Published:Updated:

ஆளில்லா விமானம்... ஆளுயர ரோபோ!

கண்டாச்சி பசப்புகழ்

ஆளில்லா விமானம்... ஆளுயர ரோபோ!

கண்டாச்சி பசப்புகழ்

Published:Updated:
##~##

''சார் என் பேரு பாலாஜி. விழுப்புரம் பக்கத்துல உள்ள கண்டாச்சிபுரத்தில் இருந்து பேசுறேன். இந்திய ராணுவத்துக்கு எதிர்காலத்தில் தேவைப்படுற மாதிரியான ஃபிளைட், ரோபோ எல்லாம் செஞ்சிருக்கேன். நேர்ல வந்தா இதைப் பற்றி விளக்கமாப் பேசலாம்''- என்று நம்மைத் தொலைபேசியில் ஒரு குரல் அழைக்க, 'யாருப்பா இந்தக் கண்டாச்சிபுரம் பசப்புகழ்?’ என ஆர்வத்துடன் போனேன்.

 ''எங்க ஊர் எந்த ஒரு முன்னேற்றத்தையும் பார்க்காத கிராமம். அப்பா திருநாவுக்கரசு தச்சர். என்னோட ரோல் மாடல் அவர்தான். அப்பாமற்ற வங்களுக்கு மரப் பொம்மைகள் செஞ்சு கொடுப் பாரு. அதைப் பார்த்துதான் எனக்கும் புதுசுப் புதுசாச் செய்யணும்கிற ஆர்வம் உருவாச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பள்ளிக்கூடத்துல நிறைய அறிவியல் போட் டிகள்ல கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கி இருக் கேன். ப்ளஸ் டூ-வுல 952 மார்க் எடுத்தும் வீட் டுச் சூழ்நிலையால் அப்பாவால என்னை மேல படிக்கவைக்க முடியலை. 'அடுத்த வரு ஷம் என்ன கஷ்டப்பட்டாவது கண்டிப்பா உன்னை காலேஜுல சேர்த்துவிட்டுடறேன்’னு அப்பா சொன்னார். அந்த ஒரு வருஷம் சும்மா இருக்காம ஆசிரியர் பயிற்சி மாணவர் களுக்கு உதவினேன். பள்ளி மாணவர்களுக்கு ஈஸியாப் பாடம் சொல்லித் தர்ற மாதிரியான மாடல்களை உருவாக்கித்தந்தேன்.

ஆளில்லா விமானம்... ஆளுயர ரோபோ!

ஒரு வருஷம் கழிச்சு புதுச்சேரியில  இன்ஜினீ யரிங் சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். முதல் ஆண்டுல எனக்கு மின்னணுத் துறை மேல ஆர்வம் வந்துச்சு. அப்பதான் புதுசா ஒரு கருவியைச் செய்யுற முயற்சியில் இறங்கினேன். ஒரு குட்டி ஆளில்லா விமானம். அதில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். கீழே இருந்தபடியே அதை இயக்கலாம், மனிதர்களால் போக முடி யாத இடங்களுக்கு இந்த ஆள் இல்லாத விமா னத்தைப் பறக்கவிடலாம். முக்கியமா இந்திய ராணுவத்துக்கு இது ரொம்பப் பயன்படும். இந்த ஆட்டோமேட்டிக் ஃபிளைட் முயற்சி எனக்கு மிகப் பெரிய தோல்வியைத்தான் தந்தது. 30 ஆயிரம் ரூபாய் வரை இழந்ததுதான் மிச்சம். ஆனாலும் என்னோட ஆர்வத்தைப் பார்த்து கல்லூரி முதல்வர் என்னை ஊக்கப்படுத்தினார். அவரே பணம் கொடுத்து சென்னை எம்.ஐ.டி-யில் நடந்த அறிவியல் கருத்தரங்கத்திலேயும் கலந்துக்க வெச்சார். அந்தக் கருத்தரங்கம்தான் எனக்குள்ள ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துச்சு. மயில்சாமி அண்ணாதுரை போன்ற பெரிய விஞ்ஞானிகளை  அந்தக் கருத்தரங்கத்தில்தான் பார்க்கிற சந்தர்ப் பம் கிடைச்சுது.

ஆளில்லா விமானம்... ஆளுயர ரோபோ!

ஆரம்பத்துல செஞ்ச சின்னச் சின்ன தவறு களைத் திருத்தி ஃபிளைட்டை வெற்றிகரமாகப் பறக்கவிட்டேன். அடுத்ததா சில கண்டுபிடிப்புகள். இப்போ ஆள் உயர ரோபோவை உருவாக்கி இருக்கேன். இது நகரும். கதவைத் திறக்கறது மாதிரியான சின்னச் சின்ன வேலைகள் செய் யும். இன்னும் அட்வான்சா இந்த ரோபோவை மாற்றணும். கண்டிப்பா மாத்துறது மட்டும் இல் லாம, இன்னும் நிறையப் புதுசாச் செய்வேன்  சார்!'' என்கிறார்.

எவ்வளவோ செஞ்சுட்டீங்க. இன்னமும் செய்வீங்க!

- நா.இள அறவாழி, படங்கள்: ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism