Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

மாற்றம் ஒன்றுதான் வாழ்க்கையில் மாறாதது என்பது டெக் உலகில் இருப்பவர் களுக்குப் பாலபாடம். இணைய தொழில்நுட்ப உலகில் பெரிய மாற்றங்கள் சமீபத்தில் என்னென்ன நடந்துஇருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்!

முதலில் ஃபேஸ்புக்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்ற வருட இறுதியில் ஃபேஸ்புக் தனது தளத்தை 'கால வரிசை’ (Timeline) என்ற புதிய கோட்பாட்டின் கீழ் மறுவடிவமைக்கத் தொடங்கியது. ஃபேஸ்புக்கைப் பல வருடங்கள் பயன்படுத்தி வருபவர்களுக்கு ஓப்பன் கிராஃப்  என்ற பதம் தெரிந்திருக்கலாம். பயனீட்டாளரான உங்களது நட்பு வட்டங்களையும் விருப்பு வெறுப்பு களையும் உங்களது புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் ஒன்றாகத் தொகுத்துத் தயாரிக்கப்படும் விவரக் குறிப்புதான் ஓப்பன் கிராஃப். பல தருணங்களில் இந்த விவரக் குறிப்பு மூலம் ஃபேஸ்புக் உங்களிடம் இருந்து தகவல்களை எடுத்துக்கொள்கிறது என்பது உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

இந்த விவரக் குறிப்புச் சேகரிப்பின் அடுத்த வடிவம்தான் காலவரிசைத் தொழில்நுட்பம். இது வரை யாருடன் நட்புகொண்டு இருந்தீர்கள், என்ன விருப்பங்கள் உங்களுக்கு இருந்தன என்பதுடன் என்னென்ன கால கட்டங்களில் என்ன செய்துவந்தீர்கள் என்பதையும் இப்போது இணைத்துக்கொண்டு இருக்கிறது ஃபேஸ்புக். இப்போதைக்குப் பயனீட்டாளர்களைக் காலவரிசை கொண்ட வடிவமைப்புக்கு வாருங்கள் என்று அழைத்தபடி இருக்கும் ஃபேஸ்புக், இன்னும் சில மாதங்களில் அனைத்துப் பயனீட்டாளர்களையும் இந்தப் புதிய அமைப்புக்குள் வலுக்கட்டாயமாகக் கொண்டுவந்துவிடும். 'காலவரிசை கடுப்படிக்கிறது, அதை மாற்ற முடியுமா?’ என்று கேட்கும் டாக்டர் காயத்ரிக்கு ஃபேஸ்புக்கில் சொன்ன பதிலை இங்கே பகிர்ந்துகொள் கிறேன். 'மாற்ற முடியாது. அப்படி மாற்ற முடியும் என்று உறுதி அளிக்கும் சில மென்பொருள்கள் உங்களது பெர்சனல் தகவல்களைத் திருடுவதற்காக நிறுவப்பட்டவை!’

தனி நபர்களுக்கு மட்டும் அல்ல, வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக் பக்கங்களும் வலுக்கட்டாயமாக காலவரிசைக்குக் கொண்டுசெல்லப்படுவதாக இந்த வாரம் அறிவித்திருக்கிறது ஃபேஸ்புக். இப்போதைக்கு பழைய வடிவிலேயே இருக்கும் ஆனந்த விகடனின் ஃபேஸ்புக் பக்கம் (https://www.facebook.com/anandavikatan) இன்னும் சில வாரங்களில் காலவரிசைக்குள் கொண்டுவரப்படும்!

அடுத்து கூகுள்...

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

இந்த வாரம் கூகுள் அறிவித்திருக்கும் மாற்றத்தைப் பார்த்து, பலருக்கும் செம குழப்பம். அவர்களிடம் இருக்கும் ஆண்ட்ராயிட் மென்பொருள் சந்தை (Android Marketplace), இசைச் சந்தை, புத்தகச் சந்தை ஆகியவற்றை ஒன்றாக இணைத்து கூகுள் ப்ளே (Google Play) என்ற பெயரில் மெகா சந்தை ஒன்றை நிறுவி இருக்கிறது. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இன்னும் சில்லறைத்தனமாக இருப்பதுபோலத் தோன்றினாலும், அவர்களது நீண்ட காலத் திட்டத்துக்கு இது ஓர் அடிக்கல்போலத் தோன்றுகிறது. மோட்டரோலாவை வளைத்துப் போட்டதன் மூலம், வன்பொருள் தொழில் நுட்பத்தையும் கையில் வைத்திருக்கும் கூகுள் மின்தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் தொழில்நுட்பமாக கூகுள் ப்ளே மாறும் வாய்ப்பு இருக்கிறது. வருங்காலத்தில், ஆண்ட்ராயிடில் இயங்கும் ஒரு செட் டாப் பெட்டியை வீட்டுக்கு நடுவில் வைத்து, கூகுள் ப்ளே மூலம் டி.வி. நிகழ்ச்சிகளை வரவேற்பறையில் பார்த்துவிட்டு, குளிக்கச் செல்கையில் பாடல்களைக் கேட்டு ரசிக்கவும், குளித்து முடித்து கணினியில் அமர்ந்து புத்தகங்களைப் படிக்கவும் சாத்தியக்கூறு இருக்கிறது (சந்தையின் உரலி  https://play.google.com).

கடைசியாக ஆப்பிள்...

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

ந்த வரியை எழுதுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்தான் ஆப்பிளின் செயல்தலைவர் டிம் குக் புதிய ஆப்பிள் டி.வி. சாதனத்தையும் புதிய ஐ-பேட் குளிகையையும் வெளியிட்டார். குக் ஸ்டீவ் ஜாப்ஸின் பிரசன்டேஷன் பாணியை அப்படியே பின்பற்றினாலும், ஜாப்ஸ் விட்டுச் சென்றிருக்கும் வெற்றிடத்தை ஆப்பிளால் எந்தக் காலத்திலும் நிரப்ப முடியாது என்றே தோன்றுகிறது. ஆப்பிள் டி.வி. இப்போது இருக்கும் சாதனத்தைவிட சற்றே அதிகமான அம்சங்களுடன் இருக்கிறது. புதிய ஐ-பேட் பழைய ஐ-பேடைப் போலவே அதே அளவிலும் எடையிலும் இருந்தாலும் இதன் திரையின் தெளிவுத்திறன் (screen resolution) பல மடங்கு அதிகம். ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சந்தையில் கிடைக்கும் உயர் வரையறை தொலைக்காட்சி சாதனத்தைவிட அதிக தெளிவாக இந்தப் புதிய ஐ-பேடின் திரை இருக்கும். இதைத் தவிர குறிப்பிட்ட பெரிய முன்னேற்றங்கள் எதுவும் இல்லை என்றாலும், ஆப்பிளின் மார்க்கெட்டிங் இயந்திர வரலாற்றில் இன்னொரு கல் என்றெல்லாம் ஏற்றிவிட்டது டூ மச். அதிகபட்சம் இன்னும் இரண்டு வருடங்களுக்கு வேண்டுமானால், ஐ-போனை யும் ஐ-பேடையும் வைத்து ஆப்பிள் கதை ஓட்ட முடியும். அதற்கு மேல், புதுமை யைக் கொண்டுவந்தால்தான் ஆப்பிள் தொடர்ந்து இதே வேகத்தில் வளர முடியும். இல்லையேல், அது இன்னொரு மைக்ரோசாஃப்ட் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்!

LOG OFF

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism