Published:Updated:

”இங்கு தொழிலாளிகளே பங்காளிகள்!”

”இங்கு தொழிலாளிகளே பங்காளிகள்!”

”இங்கு தொழிலாளிகளே பங்காளிகள்!”

”இங்கு தொழிலாளிகளே பங்காளிகள்!”

Published:Updated:
”இங்கு தொழிலாளிகளே பங்காளிகள்!”

''நெய்வேலி நகரியம், 1956-ல் பெருந்தலைவர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டது. ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டது'' என்று நெய்வேலி டவுன்ஷிப் பற்றிப் பேசத் தொடங்கும்போதே, ஒரு புன்னகை வந்து அமர்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வனின் வார்த்தைகளில்.

”இங்கு தொழிலாளிகளே பங்காளிகள்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''நெய்வேலி ஒரு சமத்துவபுரமாகவே என் பார்வையில் தெரிகிறது. இங்கு அனைத்து மதங்கள், சாதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். இங்கு சமத்துவ இடுகாடும் உண்டு. '20-வது கல்லறை இவருடையது, 90-வது கல்லறை இவருடையது’ என்றுதான் மக்கள் அடையாளம் காண்பார்களே தவிர, சாதியையோ மதத்தையோ அடையாளப்படுத்தி அல்ல. நெய்வேலியைப் பொறுத்தவரை மூன்று விழாக்கள் முக்கியமானவை. இந்த விழாக்களில் ஆண்டுதோறும் மக்கள் குடும்பத்தோடு திரளாகவந்து கலந்துகொள்வார்கள். சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, புத்தகக் காட்சி ஆகியவற்றுக்கு வேறு எங்கும் இல்லாத வகையில் குடும்பம்

குடும்பமாகத் தொழிலாளர்கள் கலந்துகொள்வார்கள். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் புதிய அறிவிப்புகளும் பாரதி விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாவில்தான் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படும். 3 லட்சம் பேரைத் தாங்கும் கொள்ளளவுகொண்ட அந்த அரங்கம், ஏறத்தாழ நிரம்பிவிடும். நெய்வேலி நகரியத்தில் உள்ள 35,000 மாணவர்கள் ஏறத்தாழ வந்துவிடுவார்கள்.

பங்குனி உத்திரத் திருவிழா, நெய்வேலியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்துக்களின் இந்தத் திருவிழாவில் காவடி எடுத்துவருபவர்களுக்கு, பிற மதத்தினர் தண்ணீர்ப் பந்தல் அமைக்கும் மத நல்லிணக்கக் காட்சியை இங்கு காணலாம். என்னதான் சமத்துவபுரம் என்று நான் கூறினாலும், என்.எல்.சி-க்குள் நடக்கும் தொழிலாளர் சங்கத் தேர்தலில் சாதியும் பணமும் தலைவிரித்தாடும் என்பது தனிக் கதை.

”இங்கு தொழிலாளிகளே பங்காளிகள்!”

பல வட்டங்களாக, நெய்வேலி நகரியம் பிரிக்கப்பட்டு இருக்கிறது. தமிழர் பண்பாட்டுக் கழகம், திருவள்ளுவர்க் கோட்டம் என்று தமிழர்களுக்கான இரண்டு அமைப்புகள் உள்ளதைப் போல, ஆந்திர மக்களுக்காகத் 'தெலுங்கு  சமிதி’ அமைப்பும் மலையாளிகளுக்காகக் 'கலாலயா’ என்ற அமைப்பும் உள்ளன. முல்லைப் பெரியாறு விவகாரம் பெரிதானபோது, மலையாளிகள் தொடர்பான அனைத்து நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது நினைவு இருக்கலாம். ஆனால், நெய்வேலியில் உள்ள 'கலாலயா’வுக்குப் பாதுகாப்புத் தேவைப்பட வில்லை. அந்த அளவுக்கு முதிர்ச்சியான மக்களைக்கொண்ட ஊர் நெய்வேலி. நிறைய வடமாநிலத்தவர்களும் நெய்வேலியில் பணியாற்றுகிறார்கள். இங்கு வாழும் மக்களிடையே ஓர் அற்புதமான பண்பு இருக்கிறது. ஒரு தொழிலாளியின் வீட்டில் ஒரு நல்லது

கெட்டது என்றால் உடன் பணியாற்றும் சக தொழிலாளர்கள் 'பங்காளி முறை’ செய்வார்கள். இங்கு இருக்கும் எல்லோரும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இங்கே வந்து குடியேறியவர்கள். எனவே, தொழிலாளர்களின் உறவினர்கள் வேறு வேறு ஊர்களில் வசிப்பதால் சக தொழிலாளர்களே உறவினர்களாக மாறும் அற்புதமான மாற்றம் நடக்கும்.

என்.எல்.சி. நிறுவனத்துக்காக நிலம் கையகப் படுத்தப்பட்டபோது நிலம் இழந்தவர்கள், வீடு இழந்தவர்கள் சுற்றுப்புறத்தில் குடி அமர்த்தப் பட்டு உள்ளனர். என்.எல்.சி. நிறுவனம் எதிர் காலத்தில் தன்னுடைய விரிவாக்கப் பணிகளுக்கு என்று சுற்றுப்புறக் கிராமங்கள் சிலவற்றைக் குறித்துவைத்து இருக்கிறது. இந்தப் பட்டியலில் இருக்கும் கிராமங்களில் ஒருபோதும் அரசு மருத்துவமனையோ அல்லது அரசு சார்ந்த எந்த ஒரு கட்டடமோ நிர்மாணிக்கப்படுவது இல்லை. 50 ஆண்டுகளுக்கு முந்தைய ஊர் ஒன்று எப்படி இருக்கும் என்று யாராவது தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால், இந்தக் கிராமங்களுக்கு வந்து பார்க்கலாம். அந்த அளவுக்குப் பின்தங்கிய கிராமங்கள் அவை. நெய்வேலியில் இருந்து 10 கி.மீ. சுற்றளவுக்குள்தான் இந்த கிராமங்கள் இருக்கின்றன.

இப்போது நான் என் பிள்ளைகளின் படிப்புக்காகக் கள்ளக்குறிச்சியில் குடியிருக்கிறேன். ஆனாலும்கூட, நெய்வேலி என்னில் இருந்து பிரிக்க முடியாத ஓர் அங்கமாகி விட்டது!''

”இங்கு தொழிலாளிகளே பங்காளிகள்!”

- கவின் மலர்  
படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism