Published:Updated:

இது உயிரோவியம்!

இது உயிரோவியம்!

##~##

கானுயிர் புகைப்படக்காரர்களைத் தெரியும். திருவண்ணாமலையைச் சேர்ந்த குமாரைக் கானுயிர் ஓவியர் என்று சொல்லலாம். விலங்குகளும் பறவைகளும்தான் இவருடைய சித்திரங்களின் அடிப் படை. தன் குட்டியை வயிற்றோடு அணைத்து தாய் மைக் கதகதப்புக் கொடுக்கும் குரங்கு, சிகரங்களைத் தொட்டுவிடும் ஆசையில் உயரே உயரே சிறகு விரிக் கும் நாரை, சிலிர்த்து நிற்கும் முள்ளம்பன்றி என விலங் குகளும் பறவைகளும் இவருடைய ஓவியங்களில் உயிர்பெற்று வாழ்கின்றன.

 ''சின்ன வயசுல இருந்தே ஓவியம் வரையணும்கிற ஆசை இருந்துச்சு. ஆசை இருந்துச்சே தவிர ஆசான் யாரும் இல்லை. கற்றுக்கொடுக்க ஆள் இல்லாம நானே ஓவியம்னு ஏதாவது கிறுக்குவேன். ஆனா, பாராட்டுற துக்கும் யாரும் இல்லை. 9-ம் வகுப்பு படிக்கும்போது, செலவுக்குக் காசு கிடைக்கும்கிற ஆர்வத்துல லீவு நாட் களில், சுவர் விளம்பரம் வரையிற ஓவியர்களுக்கு எடுபிடி வேலை பார்க்கப்போவேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாப் படம் வரையக் கத்துக்கிட்டேன்.

இது உயிரோவியம்!

ஓவியத்துல இருந்த ஆர்வமும் அக்கறையும் படிப்புல இல்லை. 10-வதுல ஃபெயில் ஆயிட்டேன். 'ஏதாவது வேலைக்குப் போடா குமார்’னு வீட்டுல சொன்னாங்க. ஏதாவது ஒரு வேலைக்குப் போறதைவிட தெரிஞ்ச வேலைக்கே போகலாமேனு தோணுச்சு. அப்புறம் என்ன, சுவர் விளம்பரம் எழுதுற வேலைக் குப் போக ஆரம்பிச்சேன். பிரஷ் பிடிச்ச கொஞ்ச நாள்லேயே என் எழுத்தும்ஓவியங் களும் பல பேருக்குப் பிடிச்சுப்போச்சு. கட்சிக்காரங்க வேலை கொடுக்க ஆரம்பிச் சாங்க. கலைஞர், ஜெயலலிதா படங்களை சுவத்துல வரைய ஆரம்பிச்சேன். அப்ப டியே பேனர் எழுதறது, விளம்பரப்பலகை எழுதறதுனு பிஸி ஆயிட்டேன். என்ன தான் காசு கிடைச்சாலும் ஒரே முகங் களைத் திரும்பத் திரும்ப வரைய வேண்டி யிருந்தது சலிப்பாத்தான் இருந்துச்சு.

இது உயிரோவியம்!

அப்பதான் கலை இலக்கியப் பெருமன் றத் தோழர்களோட நட்பு கிடைச்சுது.தமிழ்நாடு முழுக்க, கலை இலக்கியப் பெருமன்றம் நடத்துற 'மக்கள் கலை விழா’க்களுக்காக ஓவியங்கள் வரையத் தொடங்கினேன். இதுக்காகப் பல ஊர்களுக்குப் போக ஆரம்பிச்சேன். கட்டடத் தொழிலாளர்கள், ஆட்டோக்காரர்கள், கிராமியக் கலைஞர்கள், அனுபவங்களைச்  முகத்தில் சுருக்கங்களா வெச்சிருக்கிற முதிய வர்கள்னு விதவிதமான மனிதர்களை வரை வேன். உண்மையான, எளிய மனிதர்களை வரையும்போது, அம்மணமா நின்னுச் சிரிக்கிற ஏழைக் குழந்தைகள் மாதிரி மனசு முழுக்கச் சந்தோஷம் இருக்கும். டிஜிட்டல் போர்டுகள் வர ஆரம்பிச்ச பிறகு சுவத்துல வரையறவேலை  குறைஞ்சுடுச்சு.

இந்த நேரத்துல உயிர்ச் சூழலியல் மையத் துல வைக்கிறதுக்காக, திருவண்ணாமலை மாவட்டத்துல இருக்கிற பறவைகள், விலங்கு களைப் படம் வரையுற வேலைக்குக் கூப்பிட் டாங்க. ஆரம்பத்துல போட்டோவுல இருக்கிற பறவைகளையும் விலங்குகளையும் அப்படியே நகல் எடுக்கிற மாதிரி வரைஞ்சேன். அதுக்குப் பிறகு சூழலியல் மையத்தைச் சேர்ந்தகோவிந்தா அண்ணனும் அருண் அண்ணனும் பறவைகள், விலங்குகளை எப்படிக் கவனிக்கணும் கண்கா

இது உயிரோவியம்!

ணிக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. அப் புறமாத்தான் திருவண்ணாமலையைச் சுற்றி இருக்கிற காட்டுல உள்ள விலங்குகளையும் ஏரி, குளங்களில் இருக்கிற பறவைகளை யும் கவனிச்சுட்டு வந்து அதைஅப்ப டியே ஓவியமா வரைய ஆரம்பிச் சேன். போட்டோவைப் பார்த்து வரையறதுக்கும் விலங்குகள், பறவைகளோட அசைவுகளையும் இயக்கத்தையும் பார்த்துட்டு வந்து படம் வரையறதுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு. பறவை மற்றும் விலங்குகளோட சரியான நிறம், மூக்கு அமைப்பு, நகத்தின் அமைப்பு, பறவைகள் அமரக்கூடிய மரம், விலங்கு கள் தங்கும் இடம்னு ஒவ்வொண்ணாப் பார்த்துப் பார்த்து வரையுறேன். இதுநாள் வரைக்கும் பார்த்த வேலையிலேயே இந்த வேலைதான் என் மனசுக்குப் பிடிச்சிருக்கு. இதுவரைக்கும் வரைந்த ஓவியங்களைப் பூங்காவில்தான் வெச்சிருக்கோம். அடுத்ததாக் கண்காட்சியில வைக்கிறதா இருக்கேன்'' என்கிறார் குமார்!

- காசி.வேம்பையன்

அடுத்த கட்டுரைக்கு