Published:Updated:

லேடீஸ் வந்திருக்காக... வெள்ளைக்காரக வந்திருக்காக...

சீர்வரிசை ஸ்ரீதரன்கோ.செந்தில்குமார்

லேடீஸ் வந்திருக்காக... வெள்ளைக்காரக வந்திருக்காக...

சீர்வரிசை ஸ்ரீதரன்கோ.செந்தில்குமார்

Published:Updated:
##~##

தியாகங்கள், கொள்கைகளைவிட தலைமையின் மீதான விசுவாசத்தை நிரூபிப்பதே இப்போதைய அரசியல். இதை எப்படி எல்லாம் காட்டலாம், அதற்கு என்னென்ன டெக்னிக்குகளைப் பயன்படுத்தலாம் என்று ரூம் போட்டு யோசிப்பவர்கள் ஒவ்வொரு கட்சியிலும் உண்டு. இந்த வரிசையில் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளரும் முன்னாள் நகரமன்றத் தலைவருமான ஸ்ரீதரனுக்குத் தாராளமாக நான்கைந்து ரூம்களை ஒதுக்கலாம். கலைஞர் பிறந்தநாள், ஸ்டாலின் பிறந்தநாள் வந்துவிட்டால் இரண்டு மாதங்களுக்கு முன்பே பரபரப்பாகிவிடுவார் ஸ்ரீதரன். ''வழக்கமாக கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் பிறந்தநாள் சீர் வரிசைகள் தந்து அசத்துவார். இந்த ஆண்டு 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஸ்டாலினுக்கு ஸ்ரீதரன் என்ன செய்கிறார் என்று 'என் விகடனில்’ எழுதலாமே என, வாய்ஸ்ஸ்நாபில் வேண்டுகோள் வைத்திருந்தார் திருவண்ணாமலை வாசகர் சண்முகம். நாமும் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு ஆஜரானால் நிறையவே 'மாத்தி யோசி’த்து இருந்தார் ஸ்ரீதரன்.

லேடீஸ் வந்திருக்காக... வெள்ளைக்காரக வந்திருக்காக...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குதிரைகளில் கறுப்பு-சிவப்புக் கொடியை பிடித்தபடி அரண்மனை சேவகர்கள் போல சிலர் முன் செல்ல, ஸ்ரீதரன் தலைமையில் ஒரு மினி ஊர்வலமே நடந்தது. தாமரை மாலை, ரோஜா மாலை, முல்லை மாலை, மல்லிகை மாலை என 60 வகையான பூ மாலைகளை ஸ்டாலினுக்கு அணிவிக்க 60 இளம்பெண்களை அழைத்து வந்ததில்... அங்கேதான் நிற்கிறார் ஸ்ரீதரன். அதோடு ஷங்கர் படப் பாடல் காட்சிப்போல, இளைஞர்கள் வயிற்றில் 'தளபதி ஸ்டாலின் வாழ்க’ என்று பெயின்ட்டும் அடிக்கப்பட்டு இருந்தது.

லேடீஸ் வந்திருக்காக... வெள்ளைக்காரக வந்திருக்காக...

பெரிய கேக், 60 தட்டுகளில் ஆப்பிள், திராட்சை, பாதாம், பிஸ்தா, முந்திரி, இனிப்பு வகைகள் என, 60 வகை சீர்வரிசைகளோடு தொடங்கிய ஊர்வலம், அதிர்வேட்டுகள் முழங்க, மேளதாளத்தோடு 'ஸ்டாலின் வாழ்க!’ கோஷம் போட்டுக்கொண்டே இரண்டு கி.மீ. கடந்து சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை அடைந்தது. அங்கே 'என் உயிர் தளபதி வாழ்க’ என்று எழுதப்பட்டு இருந்த கேக்கை 'தளபதி’க்கு வழங்கினார்கள். இது எல்லாம்கூட மேட்டர் இல்லை. ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொல்ல, ஸ்ரீதரனால் அழைத்து வரப்பட்டவர்களில் ஐந்தாறு வெள்ளைக்காரர்களும் அடக்கம்.

லேடீஸ் வந்திருக்காக... வெள்ளைக்காரக வந்திருக்காக...

''இல்லையா பின்னே? தளபதியின் புகழ் தமிழ்நாட்டோடு நின்றுவிடவில்லை. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை  பரவி இருக்கிறது. அதனால்தான் அவருக்கு அமெரிக்காவில் இருந்து 'கெண்டக்கி கர்னல்’ விருது தந்திருக்கிறார்கள். இந்த வெள்ளைக்காரங்களை எல்லாம் நான்தான் கூட்டிட்டு வந்திருக்கேன்னு நீங்க நினைக்கலாம். ஆனா, உண்மையில் 'ஓர் இந்தியர் அமெரிக்காவின் மிகச் சிறந்த விருது பெற்றிருக்கிறார்’ என்பதைக் கேள்விப்பட்டு அவங்களாத்தான் வந்திருக்காங்க. அதுமட்டும் இல்லை, தளபதியை வாழ்த்த வந்த இளைஞர்களும் இளைஞிகளும் எந்தப் 'பிரதிபலனை’யும் எதிர்பார்க்காமத்தான் வந்தாங்க'' என்கிறார் ஸ்ரீதரன்.

நம்பிட்டோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism