Published:Updated:

கிளம்பிட்டாங்கய்யா !

குள.சண்முகசுந்தரம் படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

கிளம்பிட்டாங்கய்யா !

குள.சண்முகசுந்தரம் படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Published:Updated:

பச்சைக் குத்துவது அ.தி.மு.க-காரர்களின் ஸ்டைல். இருந்தாலும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு பச்சைக் குத்துவதில் பற்று இல்லாமல் இருந்தவர்கள் இப்போது மீண்டும் கிளம்பிவிட்டார்கள்.

கிளம்பிட்டாங்கய்யா !

ஜெயலலிதா பிறந்த நாளுக்காக மதுரையில் 24-ம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை 800 பேருக்கு மேல் அவருடைய உருவத்தைக் கைகளில் பச்சைக் குத்திக் கொண்டாடினார்கள். 'மாண்புமிகு’ கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, 'வணக்கத்திற்குரிய’ மதுரை மேயர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர், இந்தப் பச்சைக் குத்தும் படலத்தில் முன் வரிசையில் நின்று கையைக்கொடுத்தவர்கள். முன்பு எல்லாம் கையால் பச்சைக் குத்துவார்கள். ஒரு பச்சைக் குத்துவதற்கு அரை மணி நேரத்துக்கு மேல் பிடிக்கும். ஆனால், இப்போது அதுவும் ஹைடெக் ஆகிவிட்டது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மிஷின் மூலம் மூன்றே நிமிடங்களில் ஜோலியை முடித்துவிட்டு, 'அடுத்தாளு வாங்க’ என்று அழைக்கிறார்கள், நவீன பச்சைக் குத்தும் பாசிமணி பார்ட்டிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிளம்பிட்டாங்கய்யா !
கிளம்பிட்டாங்கய்யா !
 
கிளம்பிட்டாங்கய்யா !
   
     

செல்லூர் ராஜுதான் இந்தப் பச்சைக் குத்தும் வைபவத்துக்கு பிளான் போட்டவராம். ''பச்சைக் குத்துறது பழைய ஸ்டைலாச்சே?'' என்று அவரிடமே கேட்டால், ''ஆமா தம்பி.. பழசுங்குறதுக்காகப் பாரம்பரியத்தை மறக்க முடியுமா? தனக்காக வாழாமல் கழகத் தொண்டர்களுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் மட்டுமே அம்மா வாழ்றாங்க. தலைவருக்குக்கூட குடும்பம் இருந்துச்சு. ஆனா, அம்மாவுக்குக் கழகம்தான் குடும்பம்; நாங்கள்தான் பிள்ளைகள். அவங்களோட திரு உருவத்தைப் பச்சைக் குத்திக்கிற ஒவ்வொருத்தருக்கும், சுயநலம் பார்க்காமல் பொதுநலத்தோட வாழணும்னு உத்வேகம் வரணும். அதுக்காகத்தான் இந்த ஏற்பாடு. நான், மேயர், எம்.எல்.ஏ. மண்டலத் தலைவர்கள், பகுதிச் செயலாளர்கள் எல்லாரும் பச்சைக் குத்தி இருக்கோம். இதுல லேடீஸும் கணிசமா இருக்காங்க. அம்மா பிறந்த நாள் அன்னைக்கு, பச்சைக் குத்துறதுக்காகவே 15 பேரை கூட்டிவந்து அவங்களுக்குச் சாப்பாடு போட்டு தலைக்கு 500 ரூபாயும் கொடுத்தோம். எங்க அம்மாவுக்கு நாங்க காட்டும் சிறு நன்றி விசுவாசம் தம்பி இது. இன்னும் ஒரு மாசத்துக்கு இந்தப் பச்சைக் குத்துற திருவிழாவை நடத்தலாம்னு இருக்கோம்!'' என்று திகிலைக் கிளப்புகிறார் செல்லூர் ராஜு.

குத்துங்க எஜமான் குத்துங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism