ.பி-க்கள். கிரிஷ் அருணையில் ஆஜர் ஆவது மூன்றாவது முறை என்பதால், பழகிய நண்பனாக ஆகி இருந்தார். கிரிஷ் மேடையில் என்ட்ரி கொடுத்ததும் எழுந்த 'ஹோ’  என்ற சத்தமே அதற்கு அத்தாட்சி.

கிரிஷ் மற்றும் ரெஹைனாவுடன் மேடை ஏறியது 'வேர் இஸ் த பார்ட்டி?’ என்று பாட்டிலேயே பாட்டில் கேட்ட பிரியதர்ஷினி மற்றும் 'கலா சலா கலசலா’ பாடிக் கலக்கிய சோலர் சாய். முதல் பாடலாக கிரிஷ் 'எங்கேயும் காதல்’ பாட எங்கேயும் இசை மயக்கம்தான். அடுத்ததாக 'ஆல் இஸ் வெல்’ பாட்டுப் பாட, அரங்கம் முழுக்க எதிரொலித்தது 'ஆல் இஸ் வெல்’!

இரண்டு, மூன்று பாடல்கள் முடிந்ததும், 'என்ன பாட்டு பாடணும்னு உங்க ஃபேவரைட் பாடலை எழுதித்தாங்க’ என்று கிரிஷ் சொல்லவும் பரீட்சைக்குக்கூட பேனா எடுக்காதவர்கள் பேனாவுக்கும் பேப்பருக்கும் பரபரத்தார்கள். பேப்பர் கிடைக்காதவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டு இருந்த வெள்ளைத் தொப்பிகளில் பாடலின் பெயர் எழுதி, உயர்த்திக் காட்டி ஆட்ட... 100 வெண்புறாக்கள் படபடவென சிறகு அசைந்ததுபோல் இருந்தன.

’ஐ லவ் யூ கிரிஷ்’ ’யூ ஆர் கிரேட் ஸ்ரீகாந்த்!’

பாடிக்கொண்டே மேடையைவிட்டுக் கீழே இறங்கிய கிரிஷ், ஒரு பெண்ணை எழுப்பி, 'என்னோடு பாட முடியுமா?’ என்றதும் 'வாவ்’ சொல்லி, சிறு புன்னகையுடன் பாடினார் நிலோஃபர் என்ற மாணவி. பெண்களின் தொப்பிகளில் எழுதப்பட்டு இருந்த ஃபேவரைட் பாடல்களின் பெயர்களைப் பார்த்தபடி வந்தவர், ஒரு வரிசையில் அப்படியே நின்றார். அகிலா என்ற மாணவியின் தொப்பியில் 'ஐ லவ் யூ’ என்று எழுதப்பட்டு இருக்க, சின்னப் புன்னகையுடன் 'ஐ லவ் யூ டு அகிலா’ என்றதும் அரங்கமே 'ஓ’ போட்டது. உடனடியாகக் கல்லூரியின் கடுப்பேத்தும் சங்கம், 'ஐ லவ் யூ பை மெக்கானிக்கல் பசங்க’ என்று கூட்டம் கூட்டமாகத் தொப்பிகளை ஆட்ட, ''பசங்களுக்கு எல்லாம் ஐ லவ் யூ சொல்லக் கூடாதுப்பா. அப்புறம் 'கோவா’ படம் மாதிரி ஆயிடும்'' என்று கிரிஷ் சொல்ல, அதற்கும் 'ஓ’தான்.

’ஐ லவ் யூ கிரிஷ்’ ’யூ ஆர் கிரேட் ஸ்ரீகாந்த்!’

மறுநாள் சிறப்பு விருந்தினர் நடிகர் ஸ்ரீகாந்த். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீகாந்த் பரிசுகள் வழங்க, பரிசு வாங்கிய கையோடு 'நண்பன்’ ஸ்டைலில் வலது கையை இடது தோளிலும், இடது கையை வலது தோளிலும்வைத்துக் குனிந்து 'தலைவா யூ ஆர் கிரேட்’ என்று வணக்கம்வைத்துவிட்டுச் சென்றார்கள். இறுதியாய் மைக் பிடித்த ஸ்ரீகாந்த், 'சென்னை அண்ணாசாலையில்...’ பாடலைப் பாடிவிட்டு, '' 'சைட் அடிப்போம், தம் அடிப்போம்’ பாட்டை மட்டும் பாட மாட்டேன். ஏன்னா நீங்க எல்லாம் எவ்வளவு ஜாலியா இருக்கணுமோ அவ்வளவு நல்லாப் படிக்கணும். 'நண்பன்’ பட வெற்றிக்கு இளைஞர்கள்தான் காரணம்'' என்றவர் 'என் ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான்’ பாடலைப் பாடி முடித்தார்.

உண்மையாவே லூமினா கலக்கல்தான்!

- கோ.செந்தில்குமார், ரா.ராபின் மார்லர்
படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism