Published:Updated:

”வீட்டுக்கு ரெண்டு மூணு பூச்சியிருக்கும்!”

”வீட்டுக்கு ரெண்டு மூணு பூச்சியிருக்கும்!”

”வீட்டுக்கு ரெண்டு மூணு பூச்சியிருக்கும்!”

”வீட்டுக்கு ரெண்டு மூணு பூச்சியிருக்கும்!”

Published:Updated:
”வீட்டுக்கு ரெண்டு மூணு பூச்சியிருக்கும்!”

திர்காலத்தில் மனிதர்களின் பெயர்கள் கம்ப்யூட்டரின் கோட் நம்பரால்தான் அழைக்கப்படும் என்று விஞ்ஞானிகள் பயமுறுத்துகிறார்கள். அது ஒருபுறம் இருக்க... இதோ, வித்தியாசமான பெயர்களைக்கொண்ட சிலருடன் ஒரு மினி பேட்டி...

”வீட்டுக்கு ரெண்டு மூணு பூச்சியிருக்கும்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாவாடை கண்டபிள்ளை (அறந்தாங்கி நகரசபை உறுப்பினர்):

##~##

''நான் பிறந்தவுடன் எங்க சாமி பாவாடையாத்தா நினைவா, எங்க ஆத்தா 'பாவாடை’னு எனக்குப் பேர் வெச்சது. பிற்பாடு பாவாடை கண்ட பிள்ளைனு ஆனேன். கண்டபிள்ளைங் கறது எங்க பேருக்குப் பின்னாடி வர்ற அடைமொழி. கண்டபிள்ளையில் ஒரு விசித்திரம் என்னன்னா, கண்ட பிள்ளையும் - கண்டபிள்ளையும் பொண்ணு கொடுத்து எடுத்துக்க மாட்டோம். ஏன்னா, அண்ணன் - தம்பி முறைனு. இதுவரைக்கும் இந்தப் பேரால் எனக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படலை!''

பி.கு: தன் பிள்ளைகளுக்கு கண்ணன், முரளி என்று மாடர்னாகப் பெயர் வைத்துள்ளார் பாவாடை.

புயல்ராமன் (ஊழியர் - மருதுபாண்டியன் போக்குவரத்துக் கழகம்): ''1955-ம் வருஷத்தில் பயங்கரமான வெள்ளம், புயல் அடிச்சு எல்லா வீடுகளும் அடிச்சுட்டுப் போயிருச்சு. அந்த நிலைமையில எங்கம்மாவுக்குப் பிரசவ வலி வந்திருக்கு. அப்ப வடக்குதானம்பட்டியில (நமனசமுத்திரம் அருகே) எங்க வீடெல்லாம் அடிச்சுட்டுப் போயி, ஒரு துண்டுத் திண்ணை இடம்தான் இருந்திருக்கு. அதுல எங்கம்மா பிரசவ வேதனையில துடிச்சுட்டு இருந்திருக்காங்க. அந்தப் புயல்லயும் எங்க அப்பா அரிக்கேன் லைட்டை எடுத்துக்கிட்டு ஆயாவைக் கூப்பிட நமனசமுத்திரம் வந்திருக்காரு. அப்ப அந்த ஆயா, 'தம்பி... குழந்தை பிறந்திருச்சா?’னு கேட்டிருக்கு. 'இல்லை’னு சொன்னவுடன், 'இங்க இப்ப ஒரு பிரசவம் பார்த்தேன். பெண் குழந்தை... புயல் ராணின்னு பேர் வைக்கச் சொன்னேன். உனக்குப் பிறக்கறதுக்கு புயல் ராஜன் அல்லது புயல் ராணினு வைக்கணும்’னு கண்டிஷன் போட்டுப் பிரசவம் பார்க்க வந்திருக்காங்க.

அதுபோலவே, நான் பொறந்தவுடனே அந்த அம்மா சொன்ன மாதிரியும் எங்க தாத்தா பேரையும் (ராமன்) சேர்த்து புயல்ராமன்னு எங்க அப்பா வெச்சுட்டாரு. ஸ்கூல்ல இருந்து இப்ப ஆபீஸ் வரைக்கும் என் பேரு எல்லாருக்கும் ஆச்சர்யமா இருக்கும். பேரை மாத்திக்கச் சொல்லி, எத்தனையோ பேர் அட்வைஸ் சொன்னாங்க. நான் மாத்திக்கலை. சர்ட்டிஃபிகேட்ஸ் எல்லாத்துலயும் இதுதான் பேரு!''

”வீட்டுக்கு ரெண்டு மூணு பூச்சியிருக்கும்!”

சாலைப்பளிங்கி (கல்லூரி மாணவர்): ''எங்க குடும்பத்தில் உள்ளவங்களுக்கு எல்லாம் எங்க ஆண்டவர்தான் (பாதிரியார் மாதிரி) பேர் வைப்பார். அப்படி வெச்சதுதான் என் பேரு. தீட்சை வாங்கற வரைக்கும் எங்க குரூப்ல எல்லாப் பேருக்கும் முன்னாடி சாலைங்கிற பேரு பொதுவா இருக்கும். இதுக்கு, எப்போதும் சாவில் லயித்திருப்பவர்கள்னு அர்த்தம். தீட்சை வாங்கிட்டா, சாலைங்கிறது மெய்வழினு மாறிடும். இதுக்கு, மெய்யான வழியில் செல்பவர்கள்னு அர்த்தம். இப்படி ஒரு வித்தியாசமான பெயர் இருக்கிறதால, என் பெயர் காலேஜ் பூராவும் பிரபலம். இதுவரைக்கும் ஆயிரம் பேர்கிட்டயாவது என் பெயருக்கான காரணத்தை விளக்கியிருப்பேன்!''

நெய்வேலம்: ''சக்தி சங்கராக்கோட்டைகிட்ட நெய்வேலி அய்யனார் சாமினு இருக்கு. அது பேரைத்தான் எனக்கு வெச்சாங்க. பிறகு, நெய்வேலம்னு சிம்பிள் (!) பண்ணிக்கிட்டேன். அந்தக் காலத்துல நெய்வேலம்னா, ஸ்கூல்ல தெரியாத ஆளே கிடையாது, ஏன்னா, கணக்குல நான் புலி. பசங்கள்லாம் நெய்வேலம் நெய்வேலம்னு என்னையே சுத்திச் சுத்தி வருவாங்க!''

பூச்சி (பொன்னமராவதி மாணவ காங்கிரஸ் தலைவர்): ''பூச்சிங்கிறது எங்க ஏரியாவுல சாதாரணப் பேருதாங்க. வீட்டுக்கு ரெண்டு மூணு பூச்சி இருக்கும். ஆனா, நம்ம பேரை பேங்க்ல, காலேஜ்ல எல்லாம், 'என்னப்பா பூச்சி, வண்டுனு பேர் வெச்சுக்கிட்டு’ம்பாங்க. ஆரம்பத்துல மனசு கஷ்டமா இருந்துச்சு. இப்ப அதுல ஒண்ணும் தெரியல. ஏதாவது கேட்டு நான் தரலைன்னா போதும், என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் 'டேய்! உனக்கு பூச்சின்னு ஏன் தெரியுமா பேர் வெச்சாங்க? பிறக்கும்போது நீ பூச்சி மாதிரி கத்தினேடா, அதான்’னு டீஸ் பண்ணுவாங்க. நானும் ஜாலியா எடுத்துப்பேன். மத்தபடி, இந்தப் பேரால பாப்புலாரிட்டிதான் ஜாஸ்தி!''

”வீட்டுக்கு ரெண்டு மூணு பூச்சியிருக்கும்!”

சு.தையல்பாகம் (தலைவர், சாலை ஆய்வாளர் சங்கம்): ''தையல்னா பெண். பெண்ணைப் பாதியில் கொண்டவர்னு பொருள்படுற அர்த்தநாரீஸ்வரர் பேர் இது. பொதுவா எங்க குடும்பத்துல முதல் குழந்தை ஆணா இருந்தா இந்தப் பேரும் பெண்ணா இருந்தா தையல் நாயகின்னும் பேரு வைப்பாங்க.

யார்கிட்ட நான் போனாலும் என் பேருக்கு ஒரு முன்னுரை சொல்லிடணும். சமீபத்துல, பேங்க்ல என் பேர் கூப்பிடறதுக்காகக் காத்துட்டுஇருந்தேன். 'தையல்பேகம் தையல்பேகம்’னு கூப்பிட, 'சரி, ஏதோ முஸ்லிம் பெண்ணைக் கூப்பிடறாங்க போலிருக்கு’னு நினைச்சேன். அப்புறம்தான் தெரியுது, என் பேரைத்தான் அப்படிக் கூப்பிட்டிருக்காங்க. ஒரே ஒரு எழுத்து மிஸ்டேக்ல என்னை முஸ்லிமாக்கி, பொண்ணா கவும் ஆக்கிட்டாங்க!''

- எம்.சிங்கமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism