முகூர்த்தத்துக்கு தமிழ்நாட்டு ஸ்டைலில் புடவை உடுத்தி, ரிசப்ஷனுக்கு குஜராத்தி ஸ்டைலில் புடவை உடுத்துவது நம் பெண்களின் வழக்கம். 'இன்னும் வித்தியாசமா, பிரத்யேகமா ஏதாச்சும் காஸ்ட்யூம் வேணும்...’ என்று யோசிக்கும் பெண்கள், இப்போது டிக் செய்வது... 'கூர்க் வெடிங் காஸ்ட்யூம்’!

'கூர்க் வெடிங் காஸ்ட்யூம்' என்பது கர்நாடக மாநிலத்தின் குடகு மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் திருமண வைபவ உடை. அதன் அழகும், வசீகரமும் இப்போது நம் மாநிலப் பெண்களையும் அதை விரும்பச் செய்கிறது. ''வீட்ல கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சாச்சு. முகூர்த்தம், ரிசப்ஷனுக்கு எல்லாரையும் போல இல்லாம, ஏதாச்சும் ஸ்பெஷலா உடுத்தணும். கூர்க் வெடிங் காஸ்ட்யூம்-ஐ ரிகர்சல் பார்க்கலாமா ஆன்ட்டி..?!’ என்று ஆர்வமாக வந்த பிரியங்காவுக்கு... இன்னொரு பக்கம், 'ஜீன்ஸ், டி-ஷர்ட்னு இருக்கற எனக்கு இது பொருந்துமா..?’ என்கிற சந்தேகமும் இருந்தது.

''ஃபைனல் ரிசல்ட் பார்த்துட்டுச் சொல்லுங்க!'' என்று அவருக்கு 'கூர்க் வெடிங் காஸ்ட்யூம்' அலங்காரத்தை ஆரம்பித்தோம்.

புடவை உடுத்துவதற்கு முன், அதன் நிறத்துக்குப் பொருந்திப் போகிற மேக்கப், சிகை அலங்காரங்கள் ஆரம்பமாயின. பிரியங்காவுக்கு நார்மலான ஃபேஸ் மேக்கப்புடன், ஐ ஷேடோவும், லிப்ஸ்டிக்கும் அடர் வண்ணத்தில் கொடுத் தோம். அவர் உடுத்தப் போகும் புடவைக்கு அது பொருந்திப் போகவேண்டும் என்பதுதான் முக்கியக் குறிக்கோள். குறிப்பாக, ஐ ஷேடோ... பிரியங்கா புடவை யின் பிளவுஸ் மற்றும் புடவை பள்ளுவின் நிறத்தில் ஈர்க்கும்படி இருந்தது. நெயில் பாலிஷ§ம் புடவையின் கலர் ஷேடை ஒட்டிய அடர் நிறம்தான்.

அடுத்து கூந்தலுக்குப் போகலாம். தமிழ்நாட்டில், பின்னல் போட்டு பூ சுற்றுவது; குஜராத்தில், பின்னல் போட்டு பீட்ஸ் வைப்பது என்பதெல்லாம் ஸ்டைலாக இருக்கின்றன. இதேபோல, 'லோ பன்’ ஹேர் ஸ்டைல்தான் கூர்க் பகுதியின் ஸ்பெஷல். கூர்க் ஸ்டைலில் புடவை கட்டும்போது, இந்த ஹேர் ஸ்டைல்தான் லட்சணமாக இருக்கும். எனவே... பிரியங்கா வுக்கும் அதே ஸ்டைல் அமைத்து, செயற்கை மலர்களால் அலங்காரம் செய்தோம். அந்த மலர்களை புடவை பள்ளுவின் நிறத்தில் தேடித் தேடிச் சேகரித்தோம். முன்பக்கம் ஸ்டைலாக கொஞ்சம் சைடு வகிடுபோல் எடுத்து, நெற்றிச் சுட்டியை கேசத்துக்குள் அடங்கி இருப்பது போலவும், அதன் பென்டென்ட் மட்டும் நெற்றியில் ஆடுவது போலவும் செட் செய்தோம். கூர்க் ஸ்டைலில் புடவை உடுத்தும்போது... கழுத்தில் இருந்து கொஞ்சம் இறங்கி இருக்கும் என்பதால், அந்த ஸ்பேஸில் அழகாகத் தொங்குவதுபோல் ஒரு படா பென்டன்ட் வைத்த செயினை அணிவித்தோம்.

மேக்கப் ஓவர். இனி, புடவை உடுத்த வேண்டும். அதுதான் ஹைலைட் என்றாலும், அது ஸோ சிம்பிள் மெத்தட்தான். முழுக்க ஜரி வேலைப்பாடுகள் கொண்ட புடவையைவிட, பாடி பிளெயினாகவும் பார்டர் மட்டும் பளிச் என்றும் இருக்கும் புடவைதான், கூர்க் ஸ்டைலுக்குச் சிறந்தது என்பதால், அதையேதான் தேர்ந்தெடுத்தோம். பொதுவாக நாம் புடவை உடுத்தும்போது, பள்ளுவை முன்பக்கத்தில் இருந்து இடது தோள்பட்டை வழியாக பின்பக்கம் விடுவது வழக்கம். கூர்க் ஸ்டைலில் இடது கக்கத்தின் வழியாக செலுத்தி, வலது தோள்பட்டை வழியாக முன்புறம் இறக்கி, மார்பு பகுதியில் பின் செய்துவிட வேண்டும்... அவ்வளவுதான்! 'ஏய்... இந்தக் காஸ்ட்யூம் ரொம்ப டிஃபரன்ட்டா இருக்கே!’ என்று திருமண நாளிலோ... ரிசப்ஷன் வேளையிலோ... இதுதான் அரங்கு முழுக்க பெண்களிடம் பேச்சாக இருக்கும்!

வித்தியாசம் விரும்பும் பெண்கள் டிரை செய்து பாருங்கள்... கூர்க் வெட்டிங் காஸ்ட்யூம்!

- மிளிரும்...