Published:Updated:

எம்.பி.பி.எஸ். படிக்காத எந்திரன்!

எம்.பி.பி.எஸ். படிக்காத எந்திரன்!

எம்.பி.பி.எஸ். படிக்காத எந்திரன்!

எம்.பி.பி.எஸ். படிக்காத எந்திரன்!

Published:Updated:

''இந்தியாவிலேயே முதல்முறையாக மனிதனுக்கு அனைத்து வகை அறுவை சிகிச்சைகளையும் செய்யும் ஸ்மார்ட் டெலெஸ்கோப் ரோபோவைக் (Smart Telescopic robot) கண்டுபிடித்தது நாங்கள்தான்!'' - நெஞ்சு நிமிர்த்திப் பேசுகின்றனர் வேல்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள்.

எம்.பி.பி.எஸ். படிக்காத எந்திரன்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கடந்த கால வாழ்வில் நாம் எதிர்கொண்ட  சிக்கல்கள் மற்றும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று சிந்திக்கும்போதுதான், புதியக் கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. இந்த எஸ்.டி. ரோபோவும் அப்படி உருவானதுதான். என் பெரியம்மாவுக்கு இரண்டு கிட்னிகளும் பாதிக்கப்பட்டு, கடைசியில் அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்குவந்துவிட்டது. எதிர்பாரா விதமாக இந்த அறுவை சிகிச்சை டாக்டர்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது.  18 மணி நேரம் தொடர்ந்து நடந்த இந்த அறுவை சிகிச்சை, இறுதியில் வெற்றிகரமாக முடிந்தது. அந்த 18 மணி நேரமும் மருத்துவமனையின் வார்டுக்கு வெளியில் நாங்கள் தவிப்புடன் காத்துக்கிடந்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ராமலிங்கம்,  'மனிதனே அறுவை சிகிச்சை செய்வதால்தான் காலதாமதம் ஏற்படுகிறது. வெளிநாடுகளில் தற்போது பெரும்பாலான அறுவை சிகிச்சைகள் ரோபோவின் உதவியுடன்தான் நடக்கின்றன.  நீங்கள் இன்ஜினீயரிங் பேராசிரியர்தானே,  முடிந்தால் விலை குறைவான, அதே சமயம்எல்லா விதமான அறுவை சிகிச்சைகளையும் செய்யும் ரோபோவைக் கண்டுபிடியுங்களேன்’ என்றார். அவருடைய எண்ணத்தை மாணவர்களிடம் சொன்னேன். அனைவரும் இணைந்து களத்தில் இறங்கினோம். ஒன்றரை வருட கடின உழைப்புக்கு இன்று பலன் கிடைத்து இருக்கிறது'' என்கிறார் பல்கலைக்கழகத்தின் எலெக்ட்ரிக்கல் துறைத் தலைவர் அருண்ராசா.

''இந்த கண்டுபிடிப்புப் பணியை எங்கு இருந்து தொடங்குவது எனக் குழம்பிக்கிடந்த சமயத்தில்தான் அமெரிக்காவில் உள்ள டாவின்சி   என்கிற அறுவை சிகிச்சை ரோபோவைப் பற்றித் தெரிந்துகொண்டோம். அதைப் பற்றி அக்கு வேறு ஆணிவேறாக முழுத் தகவல்களையும் திரட்டினோம். அப்போது, அதே மாதிரியான ரோபோவை நமக்கேற்ற வகையில் குறைவான விலையில் உருவாக்குவது பெரும் சவால் எனத் தோன்றியது. மேலும், நாம் படிப்பது மருத்துவம் அல்ல, பொறியியல். மருத்துவம் தொடர்பான அறுவை சிகிச்சை கருவிகள், முறைகள் பற்றி தெரிந்துகொள்ளாமல் இந்த ரோபோவைஎப்படி வடிவமைப்பது  போன்ற நிறையகேள்விகள் எழுந்தன'' என்ற மாணவர் தினகரனை இடை மறித்துத் தொடர்ந்தார் சரவணன்.

''அது ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் இல்லை என்பது போகப் போக எங்களுக்குப் புரிந்தது. கோவையில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்றில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யும் போது, அவர்களுடன் கூடவே இருப்பதற்கு சிறப்பு அனுமதி பெற்றோம். 50 வகையான அறுவை சிகிச்சைகளுக்கு மேல் பார்த்து,டாக்டர் களின் கை அசைவு, தேவையான கருவிகள், அவற்றின் பயன்பாடுகளைத் தெரிந்துகொண் டோம்.  'கொஞ்சம் விட்டா டாக்டராவேஆயிடு வீங்க போலிருக்கே?’ என்று கிண்டல் அடிக்க ஆரம்பித்துவிட்டனர் அங்கு இருந்த டாக்டர்கள்'' என்று சிரித்தவரின் தோள் தட்டித் தொடர்கிறார் பிரகாஷ்.

எம்.பி.பி.எஸ். படிக்காத எந்திரன்!

''அறுவை சிகிச்சைக்கான கருவிகளை ஒரு சின்ன வித்தியாசம்கூட இல்லாமல் கம்ப்யூட்டரில் டிசைன் செய்து தயாரித்தோம். இவை அனைத்துமே  நாங்களே உருவாக்கியவை.

எந்த ஓர் உதிரி பாகத்தையும் வெளிநாடுகளில் இருந்து வாங்கவில்லை என்பது இன்னொரு சிறப்பு.  இந்தப் பணிகளைச் செய்து முடிக்க கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆனது. பிறகு அனைத்தையும் அசெம்பிள் செய்ய ஒரு மாதம் ஆனது. இந்த ரோபோவை உருவாக்க ஆன செலவு வெறும் 15 லட்ச ரூபாய் மட்டுமே. வெளிநாடுகளில் இருந்து இத்தகைய ரோபோவை வாங்கினால் 5 கோடி ரூபாய் வரை செலவாகும். இதன்மூலம் குறைந்த கட்டணத்தில் கடினமான அறுவை சிகிச்சைகளைக்கூட எளிதாகச் செய்ய லாம். இது துல்லியமானது. சுலபமாகவும் இயக்க முடியும், நேரமும் குறைவு'' என்றார் சபரீஷ்.

''இந்த ரோபோவைச் சோதனை செய்த முறையைக் கேட்டால் சிரிப்பீர்கள். இதற்கு முன், மட்டன், சிக்கன் பீஸ்களைவைத்து வெட்டி அறுவை சிகிச்சை செய்துபார்த்தோம்.  ஒரு டாக்டர் எப்படி அறுவை சிகிச்சை செய்வாரோ அதே மாதிரி கச்சிதமாக இருந்தது. இந்தரோபோ குழந்தை, எதிர்காலத்தில் எப்படி எல்லாம்மாறப் போகிறது என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். அரசும் இந்த ரோபோவை சோதனைக்கு உட்படுத்தி பின் அரசு மருத்துவ மனைகளில் பயன்படுத்தினால் இந்த ரோபோ பல பேர் உயிர்களைக் காப்பாற்றும்'' என்கிறார் மாணவர் ஜாஃபர் சித்திக்.

எம்.பி.பி.எஸ். படிக்காத எந்திரன்!

நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: ஜெ.தான்யராஜு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism