Published:Updated:

தமிழில் எங்களுக்குப் பிடிக்காத வார்த்தை வரதட்சணை!

தமிழில் எங்களுக்குப் பிடிக்காத வார்த்தை வரதட்சணை!

தமிழில் எங்களுக்குப் பிடிக்காத வார்த்தை வரதட்சணை!

தமிழில் எங்களுக்குப் பிடிக்காத வார்த்தை வரதட்சணை!

Published:Updated:
##~##

''வரதட்சணை வில்லை வளைக்க
ராமன்கள் வரவில்லை 
      ராவணன்களாவது வருவார்களா?''

- என்ற கவிதையைப் படித்து இருப்போம். இதைப் படிக்கும்போது எல்லாம் துருப்பிடித்த ஜன்னல்களில் கன்னம் இழைத்துக் காத்து இருக் கும் முதிர்கன்னிகள் நம் நினைவுக்கு வந்துபோவார் கள். வரதட்சணைக் கொடுமையின் காரணமாகப் பெண் சிசுக்கொலை ஒருபுறம் என்றால், இன் னொருபுறம் பெண்கள் படிக்கப் படிக்க அவர் களுடைய சுதந்திரம் அதிகரிக்கும் என்ற நிலைக்கு மாறாக, வரதட்சணை அதிகரிக்கும் அவலம். ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இரு கிராமங்கள் வரதட்சணை என்கிற வார்த்தையையே உச்சரிக்க விரும்புவது இல்லை என்பது பாராட்டுக்கு உரிய ஆச்சர்யம்தானே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கிராமங்கள் துருகம் மற்றும் ஒண்ணுபுரம். இவைதான் தமிழ் நாட்டுக்கே முன் மாதிரியாக விளங்கும் வரதட் சணை இல்லாக் கிராமங்கள். ''கேள்விப்பட்டது உண்மைதானா?'' என்று  ஊராட் சித் தலைவர் பாலசுப்ரமணிய னைத் தொடர்புகொண்டு கேட் டால், ''அடுத்த வாரம் என் மக னுக்குத் திருமணம். அவசியம் வரணும். இதுவும் வரதட்சணை இல்லாத திருமணம் தான்'' என்று சர்ப்ரைஸ் சந்தோஷச் செய்தி சொன்னார்.

தமிழில் எங்களுக்குப் பிடிக்காத வார்த்தை வரதட்சணை!

''இந்தக் கல்யாணத்தில் மொத்த செலவும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களோடதுதான். 55 வருஷமா இந்த ஊர்லதான் இருக்கேன். எனக்குத் தெரிஞ்சு எங்க தாத்தா காலத்துல இருந்து வரதட்சணை வாங்கற பழக்கம் இல்லை. வரதட்சணை கேட்கறதை இந்த ஊரு ஆம்பளைங்க அசிங்கமா நினைக்கிறோம். 'வரதட்சணை கேட்கிறது ஆம்பளைக்கு அழகு இல்லை’ங்கிறது எங்க முன்னோர்கள் காலத்துல இருந்து வழிவழியா தொடரும் நம்பிக்கை. துருகம் கிராமம் மட்டும் இப்படி இல்லை. பக்கத்துல இருக்கிற ஒண்ணுபுரம் கிராமத்தி                          லும் அப்படித்தான். பெரும் பாலும் இந்த ரெண்டுஊர் களுக்கு இடையிலதான் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப் போம். ரெண்டு கிராமவாசிகளும் பெரும்பாலும் சொந்தக்காரர்கள்தான். சில கிராமங்களில் இருக்கிற மாதிரி பொம்பளைப் புள்ளைகளைப் படிக்கவைக்கிறதுக்கும் யோசிக்க மாட்டோம்.

தமிழில் எங்களுக்குப் பிடிக்காத வார்த்தை வரதட்சணை!

அதுமட்டும் இல்லாம இங்க இன்னும் ஒரு வழக்கமும் இருக்குது. எங்க ஊரை மொத்தம் அஞ்சு குழுவாப் பிரிச்சு இருக்கோம். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு எஜமான் இருப்பாரு. எல்லா ஊர்களிலும் ஊர்த் தலைவர்னு சொல்வாங்க இல்லையா, அது மாதிரி ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு எஜமான். எங்களுக்கு இப்போ எஜமான் பன்னீர் செல்வம். ஊர்ல ஒரு கல்யாணம்னா நாலு முதல் ஆறு பேரை எஜமான் தேர்ந்தெடுத்து நியமிப்பாரு. அவங்களை 'துரை’னு சொல்வோம். கல்யாணப் பந்தல்ல ஆரம்பிச்சு கல்யாணம் முடியும்வரைக்கும் இவங்கதான் முழு உதவியும் செய்யணும் இப்போ என் மகன் கல்யாணத்துக்குத் தேர்வு செய்யபட்ட நாலு துரைகள் சுப்பிரமணி, தாமோதரன், கோபி நாதன், திருநாவுக்கரசு. எங்க வீட்டுக் கல்யாணம் சீரும் சிறப்புமா நடக்கும்னா அதுக்குக் காரணம் இந்தத் துரைங்கதான்!'' என்று கை காட்டிச் சிரிக்கிறார்.

தமிழில் எங்களுக்குப் பிடிக்காத வார்த்தை வரதட்சணை!

''என் பெயர் கருணாநிதி. இவங்க என்னோட மனைவி பானுமதி. எங்களுக்குக் கல்யாணம் ஆகி 21 வருஷம் ஆகுது. இவங்களை கல்யாணம் பண்ணும்போது என் மாமா வரதட்சணை கொடுக்க முன்வந்தாரு. ஆனா நான் வாங்கலை. நாளைக்கு என் பொண்ணோட கல்யாணத்துக்கும் ஒத்த ரூபா கூட வரதட்சணை கொடுக்க மாட்டேன். பையன் கல்யாணத்துக்கு வரதட்சணை வாங்கவும் மாட்டேன்'' என்கிற கருணாநிதியை ஆமோதித்துச் சிரிக்கிறார் பானுமதி.

இந்த மாதிரி இரண்டு கிராமங்கள் போதுமே வரதட்சணை வில் வளைந்து ஒடியுமே.

ரா.ராபின் மார்லர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism