Published:Updated:

விபத்து களத்தில் என் விகடன்!

விபத்து களத்தில் என் விகடன்!

விபத்து களத்தில் என் விகடன்!

விபத்து களத்தில் என் விகடன்!

Published:Updated:

''சார், என் பேரு மகேந்திரன். ஊரு பழநி. டூரிஸ்ட் கார் டிரைவரா இருக்கேன். திண்டுக்கல் - பழநி சாலையில இருக் கிற கணக்கன்பட்டிகிட்ட ஒரு பெரிய வளைவு இருக்கு. அந்த இடத்துல அடிக்கடி விபத்து ஆகி நிறையப் பேர் இறந்துடறாங்க. ஒரு முறை என் கண் முன்னாடியே விபத்து நடந்து ரெண்டு பேரு இறந்துட்டாங்க. அந்த இடத்துல ஆக்சிடென்ட்டை குறைக்கிறதுக்கு ஏதாவது பண்ணுங்க சார்!'' என்று நமது வாய்ஸ் ஸ்நாபுக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றுவந்தது.

விபத்து களத்தில் என் விகடன்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் கவனத்துக்குப் பிரச்னையைக் கொண்டுசென்றோம். விஷயத்தைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர், உடனடியாகச் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டார். பின்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்த இடத்தில் நடந்த விபத்துகள் குறித்த தகவல்களையும் விசாரித்துத் தெரிந்துகொண்டார்.

பின்பு, துரிதகதியில் வேலை தொடங்கியது. சாலை ஓரமாக இருக்கும் அடர்ந்த மரங்களின் கிளைகள் சாலையை மறைத்துக்கொள்வதால், வாகன ஓட்டிகளுக்கு வளைவு தெளிவாகத் தெரியவில்லை. எனவே மரங்களில் இருந்த கிளைகளை வெட்டி அகற்றினார்கள். சாலையின் இரு பக்கமும் 'அபாயம்’ என, எச்சரிக்கும் விதமாக, சிவப்பு விளக்குகள் கொண்ட கம்பங் கள் அமைக்கப்பட்டன. மரங்களில் சிவப்பு நிற பிளாஸ்டிக் குடங்கள் கட்டித் தொங்க விடப்பட்டன. இரவில் தெரிவதற்காக அதனுள் விளக்குகள் பொருத்தப் பட்டன.

'அபாயகரமான வளைவு’ என, ரிஃப்ளெக்டர் ஸ்டிக்கர் எழுதப்பட்ட தடுப்புகள் இரண்டு பக்கமும் அமைக்கப்பட்டன. அத்துடன் அந்த இடத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த விபத்துகள், அதில் உயிரிழந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது.

விபத்து களத்தில் என் விகடன்!

நம்மிடம் பேசிய எஸ்.பி. ஜெயச்சந்திரன் ''கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த இடத்தில் நடந்த விபத்துக்களில் 38 நபர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். 90 பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். எதிர் காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு சில ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். விபத்தைத் தடுப்பதில் காவல் துறைக்கு உள்ள அக்கறை, வாகன ஓட்டுநர்களுக்கும் இருக்க வேண்டும். குடிபோதை யிலும் அதி வேகமாகவும் வாகனங்களை ஓட்டுவதை ஓட்டுநர்கள் தவிர்க்க வேண் டும்'' என்றார். கணக்கன்பட்டி பகுதியின் கவுன்சிலரும் வழக்கறிஞருமான வீரக்குமார், ''இந்த இடத்துல விபத்து நடக்கும்போது எல்லாம் இதுக்கு ஒரு விமோசனம் வரா தானு மனசு அடிச்சுக்கும். இப்ப எஸ்.பி. இதுக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தி இருக்கார். ரெண்டு, மூணு முறை நேர்ல வந்து ஊர் மக்கள்கிட்ட ஆலோசனை செய்து விபத் துத் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து இருக் காரு.  இனி விபத்துக்கள் நடக்காதுனு நம்புறோம். இதுக்குக் காரணமான என் விகடனுக்கு எங்க ஊர் சார்பா நன்றி!'' என்றார் நெகிழ்ச்சியாக.

விபத்து களத்தில் என் விகடன்!

நம் கோரிக்கையை ஏற்று உடனே விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்த எஸ்.பி-க்கு நாமும் ஒரு ராயல் சல்யூட் அடித்து நம் நன்றி யைத் தெரிவித்தோம்.

-ஆர்.குமரேசன்  
படங்கள்: சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism