Published:Updated:

வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:

வாலட் (www.google.com/wallet)  தொழில்நுட்பத்தைப் பற்றி சில மாதங்களுக்கு முன் எழுதியபோது, அது வெற்றிஅடையுமா என்ற சந்தேகம் பலமாக இருந்தது.

இந்தத் தொடரின் புதிய வாசகர்களுக்கு குயிக் பின்னணி...

வருங்காலத் தொழில்நுட்பம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூகுள் நிறுவனத்தின் கூகுள் வாலட் ஒரு மொபைல் வணிகச் சேவை. பல கிரெடிட் கார்டுகளைச் சுமந்து செல்லத் தேவை இல்லாமல், அவை அனைத்தையும் பற்றிய தகவல்களை மட்டும் உங்கள் அலைபேசியில் பதிந்துவைத்துக்கொண்டால் போதும். எங்கெல்லாம் வாலட் ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ, அங்கு பணம் கொடுப்பதற்குப் பதில் அதற்கென நிறுவப்பட்டு இருக்கும் டெர்மினல் அருகில் உங்கள் அலைபேசியைக் கொண்டுசென்றால் போதும். நீங்கள் கொடுக்க வேண்டிய பணம் உங்கள் கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து எடுத்து, வணிக நிறுவனத்தின் கணக்குக்கு மாற்றிவிடும்.

##~##

பிரமாண்டமான விளம்பரங்களுடன் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடமாகப் போகும் வாலட்டை கூகுள் அலுவலகத்துக்கு வெளியில் அதிகம் இது வரை பார்க்க முடியவில்லை. கலிஃபோர்னியாவில் ஃபர்னிச்சர் கடைகளை நடத்திவரும் நண்பர் ஒருவரிடம் கூகுள் வாலட்டை ஏன் இன்னும் அவர்களின் கடைகளில் கொண்டுவரவில்லை என்று கேட்டேன். அவர் சொன்ன பதிலில் இருந்து கூகுள் வாலட் மட்டும் அல்ல; அதுகட்டப் பட்டு இருக்கும் அருகாமைத் தொடர்பு (NFC - Near Field Communications) தொழில் நுட்பம் பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட பல வருடங் கள் ஆகலாம்; அல்லது ஏற்றுக் கொள்ளப்படாமலே போய்விட லாம் என்று புரிந்தது!

வருங்காலத் தொழில்நுட்பம்

'நுகர்வோர் கடைக்கு வந்து பொருட்களை வாங்குவதற்குத் தேவையான உபகரணங்களில் ஏற்கெனவே வணிக நிறுவனங்கள் முதலீடு செய்துவிட்டன. கூகுள் வாலட்டைப் பயன்படுத்த வேண்டுமானால், அதற்கான என்.எஃப்.சி. டெர்மினலை வாங்க வேண்டும். அதோடு ஏற்கெனவே இருக்கும் பாயின்ட் ஆஃப் சேல் சாதனத்துடன் இணைக்க வேண்டும். இந்தப் புதிய முதலீடும் தலைவலியும் யாருக்கும் பிடிக்காது!' என்ற நண்பரின் கருத்தை வணிக உலகின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியும்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாற்றைப் பார்த்தால், சில முயற்சிகள் தோல்வி அடைவதன் மூலம் அதற்கு அடுத்ததாக வெளிவரும் தொழில்நுட்பம் வளர்ச்சிஅடையப் பயனுள்ள ஒரு மிதி கல்லாக அந்த முயற்சி மாறிவிடும். இந்தியாவில் வெளியாக இருக்கும் ஆகாஷ் குளிகை குறித்து விவாதிக்கும்போது, அதன் தரம் வலுவாக இருக்க வேண்டும். இல்லைஎன்றால், அது மிகப் பெரும் இழப்பாக இருக்கும் என்றேன். தொழில்நுட்ப வளர்ச்சிகளில் அதீத ஆர்வம்கொண்ட அந்த நண்பர்களோ, 'அது பரவாயில்லை. முதல் முயற்சியில் தோல்வி அடையும் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து வரும் அடுத்தது அட்டகாசமாக இருக்கும்!’ என்றது மிகவும் உண்மை. உதாரணத்துக்கு, புத்தகங்களைப் படிக்கத் தேவையான மின் படிப்பான்களைத்  ( e-reader ) தயாரித்த சோனி நிறுவனத்தின் முயற்சி தோல்வி. அதை அடுத்து, அதேமின் படிப்பான்களைத் தயாரித்த/க்கும் அமேசானின் முயற்சி மிகப் பெரிய வெற்றி.

உப செய்தி: ஆகாஷ் குளிகையைப் பயன்படுத்திய சிலரது பின்னீடுகள் அதுதரத்தில் சுமார் என்பதாக இருக்கிறது. உண்மைதானா என்பதை அறிய மிகவும் விருப்பம். ஆகாஷ் பயன்படுத்தி இருந்தால், உங்களின் கருத்துக்களை விகடனின் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதுங்களேன். (www.facebook.com/anandavikatan )

வாலட்டில் ஆரம்பித்து ஆகாஷ§க்கு வந்துவிட்டேன். தொடங்கிய விஷயத்துக்கு வருவோம்...

வருங்காலத் தொழில்நுட்பம்

டிஜிமோ ( http://digimo.biz/ )  என்ற தொழில் நுட்பம் புதிதாக வெளியிடப்பட்டு உள்ளது. அலைபேசி மூலம் நடக்கும் வணிகத்தை இது விரைவில் பிரபலமாக்கிவிடும் என்று நம்புகிறேன். எப்படிச் செயல்படுகிறது டிஜிமோ?

கூகுள் வாலட்போலவே உங்கள் அலைபேசிக்குள் கிரெடிட் கார்டுகளின் தகவல்களைப் பதிந்துகொண்டாக வேண்டும். கடையில் பொருட்களை வாங்கிய பின்னர் பணம் செலுத்தும் இடத்தில் அந்தக் கடைக்கான குறிப்பிட்ட எண் கொடுக்கப்பட்டு இருக்கும். அதை அலைபேசியில் கொடுத்துவிட்டால், நீங்கள் இந்தக் கடை யில்தான் இருக்கிறீர்கள் என்பது டிஜிமோ வுக்குத் தெரியவரும். எவ்வளவு கொடுக்க வேண்டுமோ, அதை அலைபேசியில் இருக்கும் டிஜிமோ மென்பொருளில் டைப் செய்ய வேண்டும்.

முதலீடு அதிகமாகத் தேவைப்படும் டெர்மினல்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, டிஜிமோ, அவர்களின் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு கிரெடிட் கார்டு ஒன்றைக் கொடுக்கிறது. நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான தொகையை, கேஷியர் அவர்களிடம் இருக்கும் கிரெடிட் கார்டு சாதனத்தில் தேய்த்துவிட்டால்போதும். உங்களிடம் இருந்து பணம் எடுக்கப்பட்டு கடைக்குச் சென்றுவிடும்.

இதற்கு ஒரு படி மேலே சென்று, ஒரு தனி மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பணத்தைக் கொடுக்கும் பரிவர்த்தனைகளையும் இந்தத் தொழில்நுட்பத்தைக்கொண்டு செய்ய முடியும் என்பதால், இந்தத் தொழில்நுட்பம் இடையீடு கொண்டுவரும் என்று திடமாக நம்பு கிறேன். டிஜிமோ எப்படி இயங்கும் என்பதை விளக்கும் யூ டியூப் வீடியோ...  www.youtube.com/watch?feature=player_embedded&v=eO0DsY6wuHM#!

- log off

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism