Published:Updated:

டிகிரி... செஞ்சுரி!

படிப்பில் சதம் அடித்த பார்த்திபன்

டிகிரி... செஞ்சுரி!

படிப்பில் சதம் அடித்த பார்த்திபன்

Published:Updated:

ங்கு பலருக்கு பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். என, ஏதாவது ஒரே ஒரு டிகிரிமுடித்து பட்டம் வாங்குவதற்குள் உயிர் போய் உயிர்வரு கிறது. ஆனால், ஒருவர் தொடர்ந்து 40 ஆண்டு களாகப் படித்து 101 டிகிரி வாங்கி இருக்கிறார் என்றால் நம்புவீர்களா? அவர் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் பார்த்திபன்.

டிகிரி... செஞ்சுரி!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சின்ன வயசுல இருந்தே நல்லா படிப்பேன். படிப்பைத் தவிர விளையாட்டு, சினிமானு எந்தப் பொழுதுபோக்கிலும் எனக்கு ஆர்வமே இருந்தது இல்லை. பள்ளிப் படிப்பு முடிச்சு பச்சையப்பன் கல்லூரியில பி.ஏ. பட்டம் வாங்கினேன். 'இன்னும் படிக்கணும் இன்னும் படிக்கணும்’னு மனசு பரபரத்துக்கிட்டே இருக்கும். 1988-ல் வேலை பார்த்துக்கிட்டே பகுதி நேரமா சென்னை அம்பேத்கர் கல்லூரி யில் பி.ஜி.எல். சட்டப் படிப்பை படிச்சு பட் டம் வாங்கினேன். அதே வருஷம் எனக்குக் கல்யாணமும் நடந்துச்சு. 'மனைவி அமைவதெல் லாம் இறைவன் கொடுத்த வரம்’னு சொன்னது எனக்கு அப்படியே பொருந்தும். என் மனைவி செல்வகுமாரிதான் எனக்குத் துணையா நின்னாங்க.

லயோலாவில் பகுதி நேர எம்.பி.ஏ. படிச்சிக் கிட்டு இருக்கும்போது வேலைப் பளுவும், உயர் அதிகாரிகளின் நெருக்கடிகளும் படிப்புக்கு இடைஞ்சலா இருந்தது. படிப்பா, வேலையானு கேள்வி எழுந்தப்ப படிப்புதான் முக்கியம்னுமுடிவு பண்ணி நான் பார்த்துட்டு இருந்த அரசாங்கவேலை யையும் உதறினேன். 'இப்படியே படிச்சிக்கிட்டே இருந்தா, சாப்பாட்டுக்கு என்ன பண்றது?’னு தோணினப்ப வீட்டுலேயே டியூஷன் எடுக்க ஆரம்பிச்சேன். அந்த வருமானத்தில்தான் என் படிப்பு, குடும்பம், குழந்தைகளை கவனிச்சுட்டு இருந்தேன். இக்கட்டான சமயத்தில்கூட படிப்பை மட்டும் நிறுத்தவே இல்லை.

எனக்கு தியாகராஜன், உதயராணினு ரெண்டு பிள்ளைங்க. என் பேருக்கு பின்னால வளர்ந்துட்டு இருந்த பட்டம் மாதிரியே என் பிள்ளைங்களும் கண்ணு முன்னால வளர்ந்துக்கிட்டே இருந்தாங்க. என் பிள்ளைங்க யூனிவர்சிட்டி எக்ஸாமுக்குப் படிச்சிக்கிட்டு இருக்கும்போது நானும் அவங் களோட சேர்ந்து எக்ஸாமுக்குப் படிச்சிக்கிட்டு இருப்பேன். பசங்க களைப்புல தூங்கிட்டாலும் நான் மட்டும் விடிய விடியக் கண் விழிச்சு படிச்சுக்கிட்டும் எழுதிப் பார்த்துக்கிட்டும் இருப்பேன். இதுல என்ன காமெடினா பல பரீட்சைகள்ல என் பசங்களைவிட நான் அதிக மார்க் வாங்கி இருக்கேன். என் மனைவிகூட, 'நம்ம பசங்களுக்காகவாவது நீங்க ஜஸ்ட் பாஸ் ஆகி இருக்கலாம்’பாங்க. இதுவரைக்கும் கிட்டத் தட்ட 15 கல்லூரிகள்ல பகுதி நேரமாவும் மூணு கல்லூரிகள்ல முழு நேரமாவும் படிச்சு 101 பட் டங்களுக்கு மேல் வாங்கி இருக்கேன்.

டிகிரி... செஞ்சுரி!

சில சமயங்கள்ல ஒரே நேரத்துல ரெண்டு மூணு எக்ஸாம் வந்துடும். எல்லாத்துக்கும் படிச்சாலும் எந்த எக்ஸாம் ரொம்ப முக்கியமோ அதை மட்டும் எழுதுவேன். என்னோட இன்னொரு பெரிய பிளஸ் என் ஞாபக சக்தி. நீங்க இப்பக்கூட நான் படிச்ச பாடங்கள்ல இருந்து எந்தக் கேள்வி வேணும்னாலும் கேளுங்க, பதில் சொல்றேன். நான் படிச்சு முடிச்ச புத்தகங்களை வீட்லவெச்சிக்கிறது கிடையாது. ஏழை மாணவர்களுக்கு இலவசமாக் கொடுத்துடுவேன். அவங்களுக்கு இலவச டியூஷனும் எடுப்பேன். அதுல வர்ற ஆத்மதிருப்தி வேற எதுலயும் கிடையாதுங்க.

'இவன் இவ்ளோ படிச்சு என்னத்தைக் கிழிக் கப்போறான்?’னு பலபேர் என் காதுபடவே கிண்டலடிப்பாங்க. யாரையும் எந்தத் தொந்தர வும் பண்ணாம படிச்சுப் பட்டம் வாங்குறது ஒரு குத்தமாங்க? அதுக்காக நான் மனசுஉடைஞ் சது கிடையாது. இத்தனை டிகிரி, டிப்ளமோக்கள் வாங்கினது உலகத்தில் யாரும் பண்ணாத சாதனைதான். 'கின்னஸ் அவார்டுக்கு அப்ளை பண்ணு’னு நிறையப் பேர் சொன்னாங்க. அதுல எல்லாம் எனக்கு விருப்பம் இல்லை. ஆனா, மத்திய, மாநில அரசுகள் இந்தச் சாதனைக்காக விருதுகள் வழங்கினால், இத்தனை வருட உழைப்புக்கான அங்கீகாரமா ஏத்துப்பேன்.

என் வருமானம் எல்லாத்தையுமே படிப்புக் காகத்தான் செலவு செய்றேன். இவ்வளவு படிச் சும் இன்னமும் டி.வி.எஸ்.50-லதான் போய்ட்டு வந்துட்டு இருக்கேன். இந்த உலகத்துல கல்வியை விட உயர்ந்த செல்வம் வேற என்ன தம்பி இருக்கு சொல்லுங்க?'' என்றவர், ''உங்களுக்கு ஏதாவது பாடத்துல சந்தேகம்னா என்னைத் தயங்காமல் கேளுங்க'' என்று நீட்டிய விசிடிங் கார்டைப் பார்த்ததும் நமக்குத் தலை சுற்றியது. அவருடைய பெயருக்குப் பின்னால் 13 வரி

களில் நீள்கிறது பட்டங்கள்.

டிகிரி... செஞ்சுரி!

நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism