Published:Updated:

யானையும் சிங்கமும் அஞ்சு ரூபாய் !

மோ.கிஷோர்குமார் படங்கள்: ச.லெட்சுமிகாந்த்

யானையும் சிங்கமும் அஞ்சு ரூபாய் !

மோ.கிஷோர்குமார் படங்கள்: ச.லெட்சுமிகாந்த்

Published:Updated:
##~##

''மாப்ள! 50 - வருஷம் பின்னுக்குப் போறது மாதிரி இருந்துச்சுல', ''யப்பா கோடி ரூவா கொடுத்தாலும் இனி கிடைக்குமா சாரட் வண்டி சவாரி?', ''பல்லாங்குழி, தாயம், பாண்டி இந்த விளையாட்டுகளை எல்லாம் மறந்தே போயிட்டோமே' - இப்படியான பேச்சுகள் எல்லாம் சென்ற வாரம் மதுரை தமுக்கம் மைதானத்தில் இருந்து வெளியே வந்த மக்களிடம் கேட்டது. இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் தமுக்கம் மைதானத்தில் 'மதுரை விழா 2012’ மண் வாசனையோடு கோலாகலமாக நடந்து முடிந்தது.

மதுரை மண்ணின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து இளைய தலைமுறையினருக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் தென்மாவட்டச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் நடத்தப்பட்ட இந்த விழாகுறித்து நமது என் விகடன் வாசகர் எஸ். ரமேஷ் போன் மூலம் தகவல் சொல்லியிருந்தார். இந்த விழா வில், பழங்கால மதுரையின் மாதிரிக் கிராமம், மாட்டுக்கொட்டகை, நீர் ஏற்றம், கலாசார வீதி, பாரம்பரிய விளையாட்டுக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், கிராமிய உணவு வகைகள், தெருக்கூத்துக் கலைஞர்களின் கூத்துப்பாடல்கள், கிராமிய இசை, கைவினைப் பொருள்கள் கண்காட்சி என, நாம் தொலைத்த பல பாரம்பரிய அம்சங்கள் அலங்கரித்தன!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யானையும் சிங்கமும் அஞ்சு ரூபாய் !

மாதிரிக் கிராமத்தின் குடிசை வீட்டைப் பார்த்த இன்றைய மதுரைப் பெண் ஒருவர் ''ஹேய் இது வுட் ஹவுஸ்மா!'' என்று தமிங்கிலீஷில் பேச, ''இது மாதிரி ஒரு குடிசை வீட்டில்தான்டி உன்னை நான் பெத்தேன்!'' என்று தலையில் அடித்துக்கொண்டார் அவருடைய அம்மா. குடிசையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த சிமிழ் விளக்கு, மண் பானை, பாய், மரக்கட்டில், திருகல், அம்மி, உரல் போன்றவற்றையும் அருகில் இருந்த மாட்டுக் கொட்டகை, நீர் ஏற்றம் போன்ற இப்போது காணக்கிடைக்காதப் பொருள்களை எல்லாம் மக்கள் நின்று நிதானித்து ரசித்துச் சென்றார்கள்.

யானையும் சிங்கமும் அஞ்சு ரூபாய் !

கலாசார வீதிகளில், சிற்பம், ஓவியம் மற்றும் மண்பாண்டக் கலைகள் குறித்து விளக்கப்பட்டது. கைவினைஞர்களின் கலைப் பொருள்கள், கிராமத்து உணவு வகைகள் என, மதுரை நகரின் கலாசாரத்தை உள்ளடக்கிய போட்டிகள், கண்காட்சிகள் நடத்தப்பட, 'செத்தவடத்துல நம்மளையும் கிராமத்துவாசி ஆக்கிபுட்டாங்களே’ என்று ஆச்சர்யக்குரல் எழுப்பினர் மதுரை நகர இளசுகள்.

ஜவ்வு மிட்டாய்க்காரர் பொம்மையை அதிசயமாகப் பார்த்த பலரும், அவரிடம் ஜவ்வு மிட்டாய் வாட்ச் வாங்கி கையில் கட்டிக் கொண்டனர். ஜவ்வு மிட்டாயில் அஞ்சு ரூபாய்க்கு யானை, சிங்கம் உருவங்களைச் செய்துகொடுத்த மாயாண்டி, குழந்தைகளின் மத்தியில் ஹீரோவாக உயர்ந்தார்.

யானையும் சிங்கமும் அஞ்சு ரூபாய் !

பழமையைக் குறித்த பெருமை பேசியபடி அரங்கைவிட்டு வெளியேறிய மக்கள், நவீன யுகத்தின் புழுதியோடும் புகையோடும் கலந்து கரைந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism