Published:Updated:

இது நாட்டு நடப்பைச் சொல்லும் நவீன தெருக்கூத்து !

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

இது நாட்டு நடப்பைச் சொல்லும் நவீன தெருக்கூத்து !

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
##~##

''நகைச்சுவை, சோகம், அன்பு, பயம் என அனைத்தும் கலந்த ஒரு சினிமாப் போன்றதுதான் எங்கள் நாடகம். அதனால்தான் எங்கள் குழுவுக்கு 'நவரசா டான்ஸ் தியேட்டர்’ என்று பெயர்வைத்தோம். கதையை நடனத்துடன் கலந்து சொல்லும்போது, உங்களுக்குத்  திரைப்படம் பார்த்த உணர்வு கிடைக்கும்!'' - உற்சாகத்துடன் பேசுகிறார் நாட்டியக் கலைஞர் அபர்ணா சிந்தூர். சமீபத்திய நாட்டு நடப்புகளை நடனத்துடன் அரங்கேற்றுகிறார்கள் 'நவரசா’ நடனக் குழுவினர்.

'எனக்குச் சொந்த ஊர் மைசூர். நடனம்தான் எனக்கு உயிர். ஏழெட்டு வயசுலேயே அரங்கேற்றம் பண்ணிட்டேன். படிக்கும் காலத்திலேயே நிறைய மேடைகள்ல நடனம் ஆடி பாராட்டுகளைக் குவிச்சிருக்கேன். அவ்வளவு பாராட்டு, பரிசுக்குப் பிறகும் மனசுக்குள்ள, 'எல்லாரும் ஒரே மாதிரிதான் நடனம் ஆடுறாங்க. நாம இந்த நாட்டியத்துல புதுசா ஏதாவது முயற்சி பண்ணலாமே’னு தோணும். ஒவ்வொரு மேடையில ஏறி இறங்கும்போதும் மனசுல இந்த எண்ணம் வந்துபோகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'எங்கேயோ எப்பவோ நடந்ததாகச் சொல்லப்படுகிற புராணக் கதைகளுக்கு நடனம் ஆடுவதைவிட இன்றைய நாட்டு நடப்பு களையே திரைக்கதையா வடிவமைச்சு நாட்டியமாப் பண்ணினா என்ன’னு யோசிக்க ஆரம்பிச்சேன். ஆனா, நாட்டியம் தெரிஞ்ச அளவுக்கு எனக்குக் கதை, வசனம், திரைக்கதை, இயக்கத்தில் அனுபவம் கிடையாது. அப்பதான் என் எண்ணத்தைச் செயல்படுத்த பெரிய பட்டாளமே தேவைனு புரிய ஆரம்பிச்சுது. அந்தச் சமயத்தில் என் கனவுக்கு வெளிச்சம் தந்தவர் இயக்குநர் எஸ்.எம்.ராஜு' என்கிற அபர்ணாவை தோளில் தட்டித் தொடர்கிறார் ராஜு.

இது நாட்டு நடப்பைச் சொல்லும் நவீன தெருக்கூத்து !

''அபர்ணாவின் இந்த யோசனை புதுசா இருந்தது. ஆனாலும், நாட்டு நடப்புகளைக் கதையா எழுதி, அதற்கு ஏற்ற வசனம், பின்னணி இசை அமைக்கிறது, நடனம் ஆடுறவங்களுக்குக் கதையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்றது, தகுந்த பயிற்சித் தந்து இதை ஒரு வடிவத்துக்குள் கொண்டுவருவதுனு ரொம்பவே சிரமப்பட்டோம். ஒவ்வொரு கதைக்கும் குறைந்தது ஒரு வருஷம் தேவைப்பட்டது. முதல் முதலில் 1996-ல் நாங்க நினைச்சது மாதிரியான நாட்டிய நாடகத்தை அமெரிக்காவில் அரங்கேற்றினோம்.

அன்று முதல் இன்றுவரை 15 கதைகளை மேடை ஏற்றி இருக்கோம்.  வெளிநாடுகளில் இதுக்கு நல்ல வரவேற்பு. பரதம் மட்டும் இல்லாமல் யோகா, நாட்டுப்புற இசைனு கதைக்கு என்ன தேவையோ அதை எல்லாம் எங்க நாட்டியத்தில் சேர்த்து கதைக்கு உயிர் கொடுக்கிறோம். ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் நடந்தாலும் இந்த நடன நாடகம் சலிப்புத் தட்டாது என்பதற்கு எங்களால் உத்தரவாதம் தர முடியும்'' என்று சிரித்தவரைத் தொடர்கிறார் அணில் நாட்டியதேவா. இவரும் நவரசாவில் ஒரு நாட்டியக் கலைஞர்.

இது நாட்டு நடப்பைச் சொல்லும் நவீன தெருக்கூத்து !

'' 'என்கவுன்டர்’ - இது, ஒடிசாவில் நடந்த பாலியல் பலாத்காரத்தைப் பின்னணியாகவைத்து உருவாக்கப்பட்ட கதை. விலங்குகளை வேட்டையாடி அழிப்பவர்களைப் பற்றிய 'ஹன்டர்’, 'ஸ்டோரி அண்ட் எ சாங்’, 'ரிவர் ரைட்ஸ்’ என, நாங்கள் எடுத்துக்கொண்ட கதைகள் அனைத்தும் இந்தியாவில் நடந்த சம்பவங்களை மையமாகவைத்து எழுதப்பட்டவை. இதுவரை கனடா, அமெரிக்கா, ஜெர்மனினு பல நாடுகளில் ஆயிரம் மேடைகளுக்கு மேல் ஏறி இருக்கிறோம். சர்வதேச அளவில் நடனக் கலைஞர்களுக்குத் தரும் 'பேட்ஸ் விருது’ எங்களுக்குக் கிடைத்தது, எங்களின் உழைப்புக்கான பரிசு.

இது நாட்டு நடப்பைச் சொல்லும் நவீன தெருக்கூத்து !

எங்கள் நடன நாடகத்தைப் பார்த்து, உலகின் தலைசிறந்த கலைஞர்கள் பலரும் பாராட்டுகிறார்கள்.  வெளிநாடுகளில் கிடைக்கிற ஆதரவு இங்குள்ள மக்களிடம் கிடைப்பது இல்லை என்பதுதான் எங்களுடைய ஒரே வருத்தம். அதேபோல் இங்கு ஸ்பான்சர்கள் பிடிப்பதும் பெரும் சிரமமாக உள்ளது.

இது நாட்டு நடப்பைச் சொல்லும் நவீன தெருக்கூத்து !

வசனம், பாட்டு, நடனம் என சகலமும் கலந்து ஒரு மணி நேரத்தில் உயிரோட்டத்தோடு ஒரு கதை சொல்கிறோம். இன்னும் சுருக்கமாகச் சொல்வது என்றால், சினிமா வருவதற்கு முன்பு இருந்த தெருக்கூத்துக்கு நாங்கள் எங்கள் உழைப்பால், நாட்டியத்தால் உயிர் கொடுத்து இருக்கிறோம்'' என்கிறார் அணில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism