Published:Updated:

வலையோசை : தத்துபித்துவங்கள்

வலையோசை : தத்துபித்துவங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வலையோசை : தத்துபித்துவங்கள்

புத்தாண்டில் மகிழ்ச்சியாக வாழ சில எளிய வழிகள்!

##~##

ப்படி மகிழ்ச்சியாக வாழ்வது? சில எளிய வழி முறைகள்!

# ஓய்வெடுப்பதற்காகவே வாழுங்கள்!

# உங்கள் படுக்கையை நேசியுங்கள்; அதுவே உங்கள் ஆலயம்!

# பகல் நேரத்தில் நன்றாக ஓய்வெடுங்கள்; அது இரவு நன்கு தூங்க உதவும்!

# பணி என்பது புனிதமானது; அதைத் தொடாதீர்கள்!

# எந்த வேலையையும் - மற்றவர்கள் செய்ய வாய்ப்புக் கொடுங்கள்.அதைக் கண்டு ரசியுங்கள்!

வலையோசை : தத்துபித்துவங்கள்

# எந்த வேலையையும் நாளை செய்யலாம் என எண்ணாதீர்கள்; ஏனெனில், அதை நாளை மறுநாள் கூடச் செய்யலாம்!

# கவலையே வேண்டாம். சும்மா இருந்தால் யாரும் இறப்பது இல்லை. மாறாக, வேலை செய்யும்போது உங்களுக்கு ஏதாவது ஊறு நேரலாம்!  

# வேலை செய்ய வேண்டும் என்ற நினைப்பு வந்தால், சிறிது அமருங்கள்; பொறுத்திருங்கள். அந்த நினைப்பு அகன்றுவிடும்!

# மறவாதீர்கள். வேலை செய்வது ஆரோக்கியம் தரும். எனவே அதை உடல் நலம் இல்லாதவர்கள் செய்யட்டும். அவர்கள் ஆரோக்கியமடைவார்கள்!

இந்தப் புத்தாண்டில் மகிழ்ச்சியாக வாழுங்கள்!

       ஒரு மேய்ப்பரும் கணக்கு ஆய்வாளரும்!

ரு மேய்ப்பன் ஊருக்கு வெளியே தன் ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தான். அப்போது அவன் அருகில் ஒரு பெரிய மகிழ்வுந்து  வந்து நின்றது. அதில் இருந்து மிக விலை மதிப்பு உள்ள ஆடைகள் அணிந்த ஒருவர் இறங்கினார். ஆட்டு மந்தையை ஒரு பார்வை பார்த்தார்.

பின், மேய்ப்பனைப் பார்த்துக் கேட்டார், ''உன் மந்தையில் மொத்தம் எத்தனை ஆடுகள் இருக்கின்றன என்று நான் சரியாகச் சொன் னால், உன் ஆடுகளில் ஒன்றை எனக்குக் கொடுப்பாயா?'

அவனும் சம்மதித்தான்.

வலையோசை : தத்துபித்துவங்கள்

அந்த மனிதர் இணைய இணைப்பு உள்ள தன் மடிக் கணினியை எடுத்து, நாசாவின் ஓர் இணையதளத்தின் மூலம், அந்த இடத்தை ஆராய்ந்து, கணினியில் சில கணக்குகளைப் போட்டுவிட்டு அவனிடம் சொன்னார் ''உன் மந்தையில் சரியாக 368 ஆடுகள் இருக்கின்றன!'

மேய்ப்பன் ஒப்புக்கொண்டு, அவரை ஆடு ஒன்றை எடுத்துக்கொள்ளச் சொல்ல, அவரும் எடுத்துக்கொண்டார்.

இப்போது மேய்ப்பன் கேட்டான், ''நான் உங்கள் தொழில் என்ன என்று சொன்னால், நீங்கள் எடுத்துக்கொண்டதைத் திரும்பக் கொடுத்துவிடுவீர்களா?'

அவர் ஒப்புக்கொண்டார்.

அவன் சொன்னான், ''நீங்கள் ஒரு கணக்கு ஆய்வாளர் (ஆடிட்டர்).'

அவர் ஆச்சர்யத்துடன் கேட்டார், ''எப்படிச் சொன்னாய்?'

மேய்ப்பன் சொன்னான், ''மிக எளிது. முதலில் தேவையின்றி நீங்க ளாகவே என்னிடம் வந்தீர்கள். அடுத்து, எனக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயத்தைச் சொல்வதற்குக் கட்டணம் பெற்றுக்கொண்டீர்கள். மூன்றாவதாக, உங்களுக்கு என் தொழில் பற்றி எதுவும் தெரியாது! தயவுசெய்து என் நாயைத் திரும்பக் கொடுக்கிறீர்களா?''

வலையோசை : தத்துபித்துவங்கள்

நான் பணத்திடம் சொன்னேன், ''நீ என்ன வெறும் காகிதம் தானே?''

அது சிரித்தது. பின் சொன்னது, ''உண்மைதான். ஆனால், எனக்கான குப்பைத் தொட்டி எதுவுமே இல்லை!''

             அங்கிள்! இது லேடீஸ் டாய்லெட்!

து நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.

வலையோசை : தத்துபித்துவங்கள்

கிண்டி ரேஸ் கிளப்பில், என் நண்பர் ஒருவர் உறுப்பினர். ஒருநாள் மாலையில் அவர் என்னையும் சேர்த்துச் சில நண்பர்களை அங்கு அழைத்துச் சென்றார். எல்லோரும் உணவருந்திக்கொண்டு இருந்தபோது, நடுவில் பாத்ரூம் போக விரும்பினேன். வெயிட்டரைக் கேட்டபோது, அங்கு அருகில் இருந்த டாய்லெட்டைக் காட்டினார். சென்றேன். உள்ளே முதலில் கை கழுவும் இடம். அதை அடுத்து ஒரு கதவுக்குப் பின் டாய்லெட். நான் முடித்துவிட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தால் வாஷ் பேசின் முன் நின்று கண்ணாடியைப் பார்த்துத் தன் ஒப்பனையைச் சரி செய்துகொண்டு இருந்தாள் ஒரு பெண். இளம் பெண் அல்ல; பேரிளம்பெண். நான் திடுக்கிட்டேன். ஆனால், அந்தப் பெண் எந்தப் பதற்றமும் இன்றி என்னைப் பார்த்துச் சொன்னாள், ''அங்கிள்! இது லேடீஸ் டாய்லெட்'. நான் நொந்துபோனேன். தவறாக லேடீஸ் டாய்லெட்டுக்கு வந்து மாட்டிக்கொண்டதற்கு அல்ல; ஒரு பேரிளம்பெண் என்னைப் பார்த்து 'அங்கிள்’ என்று அழைத்துவிட்டாளே என்று!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு