Published:Updated:

ஓர் ஆச்சர்ய ஆசிரியர்!

ஓர் ஆச்சர்ய ஆசிரியர்!

##~##

'நான் நாட்டின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்ததை விட, ஓர் ஆசிரியராகப்  பணியாற்றியதையே பெருமையாகக் கருதுகிறேன்’ - முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் வார்த்தைகள் இவை. இப்படிப்பட்ட பெருமைக்குரிய பணியான ஆசிரியப் பணியில் உள்ள முருகேசன், ஊருக்கே முன்மாதிரி ஆசிரியராக இருக்கிறார். ஓசூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பணிபுரியும் இவர், இளம் வயதிலேயே அம்மை நோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வையை இழந்தவர். இருந் தாலும் மனம் தளராது எம்.எட்., எம்.ஃபில்., வரை படித்தார். தற்போது முனைவர் பட்டம் பெறுவதற்காக முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்.  

 கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றும் இவர், இதுவரை ஒருநாள்கூட விடுமுறை எடுத்தது இல்லை. காலை 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கும் என்றால் 8 மணிக்கே ஆஜராகிவிடுகிறார். இதில் இன்னோர் ஆச்சர்யம் என்ன தெரியுமா? இவருடையவீட்டுக்கும் பள்ளிக்கும் இடையேயான தொலைவு 60 கி.மீ!

ஓர் ஆச்சர்ய ஆசிரியர்!

''பாலக்கோடு பக்கத்தில் இருக்கிற கொண்டசாமனஹள்ளிதான் என் சொந்த ஊர். வறுமையான குடும்பம், மூணு வயசுலயே அம்மை என் கண்ணை தின்னுடுச்சு. இருந்தாலும் உழைச்சு முன்னுக்கு வரணும்னு ஆசைப்பட்டேன்.  ஸ்கூலுக்குப் போகும்போது, ஊர்ல எல்லாரும் கிண்டல் பண்ணினாங்க. அந்தக் கிண்டல்தான் சாதிக்கணும்கிற உந்துதலை உண்டாக்குச்சு.

ஓர் ஆச்சர்ய ஆசிரியர்!

எம்.எட்., எம்.ஃபில்.  வரை படிச்சேன். எனக்கு கிருஷ்ணகிரி கன்கார்டியா பள்ளியும் அரசும் பொருளாதாரரீதியா நிறைய உதவிகள் செஞ்சாங்க. அவங்க உதவிகளும் எனக்கு வாய்த்த ஆசிரியர் களின் உதவிகளும் இல்லைன்னா நான் இந்தளவுக்கு முன்னேறி இருக்க மாட்டேன். அதனால்தான், படிச்சு முடிச்சு ஆசிரியர் ஆகி என்னைப்போல இயலாத நிலையில் இருப்பவங்களுக்கு உதவணும்னு முடிவு எடுத்தேன்.

நான் ஆசைப்பட்ட மாதிரியே எனக்கு ஆசிரியர் வேலை கிடைச்சுது. இந்த 12 வருஷமா என்னோட பணியை எந்தக் குறையும் இல்லாம செய்துட்டு வர்றேன். ஆசிரியர்கள்தான் மாணவர்களோட முதல் முன்மாதிரி. ஆசிரியர்கள் விடுமுறை போடாம வந்தால்தான் மாணவர்களும் விடுப்பு எடுக்காம பள்ளிக்கு வருவாங்க. எனக்கு விடுமுறை எடுக்க வேண்டிய கட்டாயச் சூழல்கள் நிறைய வந்திருக்கு. ஆனா, எந்தச் சூழ்நிலையிலும் நான் என் பணியை புறக்கணி

ஓர் ஆச்சர்ய ஆசிரியர்!

த்தது இல்லை. காரணம், நான் என்னோட பணியை நேசிக்கிறேன்'' என்று கனிவோடு பேசுகிறார் முருகேசன்.

இவரைப் பற்றி சக ஆசிரியர் சாய்லட்சுமி, ''இவரோட வகுப்புல மொத்தம் 150 மாணவர்கள் இருக்காங்க. பொதுவா நல்லாப் படிக்கிற மாணவர்களை மட்டும் ஆசிரியர்கள் தட்டிக்கொடுப்பாங்க. ஆனா, இவர் முதல் ரேங்க் மாணவனில் தொடங்கி கடைசி ரேங்க் மாணவன் வரை எல்லாரையும் தட்டிக்கொடுத்து ஊக்கம் தருவார். நல்லாப் படிக்காத மாணவன்கூட இவரோட அன்பான அணுகுமுறையால படிக்க ஆரம்பிச்சிடுவான். படிப்பு மட்டுமில்லாம மாணவர்களுடைய பிற திறமைகளையும் ஊக்குவிப்பார். எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் உடனே பிரமாதமாப் பேசும் திறமைகொண்டவர். இவர் எங்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைச்ச கிஃப்ட்'' என்கிறார் பெருமையுடன்!

கு.சக்திவேல், படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

அடுத்த கட்டுரைக்கு