Published:Updated:

வலையோசை : பினாத்தல்கள்

வலையோசை : பினாத்தல்கள்

வலையோசை : பினாத்தல்கள்

வலையோசை : பினாத்தல்கள்

Published:Updated:
வலையோசை : பினாத்தல்கள்

 கலைஞருக்கு ஓய்வு தேவையா?

வலையோசை : பினாத்தல்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ளம் வயதில் அரசியலில் அவர் எடுத்த பல முடிவுகள் அவரைப் புடம் போட்டு பல சாதனைகள் செய்யவைத்தன.  பெரிய பதவிகளைப் பார்த்தாகிவிட்டது. சிறை சென்று மீண்டாகிவிட்டது. இலக்கியத்தில், அதுவும் அவர் தேர்ந்தெடுத்த இலக்கியப் பிரிவில் அவரை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்ற அளவுக்குப் பல சாதனைகள் செய்துவிட்டார். இருந்தாலும் அவருக்கு இப்போது ஓய்வு தேவையே என்பது என் கருத்து. இனியும் அவர் அரசியல், இலக்கியம் என்ற இரட்டைக் குதிரைச் சவாரி செய்வது இரண்டு குதிரைகளுக்குமே கஷ்டமாகத்தான் அமையும். முக்கியமாக, அவர் இலக்கியத்தில் இருந்து ஓய்வுபெறுதல் அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட. எந்தக் கலைஞரைப் பற்றிப் பேசுகிறேன் என்று நினைக்கிறீர்கள்? பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மிக இளையவராக உள்ளே நுழைந்து, கன்ஸர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவி வரைக்கும் சென்று, பாலியல் வழக்கில் சிறை சென்று, மீண்டு வந்திருக்கும், பல பெஸ்ட் செல்லர்களை எழுதி, இலக்கியத்திலும் வலுவான இடத்தைப் பிடித்திருக்கும் ஜெஃப்ரி ஆர்ச்சர் என்னும் கலைஞரைப் பற்றிதான் பேசுகிறேன் என்பதில் சந்தேகம் இல்லையே?

ஜெஃப்ரி ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகமான 'ஃபால்ஸ் இம்ப்ரெஷனை’ப் படிக்கும் துர்ப்பாக்கியத்துக்கு நான் தள்ளப்பட்டேன். கொடுமையான 300 பக்கங்களுக்குப் பிறகு சுபம்! ஆக்ஷன் கதைகளில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது என்னவோ சரிதான். அதற்காக இப்படியா? 'மேட்டர் ஆஃப் ஹானர்’, 'ஷால் வீ டெல் தி பிரசென்ட்’ போன்ற நிஜமான ஆக்ஷன் கதைகளைக் கொடுத்த ஆர்ச்சரா இப்படி?

ஓய்வு தேவைதானே? நீங்களே சொல்லுங்கள்!

         எண்ணிச் செய்க கமிட்மென்ட்!

வலையோசை : பினாத்தல்கள்

ரலாற்று ஆசிரியர்கள், ஞாபக சக்தி கிராண்ட் மாஸ்டர்கள் என, இருக்கும் எல்லாருடைய ஞாபக சக்தியையும் சுலபமாக மிஞ்சும் ஒரு பெண்ணின் ஞாபக சக்தி. 'நம்ம கல்யாணம் முடிஞ்ச நாலாவது நாள், அன்னிக்குக் கூட நான் அந்த ஊதா கலர் சல்வார் போட்டு இருந்தேன். நீங்க சிவப்புல வெள்ளை ஸ்ட்ரைப்ஸ் டி-ஷர்ட் போட்டு இருந்தீங்க. நீங்க ஆபீஸ்லே இருந்து அரவிந்த் போனை அட்டென்ட் பண்ணிட்டு வந்தப்போ, நான் கேட்டேனே அந்த  ஹேண்ட் பேக். அப்ப ஒத்துக்கிட்டீங்களே, மறந்து போச்சா?' என்பது போன்ற கேள்விகளைத் தவிர்க்க ஒரே வழி, எதிலும் கமிட் ஆகாமல் இருப்பதுதான்.

எனவே, எண்ணிச் செய்க கமிட்மென்ட், எண்ணாதார் உண்ணும் உணவும் பனிஷ்மென்ட்!

          எங்கே மனிதம்!

வலையோசை : பினாத்தல்கள்

நான் பார்த்த வரையில், பீகார் ஒரு முரண்பாடுகளின் மூட்டை. வெள்ள நிவாரண நிதிக்கு, சம்பளத்தில் இருந்து

வலையோசை : பினாத்தல்கள்

100 பிடிப்பதை 'நான் ஏன் கொடுக்க வேண்டும்'' என எதிர்த்த ஒரு தொழிலாளி, ''நான் கண்டதைத் தின்று டி-ஹைட்ரேஷன் ஆகி ஆஸ்பத்திரியில் இருந்தபோது, மூன்று நாட்கள் கூட இருந்து பணிவிடை செய்தான். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் எல்லாம் சும்மா. பீகாரில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் பணிபுரியும் இன்ஜினீயர்களில் 90 சதவிகிதம் பேர் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளத்தில் இருந்து வந்தவர்கள். கடுமையான உழைப்பாளிகளில் 90 சதவிகிதம் பேர் பீகார்காரர்கள். இருப்பினும்கூட அந்த 10 சதவிகித பீகாரைச் சேர்ந்த இன்ஜினீயர்களை சாதியக் காரணங்களுக்காகத் தொழிலாளர்கள் மதிப்பதே இல்லை. பீகாரில் வெளி மாநிலத்தவருக்கு மரியாதையே தனிதான். எழுதப் படிக்கத் தெரியாதவன் ரயிலில் செல்லும்போது டிக்கெட் எடுத்துவிட, எல்லாம் படித்த மேதைகள் டிக்கெட் எடுக்க மாட்டார்கள். செக்கர் வந்தால் 'நான் ஸ்டூடன்ட்’, 'நான் இன்ஜினீயர்’ என்று காரணம் சொல்வார்கள். வாரம் ஒருமுறை ஏதாவது காரணம் சொல்லி வேலை நிறுத்தமும் சாலை மறியலும் செய்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஜீவ் கொலை செய்யப்பட்ட நேரத்தில், தமிழர்களுக்கு எதிராகப் புறப்பட்ட கும்பலை அடக்கிப் பிரச்னை பெரிதாகாமல் அடக்கியது. (நான் நாலு நாள் வீட்டைவிட்டு வெளியேறவில்லை!) வேலை செய்யும்போது அடிபட்ட ஒரு தொழிலாளிக்கு ரத்தம் கொடுக்க 100 பேர் முன்வந்தார்கள். ஆறு மாதம் கழித்து நடந்த மதக் கலவரத்தில் முன்பு அடிபட்ட தொழிலாளியின் மகனை... மாற்று மதம் என்ற ஒரே காரணத்துக்காக அதே தொழிலாளிகள் நடு சாலையில் வெட்டிப் போட்டார்கள்!

         புகைப் பிடிக்காதீர்கள்!

வலையோசை : பினாத்தல்கள்

நாட்டில் புகைப் பழக்கத்தைக் குறைக்க முதலில் செய்ய வேண்டிய வழி, விலையை அதிகப்படுத்த வேண்டியது. நான் முதல் சிகரெட் பிடித்தபோது வில்ஸ் ஃபில்டர்

வலையோசை : பினாத்தல்கள்

1 இன்று

வலையோசை : பினாத்தல்கள்

3.50. மூன்றரை மடங்கு மட்டுமே விலை அதிகரித்து இருக்கிறது. இதே காலகட்டத்தில் தங்கம் ஏறத்தாழ ஏழு பங்கும், மானியம் இல்லாத அரிசி எட்டு பங்கும் விலை ஏறி இருக்கிறது. ஒரு சிகரெட்டின் விலை, நியாயமாகப் பார்த்தால் இன்று

வலையோசை : பினாத்தல்கள்

12 ஆகி இருக்க வேண்டும். ஏன் ஏறவில்லை? இத்தனைக்கும் வருடா வருடம் புகையிலைப் பொருள்கள் மீது வரி ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. இங்கே வைத்திருக்க வேண்டும் முதல் ஆப்பை!

         சலூனுக்குப் போகாதீங்க!

வலையோசை : பினாத்தல்கள்

நேற்று முடிவெட்டிக்கொண்டு வந்தேன். மனைவி பார்த்தாள்; சிரித்தாள். சிரி சிரி... புதுசா என்ன? இதெல்லாம் நாங்க எவ்ளோ நாள் பாத்துக்கிட்டு இருக்கோம்!

'ரொம்ப மோசமா இருக்கா?'

'எப்பவும்போலதான். முடிவெட்டிக்கிட்டு வந்தா ஒரு வாரம் தனி அசிங்கமா இருக்கும் உங்க முகம்.''

'அப்புறம்?'

'வழக்கம்போல அசிங்கமா இருக்கும்!''

வலையோசை : பினாத்தல்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism