Published:Updated:

அதிக வரி கட்டி, அதிக வசதியைக் கேட்போம்!

அதிக வரி கட்டி, அதிக வசதியைக் கேட்போம்!

பிரீமியம் ஸ்டோரி
அதிக வரி கட்டி, அதிக வசதியைக் கேட்போம்!

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்திருக்கிற இந்த சமயத்தில், அடுத்த சில நாட்களில் தாக்கலாகப் போகும் பட்ஜெட் மிக மிக முக்கியம் என்றே நான் நினைக்கிறேன். தேர்தலுக்கு முன்பே மக்கள் தங்களது எதிர்பார்ப்புகளை தெளிவாகச் சொல்லி இருந்தார்கள். விலைவாசி உயர்வு, சாலைகளின் தரம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து நிரந்தரமான தீர்வுகளை மக்கள் எதிர்பார்த்தார்கள். மக்களின் கோரிக்கையை நிராகரித்ததன் விளைவு, இன்று ஆட்சிகள் மாறியிருக்கின்றன.

அதிக வரி கட்டி, அதிக வசதியைக் கேட்போம்!

க்கிய முற்போக்கு கூட்டணியின் கடந்த முறை ஆட்சியும்,  இப்போதைய ஆட்சியும் பொருளாதார வளர்ச்சியை நோக்கியே சென்றது. ஆனால், தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வராமல், அரசு செய்யும் செலவுகளில் இருந்து வளர்ச்சியை எதிர்பார்த்தது.

இலவசங்களைத் தந்தே ஓட்டுகளை வாங்கி, அரசை நம்பியே மக்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டது. இந்த இலவசங்களாவது முழுமையாக மக்களைச் சென்றடைந்ததா என்றால் அதுவுமில்லை. அதிலும் ஊழல் தலைவிரித்தாடியது. தரமில்லாத பொருட்களே மக்களுக்கு கிடைத்தன. ஏன் தரமில்லாத பொருளை தருகிறார்கள் என்று யாரும் கேட்கவில்லை.

இந்த அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் முடிந்துவிட்டது. குறைந்த பொருளாதார வளர்ச்சி, மின் தட்டுப்பாடு, நிதிப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை.

தன் சக்திக்கு மீறி இந்த அரசு செலவு செய்தது. அதிகமாகச் செய்யும் செலவுகளுக்கு ஏற்ப, கொஞ்சம் அதிகமாகவாவது வரி விதித்திருக்கலாம். ஆனால், அதையும் இந்த அரசு செய்யவில்லை. அடுத்து வரப்போகும் தலைமுறை யினருக்குப் பொருளாதார வளர்ச்சிக்கான ஆதாரத்தை ஏற்படுத்தாமல், அடுத்த     தலைமுறைக்கும் கடன் வாங்கி சேர்த்து வைக்கிறது இந்த அரசு.

கடந்த எட்டு ஆண்டுகளில், இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த நிதிப் பற்றாக்குறையைக் கொண்டு வந்துவிட்டது. இந்த பற்றாக் குறையினால்தான் பணவீக்கமும் அதிகரித்து, நம் பொருளாதார வளர்ச்சியும் 6.1 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.

##~##
தற்போதைய நிலையில் மக்களின் செலவுகள் அதிகரித்து, சேமிப்பு குறைகிறது. இதனால் பொருட்களின் விலை பெரிதாக உயர்ந்திருக்கிறது. இரண்டாவது, நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கு இந்த அரசினால் மேலும் கடன் வாங்க முடியவில்லை. இதனால், ரிசர்வ் வங்கி புதிதாக பணத்தை அச்சடித்து மத்திய அரசிடம் கொடுத்தது.       பொருட்களைவிட பணம் அதி கமாக இருப்பதால் பணவீக்கம் உயர்ந்தது. எனவேதான், இலவச டி.வி., லேப்டாப் கிடைத்தும் மக்களுக்குத் திருப்தியில்லை.

ஆனால், இலவசங்களை தந்தே மக்களின் ஏழ்மையை போக்கிவிடலாம் என்று அரசியல் கட்சிகள் இன்னமும் நம்புகின்றன. எங்களுக்கு இலவச டி.வி., லேப்டாப், இலவச அரிசி வேண்டாம். சாலை, கல்வி, சுகாதாரம், மின்சாரம் போன்ற வற்றை கொடுங்கள் என மக்கள் கேட்க வேண்டும்.

இதையெல்லாம் மனதில் வைத்துதான் வருகிற 16-ம் தேதி தாக்கலாகும் பட்ஜெட் முக்கியமானது என்கிறேன். இந்த பட்ஜெட்டில் அரசின் செலவுகளை குறைக்க வேண்டும். அதே சமயத்தில் வரிகளையும் சிறிது அதிகப்படுத்த வேண்டும். சிறிதளவு வருமானத்தை அதிகரிப்பதோ அல்லது சிறிதளவு செலவுகளை குறைப்பதோ போதாது.

இப்போது நாம் கட்டும் குறைந்தபட்ச வரியினால், மோசமான சாலைகள், மோசமான சுகாதாரம், மின்வெட்டு, தரமில்லாத பள்ளிகளைத்தான் உருவாக்க முடியும். குறைவான வரியைக் கட்டிவிட்டு, கொசுவத்தி, மினரல் வாட்டர் பாட்டில், டாக்டர் கட்டணம் என எக்கச்சக்கமாக செலவு செய்வதை விடுத்து, அதிகமான வரியைச்  செலுத்தி தரமான சேவையை ஏன் அரசிடமிருந்து நாம் பெறக்கூடாது?

மத்திய அரசு மட்டுமல்ல, நாமும் நம்முடைய அணுகு முறையை மாற்ற வேண்டும். அப்போதுதான் மத்திய அரசை மாற்றுவதற்கான தார்மீக உரிமை நமக்கு வரும். இல்லை யெனில், ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கம், குறைவான வளர்ச்சி, பங்குச் சந்தை சரிவு போன்ற பிரச்னைகளை நாம் தொடர்ந்து அனுபவிக்க வேண்டிவரும்.

இதனால் நம் எதிரியின் பலம் கூடும். நம் நாட்டின் பாதுகாப்பிற்குகூட அச்சுறுத்தல் ஏற்படலாம். நாம் இனியாவது விழித்துக் கொள்வது நல்லது.

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு