Published:Updated:

எங்களுக்குத் தீபாவளி மார்கழிதான் !

அ.அச்சனந்தி படங்கள்: ஆ.நந்தகுமார்

எங்களுக்குத் தீபாவளி மார்கழிதான் !

அ.அச்சனந்தி படங்கள்: ஆ.நந்தகுமார்

Published:Updated:
##~##

மார்கழி என்றால் குளிர், இசை, கச்சேரி... இவற்றை முந்திக்கொண்டு நினைவுக்குவருவது வாசலில் போடும் வண்ணக் கோலங்கள்தான். திண்டிவனம் மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களின் தெருக்களை அலங்கரிப்பவை இருதயபுரத்தில் தயார் ஆகும் கோலமாவுதான். இந்த ஊரின் முழுநேரத் தொழிலே கோலமாவு தயாரிப்புதான்.

'27 வருஷத்துக்கு முன்னாடி பிழைப்புத் தேடி இந்த ஊருக்கு வந்தோம். இந்த ஊருக்கு வந்தோம்னு சொல்றதைவிட இந்த ஊரை உருவாக்கினோம்னே சொல்லலாம். அப்ப 10 குடும்பம் குடியிருந்த ஊருல இப்ப 32 குடும்பங்கள் வாழுது. இங்க வந்த புதுசுல, நாத்து நடுறது, களை எடுக்கிறதுனு விவசாயக் கூலி வேலைக்குத்தான் போய்க்கிட்டு இருந்தோம் அப்புறம்தான் கோலமாவு வியாபாரத்தில் இறங்கினோம்'' என்று சொல்லும் அருள்பாண்டியன், தொடர்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வெள்ளைக் கோலமாவுதான் வாங்கியாந்து விக்கிறோம். கலர் கோலமாவை நாங்களே தயாரிக்கிறோம். ஓடை மணல் கொண்டாந்து அதைச் சலிச்சு, கப்பிய ஓரங்கட்டிட்டு, மணலை மட்டும் வெச்சுப்போம். இதுக்குன்னு விக்கிற சாயத்தை மணலோடு கலந்து கலர்ப் பொடி உருவாக்குவோம். திண்டிவனம் மட்டுமில்லாம வேலூர், ஆரணி, சேத்துப்பட்டு, திருவண்ணாமலை வரைக்கும் போய் விக்கிறோம்.

எங்களுக்குத் தீபாவளி மார்கழிதான் !

இங்க யாரும் பெருசாப் படிக்கலைங்க. அதுதான் இந்தத் தொழில் தொடர்றதுக்குக் காரணம். பசங்க எல்லாம் ஏழாவது, எட்டாவது வரைக்கும்தான் படிப்பாங்க. அப்புறம் சைக்கிள்ல சாக்கைக் கட்டிக்கிட்டு கோலமாவு விக்கிறதுக்குக் கிளம்பிடுவாங்க. நான் மட்டும்தான் ஏதோ தட்டுத்தடுமாறி 10-வது முடிச்சேன். இந்த ஊரைப் பொறுத்தவரைக்கும் 10-வதே பெரிய படிப்புதான். முன்ன எல்லாம் நல்லா வியாபாரம் ஆகும். கொஞ்ச வருஷமாத் தொழில் ரொம்பவே டல் அடிக்கிது.

எங்களுக்குத் தீபாவளி மார்கழிதான் !

கார்த்திகை, மார்கழி சீஸன்தான் எங்களுக்குப் பொங்கல், தீபாவளி மாதிரி. இந்த ரெண்டு மாசமும் ஊரே கலர்ஃபுல்லா இருக்கும். கலர் கோலமாவு கலக்கிறதால, இந்த மாசங்கள்ல ஓணமும் ஹோலியும் கொண்டாடி முடிச்ச மாதிரி  ஒவ்வொரு தெருவும் திருவிழா களைகட்டும். மற்ற மாசம் எல்லாம் வெள்ளைக் கோலமாவு விப்போம் அது அந்த அளவுக்குப் போணி ஆகாது. ஏப்ரல், மே மாசங்கள்ல எல்லாம் தர்பூசணி லோடு வாங்கி கடை போடுவோம்' என்றவர், நீண்ட பெருமூச்சுக்குப் பின் தொடர்ந்தார்.

எங்களுக்குத் தீபாவளி மார்கழிதான் !
எங்களுக்குத் தீபாவளி மார்கழிதான் !

'விடிய விடியக் கோலம் போட்ட காலம் எல்லாம் மலை ஏறிப் போச்சுங்க. சாணி கரைச்சு, வாசல் தெளிச்சு, கோலம் போட்டு அதுக்கு நடுவுல பூசணிப் பூ சொருகி, தெரு முழுக்க ஓவியக் கண்காட்சி நடத்த ஆட்களோ நேரமோ இல்லீங்க. நைட்டே போட்டு வெச்சுட்டா காலைல சீக்கிரம் எழுந்திருக்கிற வேலை இருக்காதுனு நினைக்கிறாங்க. தெருவுல கோலம் போடுறதும் ஒரு கலைதான் சார், இன்னைக்கு இருக்கிற பொண்ணுங்க பெரிய பெரிய படிப்பு எல்லாம் படிக்கிறாங்க. அது மாதிரி கோலம் போடவும் கத்துக்கணும்' என்று கோலம் குறித்து விவரிக்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism