Published:Updated:

பாரத ரத்னாவுக்கு தயான்சந்தின் பெயர் பரிந்துரை!

பாரத ரத்னாவுக்கு தயான்சந்தின் பெயர் பரிந்துரை!
பாரத ரத்னாவுக்கு தயான்சந்தின் பெயர் பரிந்துரை!
பாரத ரத்னாவுக்கு தயான்சந்தின் பெயர் பரிந்துரை!

புதுடெல்லி: இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு, மறைந்த ஹாக்கி ஜாம்பவான் தயான்சந்த்தின் பெயரை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இந்திய ஹாக்கிக்கு எண்ணற்ற சேவைகளை ஆற்றியுள்ள தயான்சந்த் 1928, 1932,1936 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற தேசிய அணியில் இடம்பிடித்தவர் ஆவார். கடந்த 1979ஆம் ஆண்டு தயான்சந்த் மறைந்தார்.


தயான்சந்தின் மகன் அஷோக் குமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி, ஆகியோர் அடங்கிய 6 பேர் கொண்ட குழு, கடந்த 12ஆம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங்கை சந்தித்து, பாரத ரத்னா விருதுக்கு தயான்சந்த்தின் பெயரை பரிசீலிக்குமாறு கோரிக்கையை முன் வைத்தனர்.

##~~##
இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு தயான்சந்த்தின் பெயரை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக பிரதமருக்கு, மத்திய விளையாட்டுத்துறை செயலர் பி.கே தேப் அனுப்பியுள்ள கடிதத்தில், தயான்சந்த் அல்லாது வேறு எந்த வீரரின் பெயரையும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.