Published:Updated:

”எம்.ஜி.ஆர். படம் பார்த்த வண்ணாரப்பேட்டை நாட்கள்!”

Kalaipuli Thanu

”எம்.ஜி.ஆர். படம் பார்த்த வண்ணாரப்பேட்டை நாட்கள்!”

”எம்.ஜி.ஆர். படம் பார்த்த வண்ணாரப்பேட்டை நாட்கள்!”

”எம்.ஜி.ஆர். படம் பார்த்த வண்ணாரப்பேட்டை நாட்கள்!”

Published:Updated:
Kalaipuli Thanu
”எம்.ஜி.ஆர். படம் பார்த்த வண்ணாரப்பேட்டை நாட்கள்!”

''நான் பிறந்தது ராயபுரம் மன்னார்சாமி கோயில் தெருவில்தான். ஆனால், வண்ணாரப்பேட்டையில் வாழ்ந்த ஆரம்பப் பள்ளி நாட்கள்தான் என் வாழ்க்கையின் அழகான நாட்கள். சலவைத் தொழிலாளர்கள் அதிகம் வசிச்சதாலும், சலவைத் துறை இருந்ததாலும் இது வண்ணாரப்பேட்டை ஆச்சுங்கற கதை ஊருக்கேத் தெரியும். இன்னைக்கு இது கட்பீஸ் ஜங்ஷனா மாறிடுச்சு!'' - தான் வளர்ந்த வண்ணாரப்பேட்டை குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கலைப்புலி தாணு.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வண்ணாரப்பேட்டையின் புழுதி பறக்கும் தெருக்களுக்கும் எனக்கும் அப்படி ஓர் அந்நியோன்யம் உண்டு. ஆதம் சாகிப் தெருவுல ஆரம்பிச்சு ராமநாயக்கர் தெரு, ஆண்டியப்ப முதலித் தெரு, பேரம்பாலு செட்டித் தெரு, நாராயண நாயக்கர் தெரு, ராமானுஜர்கூடம் தெரு, சண்முகராயன் தெரு, கைலாயச்செட்டித் தெரு, பசவையர் தெருன்னு என் கால்படாத தெருக்கள் இங்கே இல்லை. இத்தனை இடங்கள் இருந்தாலும் தி.மு.க- என்கிற ஒரு பெரிய இயக்கத்தை ஆரம்பிச்ச ராபின்சன் பூங்கா கொஞ்சம் ஸ்பெஷல். ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனைக்கு எதிரில் இருக்கிற கிரவுண்டும் அதே மாதிரிதான். அங்கேதான் நான் சைக்கிள் ஓட்டிப் பழகினேன்.

சஞ்சீவிராயர் கோயில் தெருவில் இருக் கிற கார்ப்பரேஷன் நடுநிலைப் பள்ளியில் படிச்சேன். படிப்பு, பாட்டு, பேச்சு எல் லாத்துலயும் முதல் இடம் எனக்குத்தான். பின்னாடி கே.சி.சங்கரலிங்க நாடார் பள்ளியிலும் சர் பி.டி.தியாகராயர் கல் லூரியிலும் படிச்சேன். அந்த காலேஜுக்கு டிரஸ்டியா இருந்த எம்.ஜி.ஆர்., பிரின்சி பாலுடன் மீட்டிங்குக்கு வருவார். அங்க இருந்த அரங்கத்துல 'இன்பக் கனவு’ நாடகம் நடக்கும். அப்போ ஸ்டேஜுக்குப் பின்னாடி இருந்து வந்து எம்.ஜி.ஆரைத் தொட்டுப் பார்த்திருக்கேன்.

”எம்.ஜி.ஆர். படம் பார்த்த வண்ணாரப்பேட்டை நாட்கள்!”

நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். ராய புரம் பிரைட்டன் தியேட்டர்ல 'மலைக் கள்ளன்’, பாரத் தியேட்டர்ல 'தாய்ச்சொல் லைத் தட்டாதே’, 'குடும்பத் தலைவன்’, 'தாய்க்குப் பின் தாரம்’, கிருஷ்ணா தியேட் டர்ல 'நாடோடி மன்னன்’, கிரவுன் தியேட்டர்ல 'பணம் படைத்தவன்’னு ஓடி ஓடி எம்.ஜி.ஆர். படங்களைப்பார்த்து வளர்ந்தேன். அதே மாதிரி பிரபாத்தியேட் டர்ல பார்த்த 'வஞ்சிக்கோட்டை வாலி பன்’, மகாராணி தியேட்டர்ல பார்த்த 'காட்டு ரோஜா’வும் மறக்க முடியாது. 'காட்டு ரோஜா’ படம் பார்க்க 35 பைசா டிக்கெட்டு எடுக்க எகிறிக் குதிச்சு, பல்லு ஒடைஞ்சு ரத்தம் வழியுது. ஆனாலும் படம் பார்த்துட்டுதான் திரும்பினேன். இன்னைக்கு கிருஷ்ணா, கிரவுன், பிரபாத் தியேட்டர்கள் இல்லை. பாரத், மகாராணி எல்லாம் இருக்கு. பிரைட்டன் தியேட்டர் ஹை-ட்ரீம்ஸா மாறிடுச்சு.

சென்னமல்லீஸ்வரர் கோயிலுக்கு எதிரே இருக்கிற மிட்டாய்க் கடையில விக்கிற பால்கோவான்னா எனக்கு அவ்ளோ ஆசை. வீட்டுல என்னைத்தான் பூ வாங்க பூக்கடைக்கு அனுப்புவாங்க. பஸ்ஸுக்கும் 20 பைசா தனியாக் கொடுப்பாங்க. வண்ணாரப் பேட்டை பேரம்பாலுச்செட்டித் தெருவுல இருந்து பூக்கடைக்கு நடந்தேபோவேன். அப்படி மிச்சப் படுத்துன 20 காசுல பால்கோவா வாங்கிச் சாப்பி டுவேன்.

ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது கிரிக்கெட்டுல எனக்கு ஆர்வம். தியாகராயர் கல்லூரி கிரவுண்டு, கொருக்குப்பேட்டை தியாகராயர் பள்ளிக்கு முன் னாடி இருக்கிற கிரவுண்டுனு கிரிக்கெட்டுக்காக பல இடங்களுக்கும் சுத்துவேன். வண்ணாரப்பேட்டை, துலுக்கானத்தம்மன் கோயில்ல நண்பர்கள் சகிதமா சாமி கும்பிட்டதும், அப்படியே அவங்களோட போய் துர்கா கேப்ல இட்லி சாம்பார் சாப்பிட்டதும் என்னைக்கும் நெஞ்சுல நிக்கும். அதே மாதிரி, பகவதி கேப் பிரியாணி, ஸ்பெஷல் குருமா டேஸ்டுக்கு எப்பவும் நான் அடிமை. பாலா மிலிட்டரி, பாம்பே ஹோட்டல்கள்லயும் பிரியாணியும் சாப்ஸ்ஸும் பட்டையைக் கிளப்பும்.

”எம்.ஜி.ஆர். படம் பார்த்த வண்ணாரப்பேட்டை நாட்கள்!”

'நல்லவன்’ பட ஷூட்டிங் சமயத்துல, படக் குழுவுக்கு பகவதி ஹோட்டல் பிரி யாணியும் ஸ்பெஷல் குருமாவும் வாங்கிக் கொடுத்தேன். எல்லாருமே அந்தப் பிரி யாணிக்கு மயங்கி ஃபேன் ஆயிட்டாங்க. இன்னிக்கு எல்லாமே மாறிப் போச்சு. ஆனாலும், என்னோட சின்ன வயசுல 1961-ல சஞ்சீவிராயன் கோயில் தெருவுல கேட்ட காமராஜரோட பேச்சும், சோலை யப்பன் தெரு மண்டபத்துல கனிகளால் அலங்காரம் செய்யப்பட்ட மேடையில அண்ணா பேசுன பேச்சும் இன்னும் காதுகளில் ஒலிச்சுக்கிட்டு இருக்கு!''

”எம்.ஜி.ஆர். படம் பார்த்த வண்ணாரப்பேட்டை நாட்கள்!”

- செந்தில் ராஜாமணி
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism